'திமுக வேட்டி கட்டும்போது பொட்டு வைக்காதீங்க சர்ச்சை'.. ஸ்டாலின் அப்படி சொல்லவில்லை - சேகர்பாபு ஓபன்
சென்னை: திமுக கரை வேட்டி கட்டும்போது பொட்டு வைக்க வேண்டாம் என்று சொன்ன ஆ.ராசாவின் கருத்து அவரது சொந்த கருத்து. திமுக தலைவர் முக ஸ்டாலின் அப்படியெல்லாம் சொல்லவில்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
நீலகிரியில் திமுக மாணவரணி சார்பில் நேற்று நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் ராசா திமுக கரை வேட்டி கட்டிக்கொண்டு பொட்டு வைப்பது குறித்து பேசிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதில் ஆ.ராசா பேசுகையில், சுவாமி கும்பிட வேண்டாம் என்று சொல்லவில்லை. கடவுள் தேவைப்படுபவர்கள் வைத்துக் கொள்ளலாம்.

அன்பு தான் கடவுள், மனிதர்களுக்கு மனிதர் காட்டுகிற இரக்கம் தான் கடவுள், கள்ளமில்லா உள்ளம் அதுதான் கடவுளின் இல்லம், அண்ணா சொன்னது போல் ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்று சொன்னாலும், அப்படிப்பட்ட கடவுள் மீது நமக்கு ஒன்றும் கோபம் இல்லை. வைத்து கொள்ளுங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை.
ஆனால் நீங்களும் பொட்டு வைத்து, சங்கியும் பொட்டு வைக்கும்போதும், நீங்களும் கையில் கயிறு கட்டி சங்கியும் கையில் கயிறு கட்டும்போது எவன் சங்கி எவன் திமுககாரன் என்று வித்தியாசம் தெரியாது. இதனால் தான் சொல்கிறேன். கடவுளை கும்பிடுங்கள். உங்களின் தாயார், அப்பா விபூதி தந்தால் வைத்து கொள்ளுங்கள்.
எல்லாம் முடிந்த பிறகு திமுக வேட்டி கட்டும்போது பொட்டு வைக்காதீங்க. ஏனென்றால் கொள்கை இல்லாமல் போனால் அரசியல் கட்சி அழிந்துவிடும். அதை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் கட்சி தான் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி என்று பேசியுள்ளார். கரை வேட்டி கட்டும்போது பொட்டு வைக்காதீங்க என்று ஆ.ராசா கூறியுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்நிலையில், திமுக கரை வேட்டி கட்டும்போது பொட்டு வைக்க வேண்டாம் என்று சொன்ன ஆ.ராசாவின் கருத்து அவரது சொந்த கருத்து. திமுக தலைவர் முக ஸ்டாலின் அப்படியெல்லாம் சொல்லவில்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: திமுக கரை வேட்டி கட்டும்போது பொட்டு வைக்க வேண்டாம் என்று சொன்ன ஆ.ராசாவின் கருத்து அவரது சொந்த கருத்து. திமுக தலைவர் முக ஸ்டாலின் அப்படியெல்லாம் சொல்லவில்லை. பாஜக தலைவர் அண்ணாமலை நீக்கம் குறித்த கேள்விக்கு, அண்ணாமலை நீக்கம் என்பது அவர்களது கட்சியின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், மோடியும் எடுக்க வேண்டிய முடிவு அது. இதில் நாங்கள் சொல்ல வேண்டியது எதுவும் இல்லை..
எப்படிப்பட்ட தலைவர்கள், எந்த சூழல் வந்தாலும் அவர்களை சந்திப்பதற்கு எங்கள் இயக்க தலைமை வலுவாக இருக்கிறது. இரும்பு மனிதரைப் போல எங்கள் முதல்வர் இருக்கிறார். ஆகவே, களத்தில் களமாடுவதற்கு ஒரு அண்ணாமலை அல்ல ஒருநூறு அண்ணாமலை வந்தாலும் அவர்களைச் சமாளிப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக இருக்கிறது. அது அவர்களுடைய கட்சி பிரச்சனை. பக்கத்து வீட்டில் எட்டி பார்க்கும் பழக்கம் திமுகவிற்கு இல்லை.
நேர் வழியாக தேர்தல் களத்தில் நின்று முதல்வரானவர் ஸ்டாலின். அதனால் குறுக்கு வழியை நாங்கள் எப்போதும் விரும்பாதவர்கள். மற்ற இயக்கத்தில் நடக்கும் குளறுபடிகளை வைத்து ஆதாயம் தேட நினைக்கின்றனர். ஆனால் எங்கள் கொள்கை, இயக்கம், கோட்பாடுகள், லட்சியங்களை மையப்படுத்தி நடைபோடுகிற இயக்கம் திமுக என்றார்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications