சென்னை சென்ட்ரல் லாட்ஜில் குளிக்க போன நர்சு.. பின்னாடியே வந்த உருவம்.. ஆடிப்போன பெண்
சென்னை: சென்னை சென்ட்ரல் என்பது இந்தியாவின் பல்வேறு மாநில மக்கள், பல்வேறு மாவட்ட மக்கள் வந்து செல்லும் பகுதியாகும்.. ஏராளமான பயணிகள் அருகில் உள்ள விடுதிகளில் வாடகைக்கு எடுத்து தங்குவார்கள்.. அப்படி தங்கிய பெண் நர்சு ஒருவர், குளிக்க போயிருக்கிறார். அங்கு விடுதி ஊழியராக பயணியாற்றும் நபரால் நடந்த சம்பவம் ஆடிப்போக வைத்துள்ளது. அந்த விடுதி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை சென்ட்ரலில் இந்தியாவின் மிக முக்கியமான ரயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கு பல ஆயிரம் பயணிகள் வந்து செல்கிறார்கள். அப்படி வரும் பயணிகள் மற்றும் சென்னையில் இருந்து ரயிலில் ஏறி செல்ல விரும்பும் பயணிகள் அருகில் உள்ள லாட்ஜகளில் அறை எடுத்து தங்குவது வழக்கம். அந்தவகையில் பலர் தினமும் பல்வேறு விடுதிகளில் வந்து தங்கி செல்கிறார்கள்.

சென்ட்ரல் பகுதியில் உள்ள பிரபல விடுதியில் ஊழியராக 19 வயதாகும் தனஞ்செய்பதி என்பவர் வேலை செய்து வந்தார். ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இவர், அண்மையில் வேலைக்கு சேர்ந்தார். தனஞ்செய்பதியின் வேலை என்பது, வாடிக்கையாளர்கள் தங்குவதற்கு வரும்போது அறைகளை காட்டுவதும், வாடிக்கையாளர்கள் அறையை காலி செய்துவிட்டு போனபிறகு சுத்தப்படுத்துவதும் தான் வேலையாகும்.
இவர், விடுதியில் தங்க வரும் இளம்பெண்களின் அழகை ரசிப்பதோடு, அவர்கள் குளிக்கும் காட்சியை ஜன்னல் வழியாக செல்போன் மூலம் வீடியோ படம் எடுத்தும் இவர் ரசித்து வந்தாராம். இதை ஒரு பொழுதுபோக்காக செய்து வந்த இவர், போலீசில் மாட்டிக்கொண்டிருக்கிறார்.
அண்மையில் கேரள மாநிலத்தை சேர்ந்த நர்சு ஒருவர் இந்த விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளார். சென்னையை அடுத்த பெரியபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இவர் வேலை பார்த்து வந்தார். தனஞ்செய்பதி, ஜன்னல் வழியே செல்போனில் வீடியோ எடுப்பதை நர்சு பார்த்துவிட்டார். உடனடியாக கூச்சலிட்டார். பின்னர் ஆடைகளை அணிந்து கொண்டு வெளியில் வந்த நர்சு, தனஞ்செய்பதி செல்போனை பறித்து ஆய்வு செய்திருக்கிறார்.
ஆனால் தனஞ்செய்பதி அதற்குள் நர்சு குளிக்கும்போது எடுத்த ஆபாச படத்தை அகற்றிவிட்டதாக கூறப்படுகிறது. இருந்தாலும் அவரது செல்போனில் வேறு சில இளம்பெண்கள் குளிக்கும்போது எடுத்த காட்சிகள் பதிவாகி இருந்தன. அதன்அடிப்படையில், வேப்பேரி அனைத்து மகளிர் போலீசில் தனஞ்செய்பதி மீது புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். தனஞ்செய்பதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications