சென்னை மேயர் பிரியாவுக்கு அம்மா கொடுத்தனுப்பும் லஞ்ச் பாக்ஸ்! ஹோட்டல் உணவுகளுக்கு நோ!
சென்னை: சென்னை மேயர் பிரியா ராஜனுக்கு இன்னுமே அவரது அம்மா தான் வீட்டிலிருந்து ரிப்பன் மாளிகைக்கு லஞ்ச் பாக்ஸ் கொடுத்து அனுப்புகிறார்.
பள்ளி -கல்லூரி நாட்களில் எப்படி வீட்டிலிருந்து லஞ்ச் பாக்ஸ் எடுத்துச் செல்வாரோ அதேபோல் தான் மேயராகிய பிறகும் வீட்டிலிருந்து லஞ்ச் பாக்ஸ் எடுத்துச் செல்கிறார் பிரியா ராஜன். சில நாட்கள் ஆய்வுப்பணிகளுக்காக காலையில் சீக்கிரமே புறப்பட வேண்டியிருந்தால், மதியம் ரிப்பன் மாளிகைக்கு சாப்பாடு வந்துசேர்ந்துவிடும்.

சென்னை மேயர் பிரியா ராஜனை பொறுத்தவரை ஹோட்டல் உணவுகளை முற்றிலும் தவிர்க்கக் கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. நினைத்தால் தினமும் வகை வகையாக தினம் ஒரு ஹோட்டலில் மதிய உணவு வாங்கிவரச் சொல்லி சாப்பிட முடியும். ஆனால் அது போல் செய்யாமல் இன்னுமே பள்ளி மாணவி போல் வீட்டிலிருந்து தான் லஞ்ச் பாக்ஸ் எடுத்து வந்து சாப்பிடுகிறார்.
பல நேரங்களில் காலை உணவு சாப்பிடக் கூட நேரமில்லாமல் ஆய்வு மற்றும் அலுவல் பணிகளில் பிஸியாக இருந்துவிடுகிறார் பிரியா ராஜன். தமிழகத்தின் முக்கிய மாநகராட்சி மேயர்கள் சர்ச்சைகளில் சிக்கியது போல் இல்லாமல் இதுவரை எந்த சர்ச்சைகளிலும் சிக்காமல் மாநகராட்சி நிர்வாகத்தை வழி நடத்திச் செல்கிறார்.

பொதுவாக அரசியல்வாதிகளை பொறுத்தவரை அது ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்துச் சென்று சாப்பிடுவது என்பது அரிய நிகழ்வு தான். ஆனால் இந்த விவகாரத்தில் சென்னை மேயர் பிரியா ராஜன் விதி விலக்கு என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications