மது பழக்கம் தாழ்த்தப்பட்ட மக்களிடம்தான் அதிகம்.. டிவி விவாதத்தில் பாஜக பிரமுகர் பேச்சால் சர்ச்சை!
சென்னை: மது பழக்கம் என்பது தாழ்த்தப்பட்ட மக்களிடம்தான் அதிகம் என டிவி விவாதத்தில் பாஜக பிரமுகர் ஜி.கே.நாகராஜ் தெரிவித்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
சன் நியூஸ் தொலைக்காட்சியின் கேள்வி களம் விவாத நிகழ்ச்சியில் பாஜக பிரமுகர் ஜிகே நாகராஜ் கூறியதாவது: சமூக நீதி கவலைப்படுகிற அரசு, மதுவால் அதிகமாக பாதிக்கப்படுவது மக்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் குறிப்பாக பட்டியல் இன மக்கள். அதைப் பற்றி கவலை கொண்டிருக்கிறதா? என் கேள்வி. இவ்வாறு ஜி.நாகராஜ் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட சன் செய்தி ஆசிரியரும் நெறியாளருமான மு.குணசேகரன், நீங்க கொச்சைப்படுத்துறீங்க.. ஒரு சமூகத்தை கொச்சைப்படுத்துறீங்க.. தமிழ்நாட்டில் எல்லா ஜாதிக்காரங்களும்தான் குடிக்கிறாங்க. குடிக்காத ஜாதின்னு எதாச்சும் இருக்கா? நீங்க ஒரு சமூகத்தை கொச்சைப்படுத்துறீங்க என்றார்
இதற்கு பதிலளித்த பாஜகவின் ஜிகே நாகராஜன், நீங்க தயவு செய்து பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளில் போய் பாருங்க.. நான் போய் பார்த்திருக்கிறேன். யாருடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுதுன்னு போய் பாருங்க என்றார்.
அண்ணன் .@GunasekaranMu அவர்களின் instant, clear, strong rebuttal ❤️🔥🖤
— Social Justice:சமூகநீதி (@Sathyantweets) November 14, 2023
டேட்டா இருக்கா? குடிக்காத ஜாதின்னு ஏதும் இருக்கா? உயர் சாதில குடிக்கலயா? BC MBC-ல குடிக்கலயா? நீங்க பிறந்த சாதில குடிக்கலயா? pic.twitter.com/xEUFAa6OOH
இதனை நிராகரித்த நெறியாளர் குணசேகரன், நீங்க சொல்றதுக்கு எதாவது பட்டியல் இருக்கிறதா? டேட்டா இருக்கிறதா? உயர்ஜாதியினர் குடிக்கலையா? எம்பிசி குடிக்கலையா? மற்ற ஜாதிகள் குடிக்கலையா? நீங்க பிறந்த ஜாதியிலோ அல்லது நான் பிறந்ததாக சொல்லப்படுகிற ஒரு ஜாதியிலோ யாரும் குடிக்கலையா? ஒரு குறிப்பிட்ட ஜாதியினர்தான் குடிக்கிறாங்கன்னு எப்படி சொல்றீங்கன்னு எனக்கு புரியலை என்றார்.
இந்த விவாதம் தற்போது சமூக வலைதளங்களிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான பாஜக பிரமுகர் ஜிகே நாகராஜின் இந்த கருத்து இடம் பெற்ற கேள்வி களம் வீடியோ, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பேசுபொருளாகி இருப்பதால் சர்ச்சையாகி இருக்கிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!











Click it and Unblock the Notifications