காலையில ஒரு வீடு.. சாயங்காலம் ஒரு வீடு.. வானதி சீனிவாசன் பேச்சால் கொந்தளித்த திமுக- போலீசில் புகார்!
சென்னை: திமுக எம்.எல்.ஏக்கள், கவுன்சிலர்கள் குறித்து பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் ஆபாசமாக பேசியதாக பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. வானதி சீனிவாசனின் ஆபாச பேச்சுக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. பேசியதாவது: திராவிட முன்னேற்ற கழகத்தோட எம்.எல்.ஏ, கவுன்சிலரா இருந்தா அவரு ஒரு வீட்டுல இருக்க மாட்டாரு. திராவிட முன்னேற்றக் கழகத்துல ஒரு பண்பாடு வெச்சிருக்காங்க. அவங்க காலையில் ஒரு வீட்டுல இருப்பாங்க- சாயங்காலம் ஒரு வீட்டுல இருப்பாங்க. திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஜீன் அது. இவ்வாறு வானதி சீனிவாசன் பேசினார்.
வானதி சீனிவாசனின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளங்களில் திமுகவினர் கடுமையான பதில் கொடுத்து வருகின்றனர். வானதி சீனிவாசனின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்களும் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் திமுக வழக்கறிஞர்கள் அணியினர் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் நேற்று இரவு வானதி சீனிவாசன் மீது புகார் கொடுத்தனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள், கவுன்சிலர்களை அவமதிக்கும் வகையில், அவர்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய வானதி சீனிவாசன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கோவை மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதியிலும் திமுக நிர்வாகிகள் இன்று வானதி சீனிவாசனுக்கு எதிராக போலீசில் புகார் தரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் திமுகவின் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆபாசமாக பேசிய பேச்சுக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் பாஜகவை சேர்ந்த நடிகையுமான குஷ்பு கடும் கொந்தளிப்பை காட்டினார். திமுகவும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்தது. சென்னை போலீசார் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு ஒரு நியாயம்? வானதி சீனிவாசனுக்கு ஒரு நியாயமா? என்ற பதிவுகளும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல்












Click it and Unblock the Notifications