களமிறங்கும் அணுகுண்டு? பேர்ல் ஹார்பர் ஸ்டைலை கையில் எடுத்த ஹமாஸ்.. இஸ்ரேலையே ஏமாற்றியது எப்படி?
காசா: சனிக்கிழமை நடந்த தாக்குதல் மூலம் தொழில்நுட்ப ரீதியாக.. உளவு ரீதியாக மிகப்பெரிய இஸ்ரேல் நாட்டை சிறிய அமைப்பான ஹமாஸ் ஏமாற்றி வெற்றி கண்டுள்ளது என்றுதான் கூற வேண்டும்.
இஸ்ரேல் வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய தாக்குதலை ஹமாஸ் நடத்தி உள்ளது. காஸாவில் இருந்து கொண்டு நேற்று முதல்நாள் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல்தான் அவர்கள் வரலாற்றில் நடத்தப்பட்ட பெரிய அட்டாக். பொதுவாக இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும்.
ஹமாஸ் எப்போது தாக்கும் என்பதை எதிர்பார்த்தபடியே இஸ்ரேல் இருக்கும். ஆனால் அப்படிப்பட்ட ஹமாஸ் இயக்கம்.. இஸ்ரேலை கொஞ்சம் கூட யோசிக்க விடாமல்.. அவர்களுக்கே தெரியாமல்.. நூதனமாக தாக்கி உள்ளது. இஸ்ரேலின் மொஸாட் உளவு அமைப்பின் கண்களில் மண்ணை தூவி.. அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் மீது ராக்கெட் மழையை பெய்துள்ளது.
உளவு இயக்கம்: உலகின் நம்பர் 1 உளவு இயக்கம் மொஸாட் என்று கூறுவார்கள். அந்த மொஸாட் இயக்கத்தையே இந்த அட்டாக் மூலம் தண்ணீர் குடிக்க வைத்துள்ளது ஹமாஸ் அமைப்பு. பல தசாப்தங்களாக, உலகின் மிகவும் வலிமையான ஆயுதப் படைகளில் ஒன்றாகவும், முதன்மையான உளவுத்துறை நிறுவனமாகவும் விளங்கும் இஸ்ரேல்தான் இந்த தாக்குதலை எதிர்கொண்டு உள்ளது. போர் தொழில்நுட்ப அதிகார மையமாக மாறிய போதிலும், சனிக்கிழமையன்று இஸ்ரேலின் இராணுவம் ஹமாஸிடம் மண்டியிடும் நிலைமைக்கு சென்றுள்ளது.

இஸ்ரேலியப் பிரதேசத்தின் மீதான தாக்குதலில் ஒரு இஸ்ரேலிய வீரர் போர்க் கைதியாகப் பிடிக்கப்பட்டு 17 வருடங்களுக்கு மேலாகிறது. 17 வருடங்களில் முதல்முறையாக நேற்று பல நூறு வீரர்கள் போர் கைதிகளாக பிடிக்கப்பட்டு உள்ளனர். 1948 ஆம் ஆண்டு சுதந்திரப் போரில் ஊர் ஊராகச் சண்டையிட்டதில் இஸ்ரேலில் பல ராணுவ தளவாடங்கள் ஊடுருவப்பட்டன. அதன்பின் இப்போதுதான் இஸ்ரேல் ராணுவத் தளங்கள், நகரங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் ஊடுருவப்பட்டு உள்ளன.
இரண்டாம் உலகப்போர்: இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவின் பேர்ல் ஹார்பரில் ஜப்பான் கடல் வழி தாக்குதலை சர்ப்ரைசாக நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கவே அமெரிக்கா அணு ஆயுத தாக்குதலை நடத்தியது. இந்த நிலையில் அதேபோல் ஒரு சர்ப்ரைஸ் தாக்குதலை அமெரிக்காவின் பங்காளி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்தி உள்ளது. இதனால் இஸ்ரேலும் அணு ஆயுதத்தை கையில் எடுக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
இஸ்ரேல் எதிர்கொண்ட மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாக.. இஸ்ரேல் வரலாற்றில் அந்த நாடு எதிர்கொண்ட போர் அல்லாத பெரிய தாக்குதலாக இந்த ஹமாஸ் தாக்குதல் பார்க்கப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு பழி வாங்கியே தீருவோம். ஹமாஸ் இயக்கத்தை மொத்தமாக அழிப்போம். காசா இருந்த சுவடே இல்லாமல் ஆக்க போகிறோம். காஸாவில் இருக்கும் பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும். நாங்கள் மிக பெரிய தாக்குதலை நடத்த போகிறோம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
எப்படி நடந்தது?: இதனால் இஸ்ரேல் எங்கே அணு ஆயுதத்தை கையில் எடுக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. 2005ல் காஸாவிலிருந்து இஸ்ரேல் வெளியேறியதில் இருந்து, ஹமாஸ் தாக்குதல்களில் இருந்து எல்லையைப் பாதுகாப்பதற்காக இஸ்ரேல் பில்லியன் கணக்கான டாலர்களை செலவிட்டுள்ளது. இது காஸாவிற்குள் இருந்து இஸ்ரேலுக்குள் ஏவப்படும் எந்த ஆயுதங்களை தடுத்து தாக்கவும், சுரங்கப்பாதைகளைப் பயன்படுத்தி எல்லையை கடக்க முயற்சிக்கும் பயங்கரவாதிகளை தடுக்கவும் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகும்.
( 2 போர்கள்.. ஒரு குள்ள நரித்தனம்.. பாலஸ்தீனத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்தது எப்படி? ஹமாஸ் தாக்குவது ஏன்? )
ராக்கெட் தாக்குதல்களை நிறுத்த, அமெரிக்காவின் உதவியுடன் உருவாக்கப்பட்ட அயர்ன் டோமை இங்கே இஸ்ரேல் அதிக அளவில் களமிறக்கி உள்ளது. இதை எல்லாம் மீறித்தான் கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. சனிக்கிழமையன்று அந்த அமைப்புகள் எங்கு தோல்வியடைந்தன என்பதை இஸ்ரேலிய அதிகாரிகள் நிச்சயமாக சோதனை செய்து பார்க்க வேண்டும். இதுவரை அயர்ன் டோம்.. இந்த ஏவுகணைகளை கண்டுபிடிக்க முடியாமல் போனது ஏன் என்று தெரியவில்லை.

சனிக்கிழமை காலை நிலவரப்படி, ஹமாஸ் 2,200 ராக்கெட்டுகளை வீசியதாக இஸ்ரேல் கூறியது, ஆனால் அவற்றில் எத்தனை இடைமறிக்கப்பட்டன என்பது குறித்த புள்ளிவிவரங்களை வெளியிடவில்லை. எல்லை பாதுகாப்பு அயர்ன் டோம் ஏன் அதன் வேலையைச் செய்யவில்லை என்பது குறித்து அதிகாரிகள் கருத்து தெரிவிக்கவில்லை. ஒரு பக்கம் அயர்ன் டோம் உள்ளிட்ட கருவிகள் வேலையை செய்யவில்லை.. இன்னொரு பக்கம் அவர்களின் உளவுத்துறையும் இப்படி ஒரு பெரிய தாக்குதலை கணிக்க முடியாமல் ஏமாந்து உள்ளது.
தொழில்நுட்ப ரீதியாக.. உளவு ரீதியாக மிகப்பெரிய இஸ்ரேல் நாட்டை சிறிய அமைப்பான ஹமாஸ் ஏமாற்றி வெற்றி கண்டுள்ளது என்றுதான் கூற வேண்டும்.












Click it and Unblock the Notifications