டெல்லி அனுப்பும் 'பெரும் படை'.. அலேக்காக அமுக்குதாம்..உஷாராக மந்திராலோசனையில் 'திமுக' டாப் பேமிலி!
சென்னை: தமிழ்நாடு மட்டுமல்ல நாட்டின் பல பகுதிகளில் வருமான வரித்துறை, அடுத்ததாக அமலாக்கத்துறை பல்வேறு அதிரடி சோதனைகளை நடத்தி வருகிறது. சட்டத்துக்குப் புறம்பாக சம்பாதித்து சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்த அத்தனை தலைகளையும் வரிசை கட்டி வேட்டுவிட்டுக் கொண்டிருக்கிறது டெல்லியின் இந்த பட்டாளம்.
தமிழ்நாட்டில் விடிந்து எழுந்தால் எந்த விஐபி வீடு இன்று? என்பதுதான் அதிகாலை டீ கடைகளின் பேச்சாக இருக்கிறது. இத்தகைய விஐபி வீடுகளில் சிக்கும் தொகைகள், ஏமாற்றிய மோசடி விவரங்கள் குறித்த அமலாக்கத்துறையின் அதிகாரப்பூர்வமான செய்தி அறிக்கைகளில் இடம் பெறும் தகவல்களே அத்தனை பேரையும் கிறுகிறுக்க வைத்துக் கொண்டிருக்கிறது. 50, 100க்கு அல்லோல்படும் மக்களுக்கு 10,000 கிடைக்காதா? 1 லட்சம் ரூபாய் 3 வட்டிக்காவது கிடைக்காத என முட்டி மோதுகிற 'ஏழைகள்' தேசத்தில் இப்படியான ரெய்டுகள் அதிரவைக்கத்தான் செய்யும்.

டெல்லி பட்டாளத்தின் வேட்டைகளில் அரசியல் லாபங்கள் எதுவும் இல்லாமல் இல்லை. ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஒவ்வொரு கணக்கு போட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. குவித்து வைத்த கட்சிகள், பறிபோகாமல் இருக்க பதுஷாக பேரம் பேசும்; அதிகாரம் வைத்திருக்கும் கட்சிகள் அடங்கி இருக்க சொல்ல படையை ஏவும்.. இதுவெல்லாம் ஜனநாயக சக்கரத்தில் அச்சாணிகளைப் போல பிரிக்க முடியாதது.
தமிழ்நாட்டில் இப்படியான அதிரடி சோதனைகள் அடுத்தடுத்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதில் செந்தில் பாலாஜி மட்டும் சிறைக்குப் போயிருக்கிறார். இப்போதைய டெல்லி படை பட்டாளத்தின் டார்கெட்டில் திமுக பெரும் புள்ளிகள் மட்டுமே இருப்பது வெளிப்படையாக இருக்கிறது.
இதில் அடுத்த இலக்கு "மாமன்னன்" குடும்பமாம். டெல்லி படை பரிவாரங்கள் எப்படியும் மாட மாளிகையை தட்டத்தான் போகிறது; அதற்கான எதிர்கொள்ளல்கள் எப்படி இருக்க வேண்டும் என "மாமன்னன் குடும்பம்" நாளும் ஒத்திகை பார்த்துக் கொண்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லி தகவல்களும் கூட, அவர்கள் ஒத்திகை பார்க்கட்டும்; அரங்கேற்ற நேரத்துக்கும் நாங்களும் நாள் குறித்துவிட்டோம் என படைகளும் தயாராக இருக்கின்றன. அன்றைய அரங்கேற்ற வேளையில் எத்தனை எத்தனை நாடகங்களும் நடக்கலாம். அதனையும் எதிர்கொள்ள நாங்களும் தயார் என்கின்றனவாம் டெல்லிவாலாக்கள் தரப்பு. ஏதோ ஒரு யுத்தத்துக்கு தயாராவதைப் போல இருதரப்பும் தயாராகிக் கொண்டிருப்பதுதான் லேட்டஸ் டெல்லி தகவல்!
-
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications