Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"என் குட்டி இளவரசி Raheema.."! பெருமை பொங்க ஏ.ஆர்.ரகுமான் போட்ட ட்வீட்! யார் இந்த ரஹீமா ரகுமான்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: என் குட்டி இளவரசி ரஹீமா என ஏ.ஆர். ரகுமான் நெகிழ வைக்கும் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். மேலும் பெருமைமிகு அப்பா, பெண்களின் சக்தி என்றெல்லாம் ஹேஷ்டேக் போட்டுள்ளார். ஆஸ்கர் விருது பெற்ற முதல் இந்திய இசையமைப்பாளர் ரகுமான் பெருமைப்படும் அளவுக்கு அவருடைய மகள் என்ன செய்தார் என்பதை பார்க்கலாம்.

A R Rahman s daughter Raheema

ஏ.ஆர்.ரகுமான் - சாய்ரா பானு தம்பதிக்கு இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர்களில் மகன் ஏ.ஆர். அமீன், மகள் கதீஜா ஆகியோர் இசைத் துறையில் உள்ளனர். ஆனால் ரகுமானின் இளைய மகளான ரஹீமா இசையில் ஆர்வம் காட்டாமல் சமையல், விருந்தோம்பல் துறையை தேர்வு செய்து படித்துள்ளார்.

ரஹீமா, அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ளது கியூளினரி இன்ஸ்டிடியூட் ஆஃப் அமெரிக்கா. சமையல் கலையை கற்பிப்பதற்காகவே முதல் முதலில் தொடங்கப்பட்ட கல்லூரி இது. மேலும் அமெரிக்க சமையல் கூட்டமைப்பு சான்று அளிக்கப்பட்ட முதுநிலை சமையல்காரர்களின் மிகப்பெரிய ஊழியர்களைக் கொண்டுள்ளது.

அது போல் விருந்தோம்பல் துறையில் உள்ள நிபுணர்களுக்கான தொடர் கல்வியையும், மாநாடு மற்றும் ஆலோசனை சேவைகளையும் வழங்குகிறது. இந்த கல்லூரியில் சமையல் கலை படித்து முடித்த ரஹீமா, தற்போது பட்டம் பெற்றுள்ளார்.

இதுகுறித்து ஏ.ஆர்.ரகுமான் புகைப்படத்தை பகிர்ந்து பெருமையான ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: "என் குட்டி இளவரசி ரஹீமா, விருந்தோம்பல், தொழில் முனைவு மற்றும் புதுமையை புகுத்துதல் ஆகிய துறைகளில் படித்து, கிளியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹையர் எதுகேஷன் என்ற கல்லூரியில் பட்டம் பயின்றுள்ளார்" என பெருமையாக தெரிவித்துள்ளார்.

ரஹீமாவுக்கு, ரகுமானின் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். ஏ. ஆர். ரஹ்மான் தற்போது இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்.ஜே. சூர்யாவின் கில்லர் படத்தில் இசையமைத்து வருகிறார்.

ஏ.ஆர்.ரகுமான், சாய்ரா பானு இருவரும் 29 ஆண்டுகால திருமண உறவிலிருந்து தற்போது பிரிந்திருக்கிறார்கள். சாய்ராவுக்கு மருத்துவ ரீதியாக சிகிச்சைகள் இருப்பதால், தனக்காக கணவருக்கோ, பிள்ளைகளுக்கோ தொந்தரவு கொடுக்கக் கூடாது என்பதற்காக தற்காலிகமாக பிரிந்திருப்பதாக அவர் கூறியிருந்தார்.

அதே சமயம், சாய்ரா பானு பிரிவை அறிவித்த போது பலர் ஏ.ஆர்.ரகுமானை தவறாக பேசினார்கள். அப்போது சாயிரா, ரகுமான் உலகிலேயே ஒரு சிறந்த மனிதர். அவரை போன்று அற்புதமான மனிதரை யாரும் பார்க்க முடியாது. சிகிச்சை முடிந்ததும் மும்பையில் இருந்து சென்னை திரும்புவேன். தயவு செய்து அவரை யாரும் களங்கப்படுத்தாதீர்கள் என சாய்ரா பானு தெரிவித்திருந்தார். உண்மையிலேயே ரகுமான் ஒரு Gemதான்!.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+