ஷூட்டிங் ஸ்பாட்டில் பெரும் விபத்திலிருந்து உயிர் தப்பிய ஏ.ஆர்.ரஹ்மான் மகன் ஏ.ஆர். அமீன்! பகீர் பதிவு
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் பெரும் வித்திலிருந்து உயிர் தப்பினார்.
சென்னை: இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மானின் மகன் பெரும் விபத்திலிருந்து உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர். அமீன். இவர் தற்போது இசையமைப்பாளராக வளர்ந்து வருகிறார். நிறைய பாடல்களை சொந்தமாக கம்போஸிங் செய்து வருகிறார்.
இவர் ஓகே கண்மணி என்ற படத்தில் பின்னணி பாடகராக தனது பயணத்தை தொடர்ந்தார். பில்லியன் ட்ரீம்ஸ் , 2.0 உள்ளிட்ட படங்களிலும் அமீன் பாடல்களை பாடியுள்ளார்.

பத்து தல
இவர் பத்து தல படத்திலும் பாடலை பாடியுள்ளார். இந்த நிலையில் இவர் ஒரு பெரும் விபத்திலிருந்து எப்படி தப்பினார் என்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமீன் கூறுகையில் நான் இன்று பாதுகாப்பாகவும் உயிருடனும் இருப்பதற்கு கடவுள், எனது பெற்றோர், குடும்பம், நலம் விரும்பிகள், எனது ஆன்மீக குரு ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

படப்பிடிப்பில் இருந்தேன்
கடந்த சில நாட்களுக்கு முன்பு நான் ஒரு பாடலின் படப்பிடிப்பில் இருந்தேன். பாதுகாப்பு தொடர்பாக அதற்கான குழுவினர் பார்த்துக் கொண்டிருப்பார்கள் என நம்பியிருந்தேன். அதனால் நான் கேமராவை பார்த்து நடிப்பதில் குறியாக இருந்தேன். நான் நடுவில் நின்றிருந்தேன். அப்போது கிரேனில் இருந்த விளக்குகள் அதிலிருந்து அறுந்து கீழே விழுந்தன.

விளக்குகள்
சில நொடிகளுக்கு முன்பு விழுந்திருந்தால் , சரியாக அந்த விளக்குகள் என் தலைக்கு மேல் விழுந்திருக்கும். நானும் எனது குழுவும் அதிர்ச்சி அடைந்தோம். இன்னமும் அந்த ஷாக்கிலிருந்து மீள முடியவில்லை என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். சினிமா துறையில் கிரேன் உள்ளிட்டவை விழுந்து விபத்து ஏற்படுவதால் நிறைய பேர் உயிரிழக்கவும் காயமடையவும் செய்கிறார்கள். இவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தயாரிப்பு நிறுவனம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இது போன்ர விபத்துகளால் எத்தனையோ பேர் தங்கள் உறுப்புகளை இழந்து அவதியடைந்து வருகிறார்கள்.

ஸ்லம்டாக் மில்லியனர்
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் என்ற திரைப்படத்திற்காக 2008 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதை பெற்றுள்ளார். கடந்த 1992 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ரோஜா படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். அவரை போல் அவரது மகனும் இசையமைப்பாளராக உருவாகி வருகிறார். தந்தையும் மகனும் சில படங்களில் ஒன்றாக பணியாற்றியுள்ளார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications