சமூகநீதி மண்ணில்.. மூடநம்பிக்கை கருத்தா? திமுக மாணவர் அணி கூட்டத்தில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்
சென்னை: சென்னை அசோக் நகர் அரசு பள்ளியில், பகுத்தறிவுக்கு முரணாக, அறிவியலுக்கு எதிராக பேச்சாளர் ஒருவர் சில கருத்துக்களை பேசியிருந்தார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், சாதி, மத வெறுப்புணர்வை மாணவர்களிடம் விதைக்க வேண்டாம் என திமுக மாணவர் அணி கூட்டத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
சென்னை அசோக் நகரில் உள்ள, அரசு பெண்கள் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் தன்னம்பிக்கை பேச்சாளர் சிறப்புரையாற்றியிருந்தார். ஆனால், அவர் பேசிய விஷயங்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

அவர் அறிவியலுக்கும், கல்விக்கும் புறம்பாகவும், மாணவர்களின் சுய சிந்தனையை மழுங்கடிக்கும் வகையிலும், மனிதர்களின் பிறப்பை முன்ஜென்ம பாவத்தின் அடையாளமாகவும், மாணவிகளிடையே மதரீதியாகவும் சொற்பொழிவு என்கிற பெயரில் விசமத்தனமான கருத்துக்களை பரப்பியுள்ளார் என்று குற்றச்சாட்டு எழுந்தது.
ஏழைகள், மாற்றுத்திறனாளிகளை முன் ஜென்ம பாவத்தின் பலன் என அவர் பேசியபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாற்றுத்திறனாளி ஆசிரியரையும் மகாவிஷ்ணு என்கிற அந்த நபர், அந்த ஆசிரியரை இழிவுப்படுத்தும் வகையில் அறிவற்றவர் எனவும் பேசியுள்ளார். தொடர்ந்து அவர் கால், கை இழந்து, கண் பார்வையற்றவர்களாக பிறப்பதற்கு பாவங்கள்தான் காரணம் என சிறிதும் மனசாட்சியே இல்லாமல் ஒருவரது இயலாமையை பேசியுள்ளார்.
இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், ஒரு அரசுப் பள்ளியில், கல்விக்கு சம்மந்தம் இல்லாத ஒரு நிகழ்ச்சியை நடத்த அனுமதி அளித்தது யார்? அரசு பள்ளிகள் தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படுகின்றதா? கடந்த சில ஆண்டுகளாக தமிழக பள்ளிக்கல்வித்துறை தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகின்றது. விவாதமாகி, ஊடக வெளிச்சம் பெற்ற பிறகே தமிழக பள்ளிக் கல்வித்துறை மறுப்போ அல்லது தடை உத்தரவோ பிறப்பிக்கப்படுவதை காண முடிகின்றது என்று பல்வேறு அரசியல் கட்சிகள் விமர்சனத்தை எழுப்பியிருந்தன.
இதனையடுத்து சம்பவம் தொடர்பாக பள்ளி கல்வித்துறை அதிரடி விசாரணையில் இறங்கியது. எந்த பள்ளியில் மூட நம்பிக்கை கருத்துக்கள் விதைக்கப்பட்டதோ, அதே பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு நடத்தினார். மட்டுமல்லாது தேர்வுக்கான மற்றொரு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், விஷம கருத்துக்களை கூறிய மகாவிஷ்ணுவை எதிர்த்து கேள்வி எழுப்பிய, மாற்று திறனாளி ஆசியர் கவுரவிக்கப்பட்டார்.
மறுபுறம் பள்ளிக்கல்வித்துறையின் விசாரணையின் அடிப்படையில், பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதேபோல சாதிய, மத ஆதிக்க கருத்துக்களுக்கு எதிராக திமுக மாணவர் அணி கூட்டத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
அதாவது, “கல்வியினுடைய குறிக்கோள் என்பது அறிவை வளர்க்க, நமது இழிவையும் முட்டாள்தனத்தையும் மூடநம்பிகையையும் ஒழிக்க என்பதாக இருக்க வேண்டும்" என்ற தந்தை பெரியாரின் கொள்கை வழிநின்று கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களையும், சட்டங்களையும் நிறைவேற்றும் அரசாக பேரறிஞர் அண்ணா அவர்களின் ஆட்சி காலம் தொடங்கி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சி காலத்தில் கட்டமைக்கப்பட்டு, இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களின் ஆட்சி காலம் வரை தொடர்கிறது.
அண்மைகாலமாக ஆன்மீகத்தின் பெயரால் மாணவர்கள் மத்தியில் பரப்பப்படும் சாதிய, மதவாத உணர்வுகளை முறியடித்து, இளைய தலைமுறையினரை அரசியல் சட்டம் வலியுறுத்தும் அறிவியல் தேடலோடு கூடிய (Scientific Temper) அறிவார்ந்த சமுதாயமாக கட்டமைத்திடவும், பகுத்தறிவுக் கொள்கைகளை மாணவர்கள் மத்தியில் விதைத்து பெரியார், அண்ணா, கலைஞர் காணவிரும்பிய சமத்துவ சமுதாயத்தை நிறுவிடவும், தி.மு.க மாணவரணி கல்வி நிலையங்களில் அமைக்க இருக்கும் 'தமிழ்நாடு மாணவர் மன்றம் உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்று தனித் தீர்மானம் நிறைவேற்றம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications