சென்னைக்கு புதிய சர்வதேச நகரம்.. மறைமலைநகர் போல்.. செங்கல்பட்டில் 2000 ஏக்கரில் எப்படி அமைக்கிறது?
சென்னை: சென்னையில் மறைமலைநகர் போல் புதிய சர்வதேச நகரத்தை தமிழக அரசு அமைக்க போகிறது. அதுவும் செங்கல்பட்டுக்கு அருகிலேயே மதுராந்தகம் பக்கத்தில் அந்த சர்வதேச நகரம் அமைய போகிறது. இது ஏற்கனவே உள்ள மறைமலைநகரில் இருந்து வெறும் 30 முதல் 33 கிமீ தூரத்தில் தான் அமைகிறது. சுமார் 2000 ஏக்கரில் 6 கிராமங்களை உள்ளடக்கி இந்த சர்வதேச நகரம் அமைக்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் தொடங்க உள்ளது.
சென்னை மாநகரம் வளர வளர புதிய சர்வதேச நகரங்களில் தேவை உருவாகியது. தமிழக அரசு முதல்முறையாக சர்வதேச நகரங்களை சென்னை சென்டரலில் இருந்து சுமார் 40 கிமீ தூரத்தில் இருந்த மறைமலைநகரில் அமைத்தது. 1972-ம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டத்தின் மறைமலை நகரில் ஒரு செயற்கைக்கோள் நகரம் உருவாக்க திட்டமிட்டு பணிகளை அரசு செய்தது. அதன்படி நகரம் உருவாகியது. அந்த நகரத்தை ஒட்டித்தான் உலகத்தரத்திலான மகேந்திரா சிட்டி உள்ளது. மகேந்திரா சிட்டி முதல் மறைமலைநகர் வரை உள்ள பகுதி சென்னையில் முக்கியமான பொருளாதார மையமாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில் அடுத்ததாக 1990-ம் ஆண்டின் தொடக்கத்தில் வடசென்னையில் உள்ள மணலி புதிய நகரத்தையும் உருவாக்க அரசால் திட்டமிட்டு பணிகளை செய்தது. அதன்படி அங்கும் துணை நகரம் உருவாகி பல ஆயிரம் பேர் வேலை செய்து வருகிறார்கள். துறைமுகம் அருகில் உள்ள இந்த நகரம் முக்கியமான தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக இருக்கிறது. இந்த நிலையில், தற்போது சென்னைக்கு 3வது நகரமாக, உலகளாவிய புதிய நகரம் உருவாகிறது.
இதற்கான அறிவிப்பு கடந்த 2025 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அரசு கூறுகையில், 'நகரமைப்பு வல்லுநர்களின் கருத்தை ஏற்று முதல்கட்டமாக சென்னைக்கு அருகில் உலகத்தர வசதிகளுடன் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் புதிய நகரம் அமைக்கப்படும்" என்று கூறப்பட்டது. அதன்படி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி செங்கல்பட்டில் உலகளாவிய நகரம் அமைக்க ஏதுவாக 6 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்க உள்ளது.
பல லட்சம் மக்கள் சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி, மதுரை போன்ற நகரங்களை நோக்கி இடம் பெயருகிறார்கள். குறிப்பாக சென்னைக்கு தான் பலர் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் ஏற்படும் சவால்களை கருத்தில் கொண்டு, சென்னைக்கு அருகே புதிய உலகளாவிய நகரம் (குளோபல் சிட்டி) உருவாக்க திட்டமிடப்பட்டது. அதை செயல்படுத்தும் முயற்சிகள் தொடங்கி இருக்கிறது.
செங்கல்பட்டில் அமையும் புதிய நகரத்தில், தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், நிதி நுட்ப வணிக மண்டலங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், வணிக வளாகங்கள், வர்த்தக மையங்கள், மாநாட்டுக் கூடங்கள் மட்டுமன்றி, அரசு மற்றும் தனியார் துறையின் மூலம் கல்வி மற்றும் சுகாதாரச் சேவைகள் அளிக்கும் நிறுவனங்களும் அமைக்கப்பட இருகக்கிறது. இது ஏதோ உயர் வருவாய் கொண்டவர்கள் மட்டும் இருக்கும் நகரமாக இல்லாமல், அனைத்து தரப்பினருக்கான வசதிகள் கொண்ட நவீன நகரமாக உருவாக்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
இந்த புதிய நகரம் தென் சென்னையில் இருந்து சுமார் 90 கி.மீ. தொலைவில் செங்கல்பட்டு பக்கத்தில் அமைக்கிறது. ஏற்கனவே உள்ள தொழில் நகரமான மறைமலைநகரில் இருந்து 30 கிமீ துரத்தில் அமைகிறது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலுகாவில் அமைய இருக்கிறது. புதிய நகரம் அமைக்கப்பட உள்ளது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) மேற்கொள்கிறது. இதற்கான டெண்டரை கடந்த செப்டம்பர் மாதம் டிட்கோ வெளியிட்டிருந்தது.

இதற்கான அடுத்தகட்ட நடைமுறையாக நிலம் கையகப்படுத்தும் பணியை டிட்கோ விரைவில் தொடங்க உள்ளது. புதிய நகரம் அமைய இருக்கும் மதுராந்தகம் வட்டாரத்தில் உள்ள பழையனூர், ஜானகிபுரம், அதிமணம், படாளம், கள்ளபிரான்புரம் மற்றும் புலிப்பரக்கோவில் ஆகிய ஆறு கிராமங்களில் நிலத்தை கையகப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்த 6 கிராமங்களில் மொத்தம் 787.52 எக்டேர்களுக்கு அதிகமான நிலத்தை கையகப்படுத்த உள்ளது. அதில் அதிகபட்சமாக பழையனூரில் 406 எக்டேரும், ஜானகிபுரத்தில் 162.65 எக்டேரும் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இந்த புதிய சர்வதேச நகரம் வழியாகவே தேசிய நெடுஞ்சாலைய ஜிஎஸ்டி சாலை செல்கிறது. ரயில் வழித்தடமும் அருகிலேயே உள்ளது. அதாவது செங்கல்பட்டுக்கும் மதுராந்தகத்திற்கும் இடையில் அமைகிறது.
-
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications