நடிகர் விஜய் கட்சி கொடியில் இருப்பது தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்த தேசிய மரமான வாகையின் மலர்!
சென்னை: நடிகர் விஜய் தமது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்திய நிமிடம் முதல் ஏகப்பட்ட விமர்சனங்கள், சர்ச்சைகள்தான். விஜய் கட்சி கொடியில் யானை சின்னம் இடம் பெற்றதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தை நாடி இருக்கிறது பகுஜன் சமாஜ் கட்சி. தற்போது நடிகர் விஜய்யின் கட்சிக் கொடியில் இடம் பெற்றிருப்பது சங்க இலக்கியங்களில் இடம் பெற்றிருந்த வெற்றிக்கான வாகைப் பூ, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் தமிழீழத்தின் தேசிய மரமாக அறிவிக்கப்பட்ட வாகை மரத்தின் பூ என்கின்றனர் ஈழத் தமிழர்கள்.
நடிகர் விஜய், திரைத்துறையில் கோலோச்சிக் கொண்டிருக்கும் நிலையிலேயே அரசியலில் கால் பதித்துவிட்டார். 2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு ஆட்சி அமைத்து, தமிழ்நாட்டை சிறப்பாக்குவதுதான் தமது லட்சியம் என்கிறார் நடிகர் விஜய்.

நடிகர் விஜய் தமது தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடி, பாடல் ஆகியவற்றை இன்று வெளியிட்டார். இந்த கட்சிக் கொடி அறிமுகப்படுத்தப்பட்ட நிமிடம் முதலே சர்ச்சைகள்.. சர்ச்சைகள்தான். விஜய் கட்சிக் கொடியில் இடம் பெற்றிருக்கிற யானைகள் பெவிக்கால் விளம்பரத்தின் காப்பிதான் என்றும் கேரளா அரசின் இலச்சினையின் காப்பி என்று இன்னொரு தரப்பும் விமர்சிக்கின்றன. இது போதாது என ஸ்பெயின் நாட்டு கொடியை உருமாற்றிவிட்டார் விஜய் என மீம்ஸ் இன்னொரு பக்கம்.
இதன் அடுத்த கட்டமாக தேசியக் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி, விஜய் கட்சி கொடியில் யானை சின்னம் இடம் பெற எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமாக யானை சின்னம் பல ஆண்டுகளாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் திடீரென கட்சி ஆரம்பித்த விஜய் தனது கொடியில் யானை சின்னத்தை எப்படி பயன்படுத்தலாம்? என தேர்தல் ஆணையத்தின் கதவுகளை தமிழ்நாடு பாஜக தட்டி இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் விஜய் கொடியில் இரு போர்க்கள யானைகளுக்கு நடுவே இருக்கும் வாகை மலர் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. தமிழ் சங்க இலக்கியங்களில் வாகை மலர் என்பது வெற்றிக்கான பூவாகும். இதுதான் நடிகர் விஜய் தமது கட்சிக் கொடியில் வைத்திருக்கிறார் எனக் கூறப்பட்டது.
மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிர்வாக ஆட்சியில் வாகை மரம்தான் தமிழீழத்தின் தேசிய மரமாக இருந்தது. அந்த வாகை மரத்தின் பூவையே நடிகர் விஜய் தமது கட்சிக் கொடியில் வைத்திருப்பதாக ஈழத் தமிழர்களும் சுட்டிக்காட்டினர்.
ஆனால் தாவரவியல் வல்லுநர்களோ, நடிகர் விஜய் கட்சியில் இடம் பெற்றிருப்பது சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் வாகை மலர் அல்ல. அதன் தாவரவியல் பெயர் INDIAN SIRIS. சரி நடிகர் விஜய் கட்சியில் இருக்கிற வாகை பூ என்ன வகையைச் சேர்ந்தது? தூங்கு மூஞ்சி வாகைப் பூ எனப்படும் MONKEY POO TREE FLOWR வகையைச் சேர்ந்ததாம். எப்படி எல்லாம் சர்ச்சை வெடிக்கிறது மக்களே!
-
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications