ஏய்! திமுகவே.. ஒண்டிக்கு ஒண்டி வா- சவடால்களை எல்லாம் கட்டிப் போட்டதா நடிகையின் மெடிக்கல் ரிப்போர்ட்?
சென்னை: திமுகவை இடைவிடாமல் தாக்கி சீரான கோபத்துடன் சீறிக் கொண்டிருந்த 'சவால்' 'சவடால்கள்' எல்லாம் கடந்த சில நாட்களே ரொம்பவே அடக்கி வாசிக்கப்படுவதற்கு காரணமே நடிகையின் மெடிக்கல் ரிப்போர்ட் முடிவுகள்தானாம். இந்த மெடிக்கல் ரிப்போர்ட் தமது எதிர்காலத்தையே காலி செய்யப் போகிறதால்தான் இப்படி ஒரு மயான அமைதிக்கு போய்விட்டதாம் அந்த அரசியல் தலை.
30%, 40% வாக்குகளை வைத்திருக்கும் திமுக, அதிமுகவை சிங்கிள் டிஜிட்டையே தாண்டாத சில கட்சிகள் சமமான எதிரியாக நினைத்து 'உதார்' விடுவது வழக்கம்தான். தினமும் மைக்கை பிடிப்பது, தினமும் பிரஸ் மீட் வைப்பது.. எடுத்த எடுப்பிலேயே "ஏய் திமுகவே" என்கிற ரேஞ்சில் எகத்தாளமாக நக்கலடிப்பது, ஏடா கூடமாக விமர்சிப்பது என்பது எல்லாம் சில சோ கால்ட் லீடர்களுக்கு வாடிக்கையான வாழ்வியல். இது அரசியலில் ஆகப் பெரும் வேடிக்கையாக பார்க்கப்படுகிறது என்பது புரிந்தும் புரியாமல் 'தலைகால்' தெரியாமல் ஆட்டம் காட்டி பார்க்கின்றனர் அந்த லீடர்கள்.

அப்படியான லீடர்களில் ஒருவர் எசகு பிசகாக எக்குதப்பான விவகாரத்தில் சிக்கிக் கொண்டு 'மாமா நல்லவரு' என்கிற ரேஞ்சில் விளக்கம் கொடுத்தும் விதண்டவாதம் செய்தும் கொண்டும் வெட்டுவேன்/ குத்துவேன் என தாதா கணக்கில் சவுண்டு விட்டதும் நாடும் நாட்டு மக்களும் அறிந்த கதைதான்.
இப்போது எக்குதப்பான விவகாரத்தில் நடிகையின் மெடிக்கல் ரிப்போர்ட் கசிந்துவிட்டதாம். ஆளும் தரப்பு நினைத்தால் அண்ணாச்சியின் அரசியல் ஆட்டத்தை அடுத்த செகண்ட்டே முடித்துவிட முடியும்.. அந்த அளவுக்கு ஏடா கூடமாக சிக்கி நிற்கிறாராம் அந்த சோ கால்ட் சீற்றமான, சினங்கொண்ட லீடர். இதனால் கடந்த அண்மை நாட்களில் ஆளும் தரப்பை முன்னைப் போல ஏய் திமுகவே! என்கிற சவால் சவடால் பேச்சுகள் இல்லாமல் 'ரொம்பவே நாகரிகமாக/ மைல்டாக டச் செய்துவிட்டு கடந்து போய்க் கொண்டிருக்கிறாராம்.. காரம் ரொம்ப கம்மியாக இருக்கே.. உப்பு பத்தலையே என புலம்புகிறவர்களை பார்த்து 'என் பிரச்சனை எனக்குதான்டா' என தமக்குள்ளே புலம்புகிறாராம் வருங்கால 'தமிழ் நிலம்'. இதை உணராத அடிப்பொடிகள் மேடை கிடைத்தால் போதும் என உக்கிரமாக முழங்கிக் கொண்டு துரைத்தனம் செய்கின்றனராம்.
-
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications