நிஜமான காதல் தான் நிலையான பாடல் தான்.. மீண்டும் சேரும் ஏஆர் ரஹ்மான் - சாய்ரா தம்பதி! பயங்கர ஹாப்பி.!
சென்னை: பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் மனைவி சாய்ரா பானு, அவரை பிரிவதாக கடந்த ஆண்டு அறிவித்திருந்தார். இதனை ஏ.ஆர்.ரகுமானும் உறுதி செய்த நிலையில் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் ஏஆர் ரஹ்மான் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தன்னை ரஹ்மானின் முன்னாள் மனைவி என அழைக்க வேண்டாம் என சாய்ரா பானு ஆடியோ வெளியிட்டு இருந்தார். தற்போது வரை இருவரும் சட்டபூர்வமாக விவாகரத்து கேட்காத நிலையில் அவர்கள் மீண்டும் இணையலாம் என கூறப்படுவதால் ஏஆர் ரகுமானின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு முன்பு மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தின் மூலம் தமிழ் தலைவர்களுக்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏஆர் ரகுமான். குறுகிய இடைவெளியில் மிகப் பெரிய புகழை பெற்ற அவர் 1995ஆம் ஆண்டு சாய்ரா பானுவை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு ரஹீமா, கதீஜா ஆகிய இரு மகள்களும், அமீன் என்ற மகனும் இருக்கிறார். இதில் இருவர் இசை உலகில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் திருமண பந்தத்தில் 30 ஆண்டை நெருங்கி வந்த நேரத்தில் தான் ஏஆர் ரகுமானை பிரிவதாக சாய்ரா பானு அறிவித்தார்.
இருவருக்கும் இடையே தீர்க்க முடியாத இடைவெளி உருவானதாகவும் இதனால் வேறு வழியின்றி ரஹ்மானை பிரிவதாக சாய்ரா பானு தெரிவித்தது திரையுலகம் மட்டுமல்லாது, ஏஆர் ரகுமானின் ரசிகர்களையும் கடும் அதிருப்தியில் ஆழ்த்தியது. காரணம் இதுவரை எந்தவிதமான சர்ச்சையிலும் சிக்காத ஏஆர் ரகுமானை சாய்ரா பானு பிரிவதாக அறிவித்தது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விளக்கம் அளித்த ஏஆர் ரகுமான் தங்களது திருமண பந்தம் 30 ஆண்டுகளை எட்டும் என நம்பி இருந்தோம். ஆனால் எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவாக சென்று விட்டது என உருக்கமாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் ஏஆர் ரகுமானின் விளக்கம் வெளியான சில மணி நேரங்களில் அவரது இசைக்குழுவில் பேஸ் கிட்டாரிஸ்டாக பணி புரியும் மோகினி டே என்பவரும் தனது கணவரை பிரிவதாக அறிவித்தார். இதை அடுத்து சமூக வலைதளங்களில் இருவரையும் இணைத்து கட்டுக் கதைகள் வெளியானது. ஏஆர் ரகுமான் மீது விமர்சனம் எழுந்த நிலையில் சாய்ரா பானு தனது கணவர் உலகத்திலேயே மிகச் சிறந்தவர் தங்கள் பிரிவுக்கும் ஏற்கனவே வெளியான கிசுகிசுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை தனது உடல் நலம் பாதிக்கப்பட்டதால் ஏஆர் ரகுமானுக்கு மன உளைச்சல் தரக்கூடாது என்பதற்காகவே பிரிந்தேன் என விளக்கம் அளித்து இருந்தார்.
மேலும் தனது தந்தை குறித்து அவதூறு கருத்துக்களை பரப்ப வேண்டாம் என ஏஆர் ரகுமானின் மகனான அமீனும் கூறியிருந்தார். இதற்கிடையே ஏஆர் ரகுமான் சாய்ரா பானு தம்பதி மீண்டும் இணையலாம் எனவும் அமீன், ரஹீமா, கதீஜா ஆகியோர் எதிர் காலம் கருதி மீண்டும் இணைவார்கள் என கூறப்பட்டது. இந்த நிலையில் நேற்று திடீரென ஏஆர் ரகுமான் உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நெஞ்சு வலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறிய நிலையில் நீண்ட தூர பயணம் காரணமாக டீஹைட்ரேஷன் ஏற்பட்டதாகவும், தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை சீராக இருப்பதாக அவரது சகோதரி தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக நீண்ட நாட்களுக்கு பிறகு ஆடியோ வெளியிட்டு இருந்த சாய்ரா பானு தனது கணவர் உடல்நலம் பெற பிரார்த்திப்பதாகவும் அதே நேரத்தில் நாங்கள் இன்னும் விவாகரத்து பெறவில்லை எனவே ஏஆர் ரகுமானின் முன்னாள் மனைவி என அழைக்க வேண்டாம் எனக் கூறியிருந்தார்.
இதை அடுத்து ஏஆர் ரகுமானின் உடல்நல குறைவால் அதிர்ச்சி அடைந்த சாய்ரா பானு விரைவில் அவரை நேரில் சந்திப்பார் எனவும் கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே சொன்னது போல அந்த தம்பதி மீண்டும் இணைவார்கள் என கூறப்படுவதால் ஏஆர் ரகுமானின் குடும்பத்தினரும் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications