இந்த முறை நானே பலியாடு ஆகிறேன்.. சென்னை இசை நிகழ்ச்சி குறித்து ஏ.ஆர். ரகுமான் வேதனை
சென்னை: மக்கள் விழித்துக் கொள்ள நானே பலியாடு ஆகிறேன் என இசை நிகழ்ச்சியின் கசப்பான அனுபவம் குறித்து இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் மிகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பதாவது: என்னை சிலர் ஆடு என அழைக்கிறார்கள். மக்கள் விழித்துக் கொள்ள இந்த முறை நான் பலியாடு ஆகிறேன். சென்னையில் உலகத் தர கட்டமைப்பு, சுற்றுலா மேம்பாடு உள்ளிட்டவை சிறந்து விளங்க வாய்ப்புகளை வழங்க வேண்டும்.

போக்குவரத்து, கூட்ட நெரிசலுக்கான மேலாண்மை, விதிகளை பின்பற்றும் ரசிகர்கள் அமைய வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை நாம் உருவாக்க வேண்டும். இறைவனை நாடினால் நடக்கும் என தனது இன்ஸ்டா பதிவில் ரகுமான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இசைக் கச்சேரி நடந்துமாறு ஏ.ஆர்.ரகுமானிடம் ரசிகர்கள் சமூகவலைதளங்களின் வாயிலாக கோரிக்கை விடுத்தனர். இதற்கு ரகுமானோ, சென்னையில் இசைக் கச்சேரிக்கு அனுமதி கிடைப்பது ரொம்ப கஷ்டம் என கூறியிருந்தார். இருந்தாலும் தொடர்ந்து ரசிகர்களின் கோரிக்கை எழுந்த நிலையில் தமிழக அரசிடம் ஏ.ஆர். ரகுமான் தரப்பினர் அனுமதி பெற்றனர்.
இதையடுத்து பனையூரில் கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி இசைக் கச்சேரி நடத்துவதாக ஏ.ஆர். ரகுமான் திட்டமிட்டிருந்தார். ஆனால் அன்றைய தினம் சென்னையில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் இசை நிகழ்ச்சி பாதுகாப்பு கருதி ரத்து செய்யப்படுவதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவித்திருந்தார். மேலும் இந்த நிகழ்ச்சியை வேறு ஒரு நாளில் நடத்துவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிகழ்ச்சி நேற்றைய தினம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மறக்குமா நெஞ்சம் என பெயரிடப்பட்டது. இந்தமுறை மழை வந்தாலும் மழை வராவிட்டாலும் நிகழ்ச்சி நடைபெறும் என ரகுமான் கூறியிருந்த நிலையில் நேற்றைய தினம் திட்டமிட்டபடி இசை கச்சேரியை நடத்தினார்.
சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள ஆதித்யராம் கிரவுண்டில் இந்த நிகழ்ச்சி நடந்தது. இதை காண 3 ஆயிரம் முதல் ரூ 25 ஆயிரம் வரை டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியை காண ரசிகர்கள் பலர் ஆவலோடு வந்தனர். ஆனால் நிகழ்ச்சியை காண நிறைய பேர் வந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பல ரசிகர்கள் டிக்கெட் இருந்து நிகழ்ச்சியை காணவில்லை.
மூச்சு விட கூட முடியாத நிலையில் பலர் அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்ற அச்சத்தில் திரும்பி சென்றனர். அதாவது 20 ஆயிரம் இருக்கை போட்டுவிட்டு 40 ஆயிரம் டிக்கெட்டுகளை ஏற்பாட்டாளர்கள் விற்பனை செய்ததாக தெரிகிறது. மேலும் அந்த நிகழ்ச்சிக்கு திட்டமிட்டதை விட அதிகம் பேர் வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
குழந்தைகளை பலர் அழைத்து வந்ததால் பெரும் சிரமம் அடைந்தனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, கார் நிறுத்தும் இடம் சரியில்லை, மேலும் ஸ்பீக்கர்களும் சரியாக இல்லாததால் ரகுமான் பாடுவதே கேட்கவில்லை என்ற புகார் எழுந்தது. இதனால் டிக்கெட் இருந்தும் ரசிகர்கள் பலர் திரும்பி வீட்டுக்கு சென்றுவிட்டனர். இந்த நிலையில்தான் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications