சர்ச்சையில் இயக்குநர் சேரன்! ஹனுமன் அயோத்திக்கு விமானத்தில் போனது தொடர்பாக அப்படி ஒரு 'ட்வீட்'!
சென்னை: அயோத்தி விமான சேவை தொடக்க நிகழ்ச்சியில் ஹனுமன் போல வேடமணிந்தவர் பங்கேற்றது தொடர்பாக திரைப்பட இயக்குநர் நடிகர் சேரன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தது சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்த பதிவுகளை இயக்குநர் சேரன் எக்ஸ் பக்கத்தில் முழுமையாக நீக்கிவிட்டார்.
திரைப்படங்களில் பேசப்படாத சமூக சிக்கல்களை பேசுவதால் பேசுபொருளானவர் இயக்குநர் சேரன். பின்னர் தாமே நடிகராகவும் அவதாரம் எடுத்தார். இயக்குநர் சேரன் நவீன தொழில்நுட்பத்தை திரை துறையில் சேர்ப்பதற்கு இன்றைய ஓடிடி தளத்துக்கு முன்னோட்டமான நகர்வுகளை மேற்கொண்டவர்.

தற்போது Soniy Live-ல் சேரன் இயக்கிய Journey வெப் சீரிஸ் பெரும் பாராட்டுகளைக் குவித்து வருகிறது. சிக்கலான 5 கதா பாத்திரங்களை உருவாக்கி அவர்களை மையமாக வைத்து இந்த வெப்சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று இயக்குநர் சேரன் தமது எக்ஸ் பக்கத்தில், அயோத்தி விமான சேவை தொடக்க நிகழ்ச்சியில் ராமர், சீதை, ஹனுமன் பங்கேற்ற செய்தியை பகிர்ந்து அதில் " If Hanuman is there why took flight ?.. Paranthey vanthirukkalamey moonu pera thpokkittu.." என பதிவிட்டிருந்தார். ஹனுமன் எதற்கு பிளைட்டில் போகனும்? அவரு 3 பேரையும் தூக்கிகிட்டு பறந்தே வந்திருக்கலாமே என்கிற இயக்குநரின் சேரன் இந்த ட்வீட் இப்போது சமூக வலைதளங்களில் ரணகளமாகிவிட்டது. இயக்குநர் சேரனின் இந்த கருத்துக்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு கடுமையான சொற்களால் விமர்சித்தனர் இந்துத்துவா ஆதரவாளர்கள்.

இதனைத் தொடர்ந்து "Hei... Its fun man... Don't rake is series... Jolly ya paarunga..." இதை ஜாலியாக பாருங்க.. சீரியசா எடுத்துக்காதீங்க..வேடிக்கைதான் இது எனவும் சேரன் பதிலளித்திருந்தார்.
தற்போது 2 ட்வீட்டுகளும் எக்ஸ் பக்கத்தில் பார்க்க முடியவில்லை; ஆனால் இயக்குநர் சேரன் ஹோம்பேஜில் இவை இடம் பெற்றிருந்தன. தற்போது சர்ச்சைக்குரிய அனைத்தும் இயக்குநர் சேரனின் எக்ஸ் பக்கத்தில் இருந்து முழுமையாகவே நீக்கப்பட்டுவிட்டன.
அடுத்த பஞ்சாயத்து ரெடி போல?
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications