அந்தரங்க போட்டோ, வீடியோ சாட்.. திருமணமான பெண்ணுடன் பிரபல காவல் அதிகாரி தகாத உறவு.. கணவர் புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருக்கழுக்குன்றம் காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் முனிசேகருக்கு எதிராக சென்னையை சேர்ந்த அஷ்ரப் அன்சாரி என்பவர் தமிழக காவல் துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். தனது மனைவியுடன் முனிசேகர் தகாத உறவில் ஈடுட்டதாக அஷ்ரப் அன்சாரி புகார் அளித்துள்ளார்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அஷ்ரப் அன்சாரி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன் திருக்கழுக்குன்றம் காவல் ஆணையர் முனிசேகருக்கு எதிராக தமிழக காவல் துறை இயக்குனர் உட்பட உயர் அதிகாரிகளுக்கு இணையம் வழியாக புகார் அளித்தார்.

அந்த புகாரில், எனது மனைவியுடன் முனிசேகர் திருமணத்தை தாண்டிய தகாத உறவில் ஈடுப்பட்டு வருகிறார். இந்த பிரச்சனை காரணமாக எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக முனிசேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

கோரிக்கை

கோரிக்கை

அன்சாரி அளித்த புகாரின்படி, அன்சாரிக்கும் அவரின் மனைவிக்கும் கடந்த 2012ல் திருமணம் நடந்துள்ளது. இவர்கள் சந்தோசமாக வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் சென்னையில் வண்ணாரப்பேட்டை அருகே வசித்து வந்துள்ளனர். தம்பதிக்கு இரண்டு குழந்தை உள்ளது. இந்த நிலையில்தான் அன்சாரியின் மனைவி திருக்குன்றத்தில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு அவ்வப்போது சென்று வந்துள்ளார்.

 மாற்றம்

மாற்றம்

அக்கா வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பிய போதெல்லாம் மனைவியின் நடத்தையில் மாற்றம் இருந்ததை அன்சாரி கவனித்து உள்ளார். குடும்ப உறவில் நாட்டம் இன்றி அன்சாரி மனைவி இருந்துள்ளார். திருக்கழுக்குன்றம் சென்றுவிட்டு வந்த போதெல்லாம் அன்சாரியின் மனைவி அவருடன் சண்டை போட்டுள்ளார். குழந்தைகளை சரியாக கவனித்துக்கொள்ளமால் வித்தியாசமாக நடந்து கொண்டு இருக்கிறார். இதனால் மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த அன்சாரி மனைவியின் போனை சோதனை செய்துள்ளார்.

கோபம்

கோபம்

அந்த போனில் போலீஸ் அதிகாரி முனிசேகரின் நிர்வாண வீடியோக்கள், ஆபாச படங்கள் இருந்ததை அன்சாரி கண்டுபிடித்துள்ளார். அதோடு வாட்ஸ் ஆப்பில் இருவரும் வீடியோ சாட் செய்து இருந்ததையும், பாலியல் ரீதியாக சாட் இருந்ததையும் கண்டுபிடித்துள்ளார். கேலரியில் நிறைய ஆபாச புகைப்படங்களும் இருந்துள்ளன. இதையடுத்து தனது மனைவியிடம் காவல் அதிகாரி முனிசேகர் குறித்து அன்சாரி விசாரித்து உள்ளார். ஆனால் அவரின் மனைவி எதுவும் சொல்லாமல் அன்சாரியுடன் சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு கிளம்பிவிட்டார்.

அன்சாரி மனைவி

அன்சாரி மனைவி

இப்போது அன்சாரியின் மனைவி தனது அக்கா வீட்டில் திருக்குன்றத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில்தான் தனது மனைவியுடன் காவல் அதிகாரி முனிசேகர் தகாத உறவில் இருந்ததாக அன்சாரி போலீஸ் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். தனது மனைவியுடன் முனிசேகர் தகாத உறவில் இருந்தார். இதை பற்றி விசாரித்த காரணத்தால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனது உயிருக்கோ, எனது குழந்தைகள், பெற்றோர்கள் உயிருக்கோ ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு காவல் அதிகாரி முனிசேகரும் எனது மனைவியும்தான் காரணம் என்று அன்சாரி புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

முனிசேகர்

முனிசேகர்

காவல் அதிகாரி ஒருவருக்கு எதிராக உயர் அதிகாரிகளுக்கு சென்றுள்ள இந்த புகார் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் அனுப்பி 15 நாட்களை நெருங்கும் நிலையில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. காவல் அதிகாரி முனிசேகர் ஏற்கனவே சக காவல் அதிகாரியை சுட்ட வழக்கில் சிக்கியவர் ஆவார். சென்னை கொளத்தூரில் நகைக்கடையில் மாடியில் துளைபோட்டு கொள்ளையடித்த ராஜஸ்தான் மாநில கொள்ளையர்களை பிடிக்க ஆய்வாளர் பெரிய பாண்டி உட்பட போலீசார் குழு ராஜஸ்தான் சென்றது. அப்போது பெரிய பாண்டி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

யார் சுட்டது

யார் சுட்டது

விசாரணையில் பெரிய பாண்டியை சக காவல் அதிகாரி முனிசேகர்தான் சுட்டார் என்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் போலீசார் நடத்திய விசாரணையில் இருளில் தெரியாமல் சுட்டு விட்டதாக கூறி முனிசேகர் மன்னிப்பு கேட்டார். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின் டிரான்ஸ்பர் செய்யப்பட்ட முனிசேகர் சில காலம் தென் சரகத்தில் பணியாற்றினார். பின்னர் தேர்தல் நேரத்தில் திருக்கழுக்குன்றத்திற்கு மாற்றல் ஆன முனிசேகர் தற்போது மீண்டும் தகாத உறவு சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+