அரசுப் பள்ளிகள் மேம்பாட்டுக்கு 'நம்ம ஸ்கூல்' என்ற புதிய திட்டம்! நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர்!
சென்னை: தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகள் மேம்பாட்டுக்காக நம்ம ஸ்கூல் என்ற புதிய திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள், தன்னார்வ அமைப்புக்களிடம் நிதி உதவி பெற்று அரசுப்பள்ளிகளை மேம்படுத்தும் திட்டம் தான் நம்ம ஸ்கூல் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது;

புதிய திட்டம்
ஒவ்வொரு பள்ளிக்கும் அந்தப் பள்ளியில் படித்தவர்கள் பல்வேறு உதவிகளை செய்யவேண்டும். இதேபோல ஒரு முன்னெடுப்பு தமிழ்நாடு அரசின் சார்பில் நாங்கள் வைக்க இருக்கிறோம். அதற்கான அமைப்பை வருகிற 19-ஆம் தேதி நான் தொடங்கி வைக்க இருக்கிறேன். தமிழகம் முழுவதும் நடைபெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித்தர இருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

நிதி உதவி
பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள், தன்னார்வ அமைப்புக்கள் வழங்கக்கூடிய நிதியின் மூலமாக அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான அனைத்தையும் நாம் செய்ய இருக்கிறோம். இதனை செய்து தருவது அரசாங்கத்தினுடைய கடமை என்று மட்டும் நீங்கள் நினைத்துக்கொள்ளாமல் அனைத்தையும் அரசாங்கமே செய்துவிட முடியாது. அதையும் புரிந்துகொண்டு மக்களும் சேர்ந்தால்தான் அதை நிறைவேற்றமுடியும். வெற்றிபெற முடியும்.

எனது லட்சியம்
தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டம் 19-ஆம் தேதி தொடங்குவதற்கு முன்னதாகவே நான் படித்த பள்ளியிலே, எனது பள்ளியிலே முன்னெடுப்பாக நடந்திருப்பதைப் பார்த்து நான் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன்; பெருமைப்படுகிறேன். தமிழகத்தில், இந்தியாவிலேயே கல்வியில் சிறந்த மாநிலமாக ஆக்குவது என்னுடைய இலட்சியம். அது உங்களுக்குத் தெரியும். இவ்வாறு நம்ம ஸ்கூல் திட்டம் பற்றி முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார்.

பள்ளிக்கல்வித் துறை
பள்ளிக்கல்வித்துறையில் ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது . இதனிடையே நாளை தொடங்கப்படும் நம்ம ஸ்கூல் திட்டத்தின் கீழ் இனி அரசுப் பள்ளிகளின் தரம் மேம்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications