மகாபலிபுரத்தில் நள்ளிரவில் பூசாரி கையில் 100 கிலோவில் என்ன அது? பார்த்ததுமே ஆடிப்போன போலீசார்
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரம் அடுத்த பூஞ்சேரி சோதனை சாவடி மையத்தில் கடந்த 25ம் தேதி இரவு, மாமல்லபுரம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் சென்ற நபர் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றார். போலீசார் அவரை பிடித்து விசாரித்த போது, அவர்சிற்ப கலைக்கூடத்தில் 100 கிலோ சிவலிங்கத்தை திருடிய பூசாரி என்பவது தெரியவந்தது. அவரை கைது செய்து சிவலிங்கத்தை பறிமுதல் செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரத்தை பொறுத்தவரை சிற்பக்கலைக்கு பெயர் பெற்ற ஊர் ஆகும். சர்வதேச அளவில் புகழ்பெற்ற தொல்லியல்நகரம் ஆகும்.இங்குள்ள புகழ் பெற்ற இடங்களை மத்திய அரரே நேரடியாக பராமரித்து வருகிறது. அங்கு சிற்பக்கல்லூரி ஒன்று இருக்கிறது. சிற்பகங்கள் குறித்து படிப்பும் இங்கு முக்கியமானதாகும்.

இந்நிலையில் மகாபலிபுரத்தை அடுத்த பூஞ்சேரி சோதனை சாவடி மையத்தில் கடந்த செப்டம்பர் 25ம் தேதி இரவு மகாபலிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் ஆசைத்தம்பி ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள். அப்போது அந்த வழியாக மொபட்டில் சென்ற நபர் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றார்.
விசாரணையில் அவர் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அடுத்த விக்ரபுரம் பகுதியை சேர்ந்த 29 வயதாகும் கார்த்திக் என்பதும், அந்த பகுதியில் உள்ள ஒரு சிவன் கோவிலில் தலைமை பூசாரியாக உள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. சிவன் கோவிலில் வெளிப்புற வளாகத்தில் புதிய சிவலிங்கம் பிரதிஷ்டை செய்வதற்காக கோவில் நிர்வாகத்தினர் புதிய சிவலிங்க கற்சிலையை வாங்கி வர அவரை செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரத்திற்கு சென்றுள்ளார்.
கார்த்திக் வடகடம்பாடி அம்பாள் நகரில் ஒரு சிற்ப கலைக்கூடத்தில் 2 அடி உயர சிவலிங்க சிலையை பார்த்து, நான் இந்த சிலையை வாங்கி கொள்கிறேன். ஊருக்கு சென்றவுடன் உங்களுக்கு ஜிபே மூலம் பணம் அனுப்புகிறேன். சிலையை நீங்கள் பார்சலில் அனுப்பி விடுங்கள் என்று கூறி விட்டு செல்கிறார்.
பின்னர் பூஞ்சேரி பகுதிக்கு சென்ற கார்த்திக் அங்கு பாரிவள்ளல் என்பவருடைய சிற்ப கலைக்கூடத்தின் வெளியே சாலை ஓரத்தில் முழுவதும் வடிவமைக்கப்பட்ட 100 கிலோ எடையுள்ள சிவலிங்கத்தை இரவு நேரத்தில் திருடி கோணிப்பையில் சுற்றி, மகாபலிபுரத்தில் வாடகைக்கு எடுத்த ஒரு மொபட்டில் எடுத்து செல்லும்போது போலீசாரிடம் சிக்கியது தெரியவந்தது. போலீசார் அவரிடம் இருந்த 100 கிலோ எடையுள்ள, 2 அடி உயரமுள்ள சிவலிங்கத்தை பறிமுதல் செய்தனர். கார்த்திக்கை கைது செய்து திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications