எண்ணூரில் பால் வாங்க சென்ற போது.. மின்சாரம் பாய்ந்து பழைய இரும்பு வியாபாரி பலி
சென்னை: சென்னை எண்ணூரில் பால் கடைக்கு சென்ற பழைய இரும்பு வியாபாரி மின்சாரம் பாய்ந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
சென்னை எண்ணூர், சத்தியவாணி முத்து நகர், 12வது தெரு தெருவைச் சேர்ந்தவர் செல்வின் (50). பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார். இன்று காலை முதல் நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருக்கும்.

இந்நிலையில் விடியற்காலை தூங்கி எழுந்த செல்வின் சீக்கிரமாக சென்று பால் வாங்கி வர வேண்டும் என்பதற்காக தாழங்குப்பத்தில் உள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார் . பால் கடைக்கு அருகாமையில் சென்றபோது அங்கு தேங்கியிருந்த தண்ணீரில் கால் வைத்ததால் செல்வின் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
இதை பார்த்த பால் கடை நடத்தி வரும் தாழங்குகுப்பம், அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மாதவன்(48) என்பவர் ஓடிவந்து அவரை காப்பாற்ற முயன்ற போது அவருக்கும் மின் தாக்குதல் ஏற்பட்டு அவரும் தூக்கி வீசப்பட்டார். இதை பார்த்த பொதுமக்கள் அவர்கள் அருகில் செல்லாமல் உடனடியாக எண்ணூர் மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த எண்ணூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பார்த்தபோது செல்வின் அந்த இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. மாதவன் மயங்கிய நிலையில் இருந்தார். இதையடுத்து அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த செல்வின் உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து எண்ணூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அது போல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு பெண் மின்னல் தாக்கியதில் இறந்தார்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications