"ஸ்டாலினை பார்த்து மோடி பயப்படறார்".. ஆ.ராசா சரவெடி.. "யாரை சொன்னீங்க".. வரிந்து கட்டி வந்த பாஜக
ஆ ராசாவின் பேச்சுக்கு தமிழக பாஜக பதிலடி தந்துள்ளது
சென்னை: "நீதிமன்றங்கள் நியாயம் வழங்குவதால் பிரதமர் மோடி பயப்படுவதில்லை.. ஆனால், பயப்பட வேண்டியது அவர் இல்லை, நீங்கள் தான்" என்று திமுகவின் ஆ.ராசாவிற்கு தமிழக பாஜக பதிலடி தந்துள்ளது.
2 நாட்களுக்கு முன்பு, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி நகராட்சியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நீலகிரி எம்பி ஆ. ராசா பிரச்சாரம் செய்திருந்தார்.
அப்போது அவர் பேசும்போது, "2012-ம் ஆண்டில் அதிமுக சார்பில் வென்ற 40 எம்.பி.க்கள் மூலம் மத்திய அரசிடம் இருந்து எந்த ஒரு திட்டமும் தமிழகத்திற்கு கிடைக்கவில்லை.

பாஜக
40 எம்பிக்களும் பாஜகவிற்கு அடிமைகளாக இருந்தனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, வட மாநிலங்களில் மோடி அலை வீசியபோதிலும், தமிழகத்தில் மோடி அலை வீசவில்லை. மாறாக, தமிழகத்தில் 39 இடங்களில் திமுக வெற்றி பெற்றது. தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை அழிக்க முயற்சி செய்யும் பாஜகவிற்கு மக்கள் வாக்களிக்கவில்லை. தமிழக மக்களுக்காக குரல் கொடுப்பவர்களுக்கு வாக்களித்தனர்.
பிரதமர் மோடி உச்சநீதிமன்றத்தை பார்த்து பயப்படுவதில்லை.

பிரதமர் மோடி
ஆனால், மு.க. ஸ்டாலினையும், தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றம் சென்ற திமுக எம்பிக்களை பார்த்து மட்டுமே பயப்படுகிறார். இந்திய பிரதமரை கட்டுப்படுத்தும் தகுதி தற்போது தமிழகத்தை சேர்ந்த எம்பிக்களுக்கு மட்டுமே உள்ளது. அனைத்து பிரதமர்களும் நாடாளுமன்ற கூட்டம் நடக்கும்போது வருவது வழக்கம். ஆனால், மோடி நாடாளுமன்றத்திற்கு வருவதில்லை" என்று கூறியிருந்தார்.

அதிருப்தி
ஆ.ராசாவின் இந்த பேச்சு, பாஜகவினர் மத்தியில் கடுமையான அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது.. சோஷியல் மீடியாவில் இதுகுறித்த வாதங்களும், எதிர்வினைகளும் இரு கட்சியினரால் நிகழ்த்தப்பட்டன.. இந்நிலையில், தமிழக பாஜக, ஆ.ராசாவின் பேச்சுக்கு பதிலடி தந்துள்ளது.. அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி ஒரு அறிக்கை வெளியிட்டு, ராசாவுக்கு பதில் தந்துள்ளார்.

சந்தர்ப்பவாதம்
அதில், "நீதிமன்றங்கள் நியாயம் வழங்குவதால் பிரதமர் மோடி பயப்படுவதில்லை.. ஆனால், மற்றவர்களின் ஊழலால், இவர்களின் சந்தர்ப்பவாத நடவடிக்கைகளால் நாட்டின் வளர்ச்சிக்கு, ஒருமைப்பாட்டிற்கு ஆபத்து வந்து விடுமோ என்று நினைக்கிறாரோ? அது பயம் அல்ல. எச்சரிக்கை... பயப்பட வேண்டியது நீங்கள் தான்" என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Recommended Video

கோவை - பாஜக
பாஜக சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படுவதாக கடும் விமர்சனங்கள் இருந்து வரும் நிலையில் 8 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் கிறிஸ்தவ சிறுபான்மையினர் அதிகளவில் வசிப்பதால் அவர்களை கவருவதற்காக, பாஜக வேட்பாளர் பெரியசாமி தாமரை சின்னம் பொறித்த பிளாஸ்டிக் தட்டில் இந்த ஜெபமாலை, மெழுகுவர்த்தி போன்ற பொருட்களை கொடுத்து வாக்கு சேகரித்தது பெரும் சர்ச்சையானது. மத அடையாளங்களை கொடுத்து வாக்கு சேகரிப்பதன் மூலம் கிறிஸ்தவ சிறுபான்மையினரின் ஓட்டு பாரதிய ஜனதா கட்சிக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இதுபோன்ற பிரச்சாரத்தில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பெரியசாமி ஈடுபட்டுள்ளது தெரியவந்ததையடுத்து, விமர்சனங்களும் எழுந்தன.
-
இது வெள்ளை அறிக்கை அல்ல.. வெற்று அறிக்கை.. அமைச்சர் மரிய வில்சனை விளாசிய தங்கம் தென்னரசு! -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..!












Click it and Unblock the Notifications