2026ல் 65000 சம்பளம்.. 2012ல் வாங்கிய 28000 சம்பளத்தைவிட மதிப்பு குறைவு.. கசப்பான பொருளாதார நிஜம்
சென்னை: இன்று உங்கள் கைக்கு 65000 சம்பளம் வந்தாலும், 14 வருடங்களுக்கு முன்பு நீங்கள் வாங்கிய 28000க்குத்தான் மதிப்பு அதிகம். ஒருவேளை நீங்கள் அன்று 28000 சம்பளம் வாங்கி, இன்று 65000 தான் வாங்குகிறீர்கள் என்றால், உங்கள் சம்பளம் 8 சதவீதம் குறைந்துள்ளது என்று அர்த்தம். அன்று 28000 சம்பளத்திற்கு ஏற்ற வாழ்க்கை நீங்கள் இன்று வாழ வேண்டும் என்றால், குறைந்தது ₹75,000 முதல் ₹80,000 வரை சம்பளம் வாங்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில், அவர் தனது ஆசைகளையும், தேவைகளையும் குறைத்துக் கொண்டு "வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்" என்பதே நிதர்சனமான உண்மை.
2012-ஆம் ஆண்டு. கையில் முதல் சம்பளமாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட வளர்ச்சியை எட்டிய தொகையாகவோ ₹28,000 கிடைத்தபோது, கிடைத்த சந்தோஷம்.. இன்றும் பலருக்கும் இன்றும் நினைவிருக்கும். அன்று அந்தத் தொகை என்பது வெறும் காகிதம் அல்ல;

அது ஒரு குடும்பத்தின் கனவு, குழந்தைகளின் கல்வி, ஒரு சிறிய சேமிப்பு, மற்றும் நிம்மதியான உறக்கம். ஆனால், காலம் உருண்டோடி 2026-ன் மார்ச் மாதத்தில் அதே மனிதன் இன்று ₹65,000 சம்பளம் வாங்குகிறான். எண்களில் பார்த்தால் சம்பளம் இரட்டிப்பிற்கும் மேல் உயர்ந்துவிட்டது. ஆனால், அன்று இருந்த அதே நிம்மதி இன்று அவனிடம் இருக்கிறதா என்றால், விடை 'இல்லை' என்பதுதான் கசப்பான உண்மை.
எண்களின் மாயாஜாலம்
வெறும் கணித ரீதியாகப் பார்த்தால், ₹28,000-ல் இருந்து ₹65,000 என்பது மிகப்பெரிய வளர்ச்சி போலத் தோன்றும். சம்பள வளர்ச்சி என்று பார்த்தால், 132% உயர்வு போலத் தெரியும். ஆனால், "பணவீக்கம்" எனும் கண்ணுக்குத் தெரியாத அரக்கன், நீங்கள் உழைத்துச் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாயின் மதிப்பையும் மெல்ல மெல்ல அரித்துவிட்டது.
வாங்கும் திறன்
2012-ல் ₹28,000-க்கு இருந்த 'வாங்கும் திறன்' , இன்றைய கணக்குப்படி பார்த்தால் சுமார் ₹75,000-க்குச் சமம். அதாவது, இன்று அவன் வாங்கும் ₹65,000 என்பது, அன்று அவன் வாங்கிய சம்பளத்தை விடக் 8 சதவீதம் குறைவு! அவன் ஓடிக்கொண்டே இருக்கிறான், ஆனால் அவனது வாழ்க்கைத்தரம் அதே இடத்தில் நிற்கிறது அல்லது பின்னோக்கியே செல்கிறது.
நிஜ வாழ்க்கையின் வலி
அன்று பெட்ரோல் பங்கில் ₹500-க்கு பெட்ரோல் போட்டால் டேங்க் முக்கால்வாசி நிறையும். இன்று ₹1000 கொடுத்தாலும் பாதி கூட நிறைவதில்லை. அன்று ஒரு சவரன் தங்கம் ₹22,000-க்கு வாங்கியபோது இருந்த அந்தச் சந்தோஷம், இன்று ₹120,000-ஐத் தாண்டிய விலையைப் பார்த்து மலைப்பாகவும், பயமாகவும் உள்ளது. 2012ல் மந்தைவெளி, மயிலாப்பூரிலேயே 7000க்கு அருமையான வீடு கிடைக்கும்.. இன்று வாடகை குறைந்தது 15000 முதல் 20000 வரை அதே வீடு வாடகைக்கு பெற கட்ட வேண்டியதிருக்கும்.
தங்கம் விலை
பால் விலை அன்று 35ரூபாய் தான் இருந்தது.இன்று 65 ரூபாய் ஆகிவிட்டது. மளிகைச் சாமான்கள் மிக கடுமையாக உயர்ந்துள்ளது. 2012-ல் ஒரு நடுத்தர வர்க்க மனிதன் தனது ₹28,000 சம்பளத்தில் ஒரு சவரனுக்கும் அதிகமான (1.27 சவரன்) தங்கத்தை வாங்க முடிந்தது. 2026-ல் இன்று ₹65,000 சம்பளம் வாங்கும் அதே மனிதனால், தனது முழு மாதச் சம்பளத்தைக் கொடுத்தாலும் அரை சவரன் (0.54 சவரன்) தங்கத்தைக் கூட வாங்க முடியாது. என ஒவ்வொன்றும் 'ராக்கெட்' வேகத்தில் உயர்ந்துள்ளமூ. ஆனால் சம்பளமோ 'ஆமை' வேகத்தில் ஊர்ந்து கொண்டிருக்கிறது.
மனித உணர்வுகளின் சிதைவு
ஒரு நடுத்தர வர்க்க மனிதனுக்குச் சம்பளம் உயரும்போது, அவன் தன் குடும்பத்திற்கு இன்னும் சிறப்பான வாழ்க்கையைத் தர விரும்புவான். ஆனால், நடைமுறையில் நடப்பதோ வேறு. ₹65,000 சம்பளம் வந்தாலும், மாதத்தின் 10-ஆம் தேதியே "அடுத்த மாதம் எப்படி ஓடும்?" என்ற கவலை அவனது தூக்கத்தைத் திருடிவிடுகிறது.
அன்று ₹28,000 வாங்கியபோது இருந்த அதே பழைய இருசக்கர வாகனத்தையோ அல்லது சிறிய வீட்டையோ மாற்றக்கூட அவனால் முடிவது கிடையாது. ஏனென்றால், அவனது கூடுதல் உழைப்பை விலைவாசி உயர்வு முழுவதுமாக விழுங்கிவிடுகிறது.
மக்களுக்கு நன்மை இல்லை
"வளர்ச்சி" என்பது எண்களில் மட்டும் இருந்தால் போதாது, அது மக்களின் வாழ்க்கையில் பிரதிபலிக்க வேண்டும். 2026-ல் ₹65,000 வாங்கும் ஒரு சராசரி இந்தியன், 2012-ல் இருந்ததை விட அதிக அழுத்தத்துடனும், குறைந்த சேமிப்புடனும் வாழ்கிறான் என்பதே நிதர்சனம்.
சம்பளம் என்பது வெறும் எண்களின் விளையாட்டு அல்ல; அது ஒரு மனிதனின் உழைப்பிற்கும், அவன் தியாகத்திற்கும் வழங்கப்படும் அங்கீகாரம். அந்த அங்கீகாரத்தை விலைவாசி உயர்வு காலி செய்யும்போது, ஒரு சாமானிய மனிதன் தன் கனவுகளைச் சுருக்கிக் கொண்டு, வாழ்வதற்காகப் போராடும் இயந்திரமாக மாறிப்போகிறான்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications