Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹிட் லிஸ்டில் இருந்த அதிகாரி.. சுற்றிவளைத்த ஐடி டீம்.. வசமாக மாட்டிக்கிட்டாரே.. கருப்பு ஆடு யாரு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீபத்தில் முக்கியமான அதிகாரி ஒருவரை வருமான வரித்துறை அதிகாரிகள் பிடித்து விசாரித்து உள்ளனர். ஏர்போர்ட்டுக்கு வந்த வருமானவரித்துறை அதிகாரிகள், அந்த அதிகாரியை மடக்கிப் பிடித்து, தீவிரமாக விசாரணை நடத்தியிருக்கிறார்கள். தமிழக அதிகாரியை மத்திய அரசு அதிகாரி எதற்காக மடக்கி விசாரிக்க வேண்டும்? பறிமுதல் செய்யப்பட்ட அந்த பணம் யாருடையது ? ப்ளாக் மணியா? கணக்கில் காட்டப்பட்ட பணமா? என்று தீவிரமான விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அப்படி என்ன நடந்தது.. வாருங்கள் பார்க்கலாம்!

சென்னையிலிருந்து வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்லும் சில சந்தேகிக்கும் தலைவர்கள் மற்றும் நெருக்கமானவர்களைத் தொடர்ச்சியாக சென்னை ஏர்போர்ட்டில் மத்திய வருமானவரித் துறையும், மத்திய வருவாய் புலனாய்வுத் துறையும் கண்காணித்து வருகிறது. அடிக்கடி இப்படி சோதனைகள் நடக்கின்றன.

income tax tamil nadu

இதற்காக வருமானவரித் துறையும், மத்திய வருவாய் புலனாய்வுத் துறையும் ஹாட் லிஸ்ட் ஒன்றை வைத்துள்ளது. இந்த லிஸ்ட் அடிப்படையில்தான் அதிகாரிகளிடம் சோதனைகள் நடத்தப்படுகின்றன. அவர்கள் தரும் விபரங்களை வைத்து அவ்வப்போது விசாரணைகளும் செய்யப்படுகின்றன. அடிக்கடி டெல்லிக்கு இது போல புகார்கள் செல்வதாகவும் கூறப்படுகிறது. சிலர் வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் பணம் கொண்டு செல்வதாக புகார்கள் உள்ளது .

தனி நபர்கள் பணம் கொண்டு செல்வது என்பது தனி. அதே சமயம் அரசு அதிகாரிகள் பணம் கொண்டு செல்வது என்பது தனி. அரசு அதிகாரிகள் கையில் பணம், அதிக அளவில் பொருள் கொண்டு சென்றால் கணக்கு காட்ட வேண்டும்.

அதேபோல அதிகாரிகளும் கண்காணிக்கப்படுகிறார்கள். சமீபத்தில் முக்கியமான அதிகாரி ஒருவரை வருமான வரித்துறை அதிகாரிகள் பிடித்து விசாரித்து உள்ளனர். ஏர்போர்ட்டுக்கு வந்த வருமானவரித்துறை அதிகாரிகள், அந்த அதிகாரியை மடக்கிப் பிடித்து, தீவிரமாக விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.

என்ன நடந்தது?: கடந்த 25-ந்தேதி சென்னையிலிருந்து டெல்லிக்கு செல்வதற்காக சென்னை ஏர்போர்ட்டுக்கு வந்திருந்தார் தமிழக தொழிலாளர் நல உதவி ஆணையர் அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரி. அவரும் அந்த ஹாட் லிஸ்டில் இருந்தவராம்.

இவரைப் பற்றி சில புகார்கள் வருமானவரித்துறைக்கு சொல்லப்பட்டதால், அந்த அதிகாரியை வருமானவரித்துறை கண்காணித்தபடி இருந்துள்ளது. டெல்லி செல்ல அவர் ஏர்போர்ட் செல்வதை அறிந்து ஏர்போர்ட்டுக்கு வந்த வருமானவரித்துறை அதிகாரிகள், அந்த அதிகாரியை மடக்கிப் பிடித்து, தீவிரமாக விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.

அப்போது, அவரிடமிருந்து 37 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர் வருமானவரித்துறையினர். பிறகு அவரை விடுவித்து விட்டனர். தமிழக அதிகாரியை மத்திய அரசு அதிகாரி எதற்காக மடக்கி விசாரிக்க வேண்டும்? பறிமுதல் செய்யப்பட்ட அந்த பணம் யாருடையது ? ப்ளாக் மணியா? கணக்கில் காட்டப்பட்ட பணமா? என்பதில் ஏகப்பட்ட மர்மம் இருக்கிறது என்று சென்னை விமான நிலைய வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, அந்த தமிழக அதிகாரியை எதற்காக மத்திய அரசு அதிகாரிகள் விடுவித்தனர்? அவரிடம் தவறில்லை எனில் கைப்பற்றப்பட்ட பணத்தை ஏன் திருப்பித் தரவில்லை? என்கிற கேள்விகளுடன் விபரமறிந்த தமிழக அதிகாரிகள் தரப்பில் விவாதிக்கப்படுகிறது. இந்த விவகாரம் விரைவில் பூதாகரமாகலாம் என்றும் சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+