“சங்கி”களுக்கு கோபம்.. நான் “என்ன” மன்னிப்பு கேட்கனும்?” "2ஜி"யே பார்த்துட்டேன் - கொந்தளித்த ஆ.ராசா
சென்னை: சங்கிகளுக்கு தன் மீது கோபம் என்றும், தான் என்ன மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்லுங்கள் எனவும் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்பியுமான ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஆ.ராசா பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. ஆ.ராசா தன்னுடைய உரையில், "கிறிஸ்துவராகவோ இஸ்லாமியராகவோ பெர்சியராகவோ இல்லாவிட்டால் நீ இந்துதான் என உச்சநீதிமன்றம் சொல்கிறது.
இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா? இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன். சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சவன். இந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன்.

தீண்டத்தகாதவர்
எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவராக இருக்க விரும்புகிறீர்கள்? என்ற கேள்வியை உரக்க எழுப்பினால்தான் அது சனாதனத்தை முறியடிக்கும் அடிநாதமாக அமையும். விடுதலையும் முரசொலியும் தி.க.வும் எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.

பரவும் வீடியோ
தனித் தமிழ்நாடு கேட்டார் பெரியார், ஆனால் பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்ட திமுக அதிலிருந்து விலகி ஜனநாயகத்துக்காக இந்திய ஒருமைப்பாட்டுக்காக இந்தியா வாழ்க என சொல்லிக் கொண்டிருக்கிறோம் என ராசா பேசும் வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

ஆ.ராசா பேச்சு
ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜகவினர் மற்றும் இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று நிகழ்ச்சியொன்றி உரையாற்றிய ஆ.ராசா, "சங்கிகளுக்கு கோபம். இந்துக்களை புண்படுத்திவிட்டார். ஆர்.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார்கள். மன்னிப்பு கேட்பது பெரிய விசயம் இல்லை. நான் மன்னிப்பே கேட்க மாட்டேன் என்றால் அவனை விட முட்டாள், அயோக்கியன் வேறு யாரும் இல்லை.

2ஜியை பார்த்துவிட்டேன்
நான் மன்னிப்பு கேட்க தயார். என்ன மன்னிப்புன்னு சொல்லுங்க. திருப்பதி நாராயணன் என்ற ஒருவர், 'இந்து மதத்தில் சொன்னதெல்லாம் உண்மைதான். ஆனால், இப்போது அது இல்லை. அம்பேத்கர் இந்து சட்டம் கொண்டு வந்த பிறகு ராசா சொன்னது பொறுந்தாது.' என்கிறார்.

ஆளுநர் ரவி
நான் 2ஜியையே பார்த்தவன். இந்த வேலையை என்னிடம் வைத்துக்கொள்ளக்கூடாது. அப்போது இருந்த இந்து மதம் இப்போது என்று திருப்பதி நாராயணன் சொன்னது சரி. ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவியோ சனாதனம் உள்ளது என்கிறார். நான் ஏன் பெரியார் திடலில் இந்து மதம் பற்றி பேசினேன். அதை தெரிந்துகொள்ளுங்கள். அதில் சனாதனம் பற்றி வருகிறது." என்றார்.












Click it and Unblock the Notifications