Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரும்பாக்கத்தில் பெண் அதிகாரியிடம் நகை பறிப்பு.. தர்ம அடி வாங்கிய இளைஞர் யார் தெரியுமா? ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே மின்வாரிய பெண் அதிகாரியிடம் நகை பறித்தவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்துள்ளார்கள். விசாரித்து பார்த்தால் அவர் போலீஸ்காரராம்.. இதை கேட்டு பொதுமக்கள் மட்டுமல்ல போலீஸாரே அதிர்ச்சி அடைந்தனர்.

சென்னையை அடுத்த பல்லாவரம் கண்டோன்மெண்ட்டை சேர்ந்தவர் கமலகண்ணன் இவருக்கு 49 வயது ஆகிறது. இவர், பரங்கிமலை-பல்லாவரம் கண்டோன்மெண்ட் போர்டில் வருவாய் கண்காணிப்பாளராக வேலை செய்துவருகிறார். இவருடைய மனைவி விஜயலட்சுமி (46). இவர், கிண்டி மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக வேலை செய்து வருகிறார்..

A policeman snatched jewelery from a female electricity officer in Arumbakkam, Chennai

கமலகண்ணன் தனது மனைவி விஜயலட்சுமியுடன் கடந்த ஞாயிறு அன்று இரவு உறவினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இருசக்கர வாகனத்தில் அரும்பாக்கம் சென்றுள்ளார். அங்கு மெட்ரோ ரெயில் நிலையம் அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, கல்யாண மண்டபத்துக்குள் செல்ல முயன்றுள்ளார்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர், திடீரென விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி ஓடினார். அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி, 'திருடன் திருடன்' என கூச்சலிட்டபடியே இளைஞரை விரட்டிச்சென்றார்.

உடனே அங்கிருந்த பொதுமக்கள், நகையுடன் தப்பி ஓடிய வாலிபரை பிடிக்க முயன்றுள்ளார்கள். ஆனால் அவர் அங்கிருந்த கால்வாய்க்குள் தவறி விழுந்துவிட்டார். அப்போது பொதுமக்களில் ஒருவர் உருட்டுக்கட்டையால் அவரை தாக்கியதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது. பின்னர் அவரை கால்வாயில் இருந்து மீட்ட பொதுமக்கள், அவரை சரமாரியாக அடித்து உதைத்து சூளைமேடு போலீசிடம் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 6 பவுன் நகையை பறிமுதல் செய்தார்கள்.

பொதுமக்கள் தர்மஅடி கொடுத்ததால் காயம் அடைந்த அவரை போலீசார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் நடத்திய விசாரணையில், அவரது பெயர் ராஜதுரை (26) என்பதும், ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 5-வது பட்டாலியனில் காவலராக பணிபுரிந்து வருவதும், அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது.

கடந்த ஞாயிறு அன்று இரவு பணி முடிந்து சாதாரண உடையில் வீட்டுக்கு செல்ல காத்திருந்த ராஜதுரை, விஜயலட்சுமியிடம் நகை பறிப்பில் ஈடுபட்டதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அவர் நகை பறிப்பில் ஈடுபட்டதற்கான காரணம் என்ன? என்று விசாரித்து வருகின்றனர். மின்வாரிய பெண் அதிகாரியிடம் போலீஸ்காரர் ஒருவரே நகை பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் அரும்பாக்கத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+