‘பைத்தியகாரத்தனம்’ ஓவரா போறாங்க! நித்யானந்தாவை சீண்டும் அன்னபூரணி அரசு? அவரே கொடுத்த அடடே விளக்கம்!
சென்னை : குடுமியும், சாம்பலைப் பூசிக் கொண்டும் ருத்ராட்சம் அணிந்து கொண்டு இருந்தால் ஆணவம் வந்துவிடும் என்று நித்தியானந்தாவுக்கு டஃப் கொடுக்கும் வகையில் சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமான பெண் சாமியார் அன்னபூரணி அரசு அம்மா முகநூல் பக்கத்தில் ஒரு நீண்ட விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.
சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மிகவும் பிரபலம் ஆன அன்னபூரணி அரசு அம்மா எனும் பெண் சாமியார், தன்னை ஆதிபராசக்தியின் அடுத்த உருவம் என கூறி வருவதுடன், அவ்வப்போது பக்தர்களுக்கு ஆன்லைன் மூலம் அட்வைஸ் கொடுத்து பக்தி பரவசத்தில் ஆழ்த்தி வருகிறார்.
செங்கல்பட்டு மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்ட இவர் கடந்த 2014ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி நடத்திய ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், திடீரென சாமியார் அவதாரம் எடுத்தார். அப்போது முதல் நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டும் அதனை கண்டு கொள்ளாமல், ஆன்மீக சேவை ஆற்றி வருகிறார்.

அன்னபூரணி அரசு அம்மா
இந்நிலையில் கோமாவில் இருப்பதாக கூறப்படும் நித்யானந்தா பார்மில் இல்லாத நிலையில், அவருக்கே டஃப் கொடுக்கும் வகையில் பல்வேறு ஆன்மீக விளக்கங்களை கொடுத்து வருகிறார் அன்னபூரணி. இந்நிலையில் ஆன்மீகவாதி எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து பேஸ்புக்கில் நீ.....ண்ட விளக்கத்தை கொடுத்திருக்கிறார் அவர். அந்த பதிவு முழுவதும் சாமியார் நித்யானந்தாவை சீண்டும் வகையில் இருப்பதாக சமூக வலைதளங்களில் கமெண்டுகள் தெறிக்கின்றன.

நீண்ட விளக்கம்
அப்படி என்னதான் சொல்லியிருக்கிறார் அன்னபூரணி அரசு அம்மா?.. இதைதான் சொல்லியிருக்கிறார். அதில்," ஆன்மிகவாதி எந்த மாதிரி இருக்க வேண்டும். என்ன மாதிரி உடை உடுத்த வேண்டும், என்ன வகை உணவு சாப்பிட வேண்டும். அதாவது சைவமா அல்லது அசைவமா?ஆன்மிகவாதி என்பவன் எப்படியுமே இருக்க கூடாது. (வேண்டுமானால் குடுமியும், சாம்பலை பூசிக்கொண்டும், ருத்ராட்சம் அனிந்து கொண்டு) இப்படித்தான் என்றால் அங்கு ஆணவம் வந்து விடும். எந்த விதமான உடையும் (வேண்டுமானால் ஒரு கோவனம்) உடுத்தக்கூடாது. அவன் எந்தவிதமான உணவும் உட்கொள்ளக்கூடாது. (மனித மாமிசம், அல்லது ஒருநாளைக்கு ஒரே ஒரு வாழைப்பழம்) உணவு எதுவும் இன்றி பட்டினியாகத்தான் இருக்க வேண்டும். இப்படித்தானே அகோரிகளும், சித்தர்களும், யோகிகளும் இருந்தார்கள்.

ஆன்மீகம் என்றால் என்ன?
நீங்களும் அப்படியே இருக்க வேண்டும் இதுதான் உண்மையான ஆன்மிக லட்சனம். இப்படி உங்களால் இருக்க முடியவில்லை என்றால் நீங்கள் ஆன்மிகத்தை பற்றியே பேசக்கூடாது. இப்பொழுது சொல்லுங்கள் இங்கு யாராவது ஆன்மிகவாதி இருக்கிறீர்களா? முடியவே முடியாது. இதுதான் ஆன்மிகமா. "உங்களுடைய பைத்தியக்காரத்தனங்களுக்கு அளவில்லாமல் போய்விட்டது. ஆன்மிகம் என்றால் 'வெறும் அமைதி, வெறும் உணர்வு, ஆனந்தம், வெறும் இருப்பு. இதற்கு பெயர் தான் ஆன்மிகம்.' ஆன்மிகம் என்று நீங்கள் பேசிக்கொண்டிருப்பது கூட ஆன்மிகம் ஆகாது. பேச்சற்ற நிலையே அது. அதை அடைவதற்கு உங்கள் பேச்சு உதவினால் அதுவும் சரியே. இதை அடையவே அனைத்து வழிகளும்.

சைவம் அசைவம்
இப்பொழுது சொல்லுங்கள் என்ன சாப்பிடலாம். இந்த நிலைக்கும் சாப்பாட்டிற்கும் என்ன சம்பந்தம். ஞானம் உயிர்தன்மை சார்ந்ததா உடல் சார்ந்ததா. உடல் தேவையான சாப்பாட்டு பிரச்சனையையே, இப்பத்தான் நீங்கள் ஆராய்ச்சி செய்தா, நீங்கள் எப்ப உயிர்தன்மைக்கு (ஆன்மிகத்திற்கு) வருவது. எல்லோருக்கும் எப்படி ஒரேமாதிரியான சாப்பாடு சரியா வரும் சரி இப்படி சொல்கிறேன் உங்க உடலுக்கு ஒத்துக்கிட்ட எல்லாம் சைவமே. ஒத்துக்கொள்ளாத எல்லாம் அசைவமே. இன்னும் வேறமாதிரி சொல்லனும்னா நீங்கள் இயல்பான விழிப்புணர்வில் ரசிச்சு ருசிச்சு சாப்பிடற எல்லாமே சைவம். டிவி பார்த்திட்டு, போன் பேசிட்டு, வேறு சிந்தனைகள், இயல்பாக சாப்பிடாத எல்லாம் அசைவம்.

ஆன்மிகம் என்பது உணர்வு
ஆன்மிகம் என்பது உங்கள் உடல் சார்ந்ததோ, எண்ணங்கள் சார்ந்ததோ, மனம் சார்ந்ததோ, உங்கள் அறிவு சார்ந்ததோ இல்லை. முழுக்க முழுக்க அது உங்கள் உணர்வு (உயிர்தன்மை) சார்ந்தது. உணவோ, உடையோ, பணமோ, உலகப்பொருட்களோ, இல்லற வாழ்வோ அதற்கு ஒரு விசயமே இல்லை. நிறைய பேர் உடலிலும், மனதிலுமே சிக்கி கொண்டு தங்கள் வாழ்வை தொலைக்கிறார்கள். போக்குவரத்து வசதி இல்லாத அந்த காலத்தில் ஒருவர் நடந்தே ஒரு இடத்திற்கு சென்றார் என்பதற்காக கார், பஸ், ரயில், விமானம் உள்ள இந்த காலத்திலும் நான் அப்படித்தான் செல்வேன் என்று அடம்பிடித்தால் அது உங்கள் பிரச்சனை. தண்ணீர் என்னைத் தேடி வந்தால் தான் நான் குடிப்பேன் என்று நீங்கள் இருந்தால் நடித்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்று பொருள்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications