சென்னையில் வாடகை வீட்டில் வசித்தவர்.. ஒரே நாளில் 18 லட்சம் சம்பாத்தியம்.. லீஸ் வீடு பார்ப்போர் உஷார்
சென்னை: சென்னையை பொறுத்தவரை யார் வீட்டின் உரிமையாளர், யார் வாடகைக்கு குடியிருப்பவர் என்பதை அறியாமல் வீட்டிற்கு அட்வான்ஸ் கொடுத்தால், அந்த பணம் திரும்ப வராது, வீடும் கிடைக்காது. சிலர் உரிமையாளர் போல் நடித்து வாடகை வீட்டை குத்தகைக்கு விட்டு சம்பாதிப்பதும் நடக்கிறது. சற்று கவனமாக இல்லாவிட்டால் உங்கள் வாழ்நாள் சேமிப்பு சில நிமிடங்களில் உங்கள் கையை விட்டு போய்விடும். சென்னையில் உரிமையாளர் போல் நடித்து வாடகை வீட்டை குத்தகைக்கு விட்டு ரூ.18 லட்சம் சுருட்டிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் சொந்த வீடு வாங்குவது என்பது இங்கு வசிக்கும் கோடிக்கணக்கான மக்களின் கனவாக உள்ளது. ஆனால் எதார்த்தம் என்னவென்றால், கோடிகளை கொட்டினாலும், சொந்த வீடு சென்னை நகருக்குள் வாங்கிவிட முடியாது. ஏனெனில் விலை விண்ணை முட்டும் அளவிற்கு போய்விட்டது. முக்கிய ஏரியாக்களில் அப்பார்ட்மெண்டுகளே கோடிகளை தாண்டி விற்பனையாகிறது.

சென்னையில் தனி வீடு விலை
சென்னையின் புறநகர் பகுதிகளில் கூட 50 லட்சம் என்கிற அளவில் அடுக்குமாடி வீடுகள் விற்பனையாகின்றன. தனி வீடுகள் எல்லாம் வேண்டும் என்றால் சென்னையில் இருந்து 40 கிமீ தூரம் தள்ளி வர வேண்டும் அதுதான் இப்போதைய நிலையாக உள்ளது. அதுவே 40 முதல் 50 லட்சம் வரை இருக்கிறது. இதனால் சாமானிய மக்கள் வாடகை வீட்டில் வசித்தாலே போதும் அல்லது முடிந்தால் குத்தகை வீட்டில் வசிக்கலாம் என்று நினைக்கிறார்கள்.
சேமிக்க முடியாத நிலை
ஏனெனில் பொருளாதாரம் அந்த அளவிற்கு பலவீனமாக இருக்கிறது. கணவன், மனைவி இரண்டு பேர் சேர்ந்து வேலை செய்தால் கூட சேமிக்க முடியாத அளவிற்கு பள்ளி கட்டணம், வீட்டு வாடகை, மளிகை செலவு, போக்குவரத்து செலவுகள், மருத்துவ செலவுகள் உள்ளன. இப்படியான சூழலில் வாயை கட்டி, வயிற்றை கட்டி, நகையை அடகு வைத்து சேர்த்த பணத்தில் குத்தகைக்கு வீடு பார்த்தால், அதையும் மோசடி செய்பவர்கள் அதிகம் சுற்றுகிறார்கள்
வாடகைக்கு எடுக்கும் நபர்
சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த 52 வயதாகும் முகமது ரிஸ்வான் என்பவர், புரசைவாக்கம் பண்டாரம் தெருவில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளாக அந்த வீட்டில் வசித்த அவர், அந்த வீட்டை தன்னுடைய வீடு என்றும், அதை குத்தகைக்கு விடப்போவதாகவும் வீட்டு தரகர்களிடம் தெரிவித்தார்.
18 லட்சம் குத்தகை
சென்னை சேத்துப்பட்டை சேர்ந்த தரகர் ஒருவர், கவுசர் ஜஹான் என்பவரை அழைத்துவந்து முகமது ரிஸ்வானிடம் அறிமுகம் செய்தாராம். அவரும் குறிப்பிட்ட வீட்டை ரூ.18 லட்சம் கொடுத்து குத்தகைக்கு வாங்கியிருக்கிறார். பின்னர் அந்த வீட்டில் அவர் குடியேறினார். ஆனால் அந்த வீட்டின் உண்மையான உரிமையாளர் பெயர் முசாமில் அன்சார் என்பது பின்னாளில் தெரியவந்தது.
மோசடி நாடகம்
அவர் சமீபத்தில் தன்னுடைய வீட்டை பார்க்க வந்தார். அப்போது வீட்டில் வாடகைக்கு இருந்த முகமது ரிஸ்வானை காணவில்லை என்று கூறப்படுகிறது. குத்தகைக்கு எடுத்த கவுசர் ஜஹான் குடியிருந்தார். இதை பார்த்து வீட்டின் உரிமையாளர் முசாமில் அன்சார் கடும் அதிர்ச்சி அடைந்தார். முகமது ரிஸ்வானின் மோசடி நாடகம் வெளிச்சத்திற்கு வந்தது.
ஏற்கனவே கைவரிசை
முகமது ரிஸ்வான் இதேபோல் புரசைவாக்கம் பகுதியில் வீடுகளை வாடகைக்கு எடுத்து பின்னர் தனது சொந்தவீடு என்று ஏமாற்றி குத்தகைக்கு விட்டு பெரிய அளவில் பண மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குத்தகைதாரர் கவுசர் ஜஹான் வேப்பேரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மோசடி நபர் முகமது ரிஸ்வானை கைது செய்தனர். சேத்துப்பட்டை சேர்ந்த தரகரையும் போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
சென்னையில் லீசுக்கு வீடு பார்ப்போர் கவனிக்க வேண்டியவை
சென்னையில் லீசுக்கு வீடு பார்ப்போர், அந்த வீட்டின் உரிமையாளர் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். மின் கட்டண பில் யார் பெயரில் வருகிறதோ, அவர்கள் தான் உரிமையாளர் ஆக இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே கவனமாக விசாரிக்க வேண்டும். அக்கம் பக்கம் வீட்டின் உரிமையாளர்களிடம் ரகசியமாக விசாரித்தால் உரிமையாளர் யார், சிக்கல் என்ன என்பதை அறிய வேண்டும். லீசு தொகையை திரும்ப தருவாரா, ஏமாற்றும் நபரா என்பதையும் உறுதி செய்யுங்கள். தவறான நபரிடம் சிக்கி ஏமாற வேண்டாம்
-
சிஸ்டமே மாறப்போகுது.. சென்னையின் போக்குவரத்தையே தடம் தெரியாமல் மாற்ற போகும்.. தங்கமான பிளான் -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு












Click it and Unblock the Notifications