அடுத்த பிராது-பெரியாரை கொச்சைப்படுத்தி பேசினார் இயக்குநர் பா.ரஞ்சித்? கொந்தளிக்கும் பெரியாரிஸ்டுகள்!
சென்னை: நட்சத்திரம் நகர்கிறது திரைப்பட விழாவில் தந்தை பெரியாரை கொச்சைப்படுத்தும் வகையில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசியதாக பெரியார் ஆதரவாளர்கள் கொந்தளித்துள்ளனர்.
இயக்குநர் பா.ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் விரைவில் வெளியாகிறது. இந்தத் திரைப்பட நிகழ்ச்சியில்தான் நாத்திகம், பெரியார் குறித்து பா.ரஞ்சித் பேசினார். ஆனால் பா.ரஞ்சித் தந்தை பெரியாரை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியிருக்கிறார்; இதனை அனைவரும் கண்டிக்க வேண்டும் என்கிறார் மூத்த பெரியாரிஸ்டான காட்டாறு குழுவின் அதி அசுரன்.

இது தொடர்பாக அதி அசுரன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: பெரியார் நாத்திகத்தைப் பேசினர். கடவுள் மறுப்பைப் பேசினார். ஆனால் , இந்து மத வாழ்க்கை முறைக்கு எதிராக ஒரு மாற்றுப் பண்பாட்டை, மாற்று வாழ்வியலை முன்வைக்கவில்லை" என்று தோழர் பா.இரஞ்சித் பேசியுள்ளார். 31 ஆம் தேதி வெளியாக உள்ள அவரது படத்தின் ப்ரமோஷனுக்காக பெரியாரைக் கொச்சைப்படுத்துவது கடும் கண்டனத்துக்குரிய, சமூகப் பொறுப்பற்ற பேச்சாகும்.
பெரியாரை வெறும் நாத்திகர் என முத்திரை குத்துவதே பெரும் தவறு. "நாத்திகம்" என்பதைப் பெரியார் கண்டுபிடித்துப் பேசவில்லை. புத்தரும் நாத்திகத்தைக் கண்டுபிடிக்கவில்லை. புத்தருக்கும் முன்பே இங்கு நாத்திகம் பேசப்பட்டுள்ளது.
ஜாதி ஒழிப்பு, பெண்விடுதலையை அடிப்படையாகக் கொண்ட "பெரியாரிய நாத்திகம்" என்று தனியாக ஒரு நாத்திகப் பிரிவை ஒரு மக்கள்திரள் அமைப்பாகக் கட்டியவர் பெரியார். அதை ஒரு வாழ்வியலாக வடிவமைத்து, தனது காலத்திலேயே பல்லாயிரம் தோழர்களின் வாழ்விலேயே செயல்படுத்தியும் காட்டியவர் பெரியார்.

இந்து பார்ப்பன, பார்ப்பனிய வாழ்வியலுக்கு கடும் நெருக்கடியைக் கொடுக்கும் "பெரியாரிய நாத்திக வாழ்வியலை இன்றைய பெரியாரிஸ்ட்டுகள் எவரும் பின்பற்றவில்லை" என்றோ, "பெரியாரிய நாத்திக வாழ்வியல் வெகுமக்களுக்குப் பயன்படவில்லை" என்றோ தோழர் இரஞ்சித் பேசியிருந்தால், அது ஒரு நல்ல விவாதத்தைத் தொடங்கியிருக்கும்.
ஆனால் பெரியார் ஒரு மாற்று வாழ்வியலை உருவாக்கவே இல்லை என்று பேசியது அவரது அறியாமை அல்ல, திட்டமிட்ட அவதூறு.
பதிலுக்கு புத்தரையும், அம்பேத்கரையும் யாராவது சிலர் விமர்சனம் செய்வார்கள். அதை வைத்து "பெரியார் VS அம்பேத்கர்" என்ற பிரிவினைப் போக்கை வலுப்படுத்த வேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருக்கும் என எண்ணுகிறேன். அனைவரும் அவரது உரையைக் கண்டிக்க வேண்டும். இவ்வாறு பெரியாரிஸ்ட் அதி அசுரன் எழுதி உள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications