சென்னையில் கொட்டிய மழை.. திருவாரூரில் இருந்து போனை போட்ட ஸ்டாலின்.. பதறிய தலைகள்.. என்ன நடந்தது?
சென்னை: சென்னையில் இரவு முழுக்க விடாமல் கனமழை பெய்து வந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக போன் செய்து ஆலோசனை செய்துள்ளார்.
சென்னையில் நேற்று இரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது. முக்கியமாக அதிகாலையில் 4 மணியில் இருந்து பெரும்பாலான இடங்களில் மழை விடாமல் பெய்து வருகிறது. அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி பகுதிகளில் அதிகாலையில் கனமழை பெய்தது
அதிகாலையில் வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை பகுதிகளில் 2 மணி நேரமாக மழை பெய்தது மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்தது எழும்பூர், ஆவடி, வேளச்சேரி, தி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் தற்போது மழை பெய்ய தொடங்கி உள்ளது விடாமல் பெய்யும் மழை காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இது போக நேற்று நள்ளிரவிற்கு பின் அதிகாலை வரை திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இங்கு இரவில் தொடங்கிய மழை தற்போது வரை விடாமல் பெய்து கொண்டு இருக்கிறது.
தண்ணீர் தேங்கி உள்ளதா? : சென்னையில் கடந்த வாரம் விடாமல் மழை பெய்தது. தொடர்ந்து தீவிர மழை பெய்தாலும் பெரிதாக சாலைகளில் வெள்ளம் தேங்கவில்லை. மழை பெய்த சில நிமிடங்களில் வெள்ளம் வெளியேறியது.
இதற்கு சென்னையில் அமைக்கப்பட்டு இருக்கும் வெள்ள நீர் குழாய்கள்தான் காரணம். வெள்ளம் வடிவதற்காக சென்னையில் பல இடங்களில் வெள்ள நீர் வடிகால் குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
அதே சமயம் கத்திப்பாரா உள்ளிட்ட சப் வே பாலங்கள் உள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. அங்கே தண்ணீரை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
மழை அளவு: சென்னையில் மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 14 செமீ மழை பெய்துள்ளது. அதேபோல் பின் வரும் மாவட்டங்களில் அதிகபட்ச மழை பதிவாகி உள்ளது.
நந்தனம் - 11.7 செ.மீ. தரமணி - 11.7 செ.மீ. செம்பரம்பாக்கம் 10.9 செ.மீ - மேற்கு தாம்பரம் - 8 செ.மீ. நுங்கம்பாக்கம் - 6.7 செ.மீ. சென்னை தவிர்த்து காஞ்சிபுரம் - 7.9 செ.மீ. திருவள்ளூர் - 5 செ.மீ. மாவட்டங்களில் ஆகிய அளவு மழை பதிவாகி உள்ளது.
ஸ்டாலின் ஆலோசனை: முதல்வர் ஸ்டாலின் தற்போது சென்னையில் இல்லை. அவர் திருவாரூர் சென்றுள்ளார்.
திருவாரூர் அருகே உள்ள காட்டூரில் நடக்கும் விழாவிற்கு சென்றுள்ளார். அங்கே தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் அவர் கலந்து கொள்ள உள்ளார்.
7,000 சதுர அடி பரப்பளவில் 12 கோடி ரூபாய் மதிப்பில் இந்த கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இதை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்க உள்ளார்.

இந்த நிலையில்தான் சென்னையில் இரவு முழுக்க விடாமல் கனமழை பெய்து வந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக போன் செய்து ஆலோசனை செய்துள்ளார். அதன்படி மாநகராட்சி அதிகாரிகள், கமிஷ்னர், மேயர் பிரியா உள்ளிட்டோருக்கு உடனே போன் செய்து பேசி உள்ளார்.
சென்னையில் மழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மழைநீர் வடிகாலில் தண்ணீர் செல்வதை மண்டலம் வாரியாக குழுக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும், போன்ற உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
ஸ்டாலின் உத்தரவால் அதிகாலை 5 மணிக்கே அதிகாரிகள் பணிகளை செய்ய தொடங்கி உள்ளனர். முதல்வர் ஸ்டாலின் மழை காரணமாக திருவாரூரில் இருந்து மீண்டும் சென்னைக்கு வரும் வாய்ப்புகள் உள்ளன. விமான நிலையத்திற்கு விமானங்கள் வர வாய்ப்பு இல்லாத பட்சத்தில் சாலை மார்க்கமாக சென்னைக்கு வருவாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications