நாங்க தலையிட முடியாது! நாசுக்காக ஒதுங்கிய கட்சி தலைகள்.. எல்லாத்தையும் சொல்லிடுவேன்! பொங்கிய புள்ளி
சென்னை: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் புள்ளி ஒருவர் தமிழ்நாட்டில் பெரிய சர்ச்சை ஒன்றில் சிக்கினார். அந்த புள்ளி இப்போது கட்சி நிர்வாகிகளால் கைவிடப்பட்டு உள்ளாராம்.
தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில், கடந்த ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.

இரண்டு வாரங்களுக்கு முன் நாடு முழுக்க லோக்சபா தேர்தல் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கியது. கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
இரண்டு வாரம் முன்பு 2024 மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 லோக்சபா தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடந்தது.
தமிழகத்தில் பதிவான மொத்த வாக்கு சதவீதம் முதலில் 72.09 சதவீதம், 2வது 69.46 சதவீதம் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 69.71 சதவீதம் என 3வது முறையாக மாற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மோதல்: இந்த தேர்தலில் தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த அரசியல் நிர்வாகி பெரிய பிரச்சனை ஒன்றில் சிக்கினார். அந்த நிர்வாகிக்கு எதிராக வழக்கும் தொடுக்கப்பட்டு உள்ளது. அந்த நிர்வாகி தொடர்பாக தேர்தல் ஆணையமும் பல விசாரணைகளை நடத்தி வருகிறது.
இந்த நிலையில்தான் அந்த நிர்வாகி கட்சியில் இருக்கும் சக தலைகளிடம் சென்று உதவி கேட்டுள்ளார். இந்த விவகாரத்தில் தங்களுக்கு ஆதரவாக பேசும்படி உதவி கேட்டுள்ளார். ஆனால் கட்சியின் சக நிர்வாகிகள் யாரும் பேச முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. தனக்கு மிக நெருக்கமாக இருந்த கட்சியின் முன்னாள் தலைவரும் பேச முன்வரவில்லையாம்.
நாங்கள் தலையிட முடியாது.. நாங்கள் உள்ளே வந்தால் பிரச்சனை ஆகிவிடும். எங்கள் பெயரும் கெட்டுவிடும் என்று ஒதுங்கிக்கொண்டனராம். இதனால் அந்த நிர்வாகி கடுமையான கஷ்டத்தில் இருக்கிறாராம்.
அதோடு தலைவரின் செயல்தான் தான் இந்த பிரச்சனையில் எல்லாம் சிக்க காரணம் என்றும் அவர் நினைத்துக்கொண்டு இருக்கிறாராம். எனக்கு ஆதரவாக டெல்லியில் காய் நகர்த்துங்கள். இல்லையென்றால்.. நான் உங்களை பற்றி சொல்லிவிடுவேன்.
உங்களை பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. எல்லாத்தையும் சொல்லிடுவேன், என்று அந்த நிர்வாகி மிரட்டி வருகிறாராம். லோக்சபா தேர்தல் தமிழ்நாட்டில் முடிந்தாலும்.. தேர்தலுக்கு பிந்தைய பரபரப்பு இன்னும் தமிழ்நாட்டில் அடங்கவில்லை. அதிலும் லோக்சபா தேர்தல் காரணமாக கட்சிகளுக்கு இடையே புதிய பிரச்சனைகள், புதிய மோதல்கள் ஏற்பட்டு உள்ளன.
சில கட்சிகளுக்கு உள்ளே உட்கட்சி மோதலும் உச்சம் தொட்டு உள்ளது. அந்த வகையில்தான் தமிழ்நாட்டில் ஒரு கட்சி உள்ளே கடுமையான உட்கட்சி மோதல் ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் ஒரு மோதல்தான் இது என்றும் கூறப்படுகிறது.
கட்சி தலைமை தனக்கு சப்போர்ட் கிடைக்கவில்லை என்றால் வேறு கட்சிக்கு செல்லும் திட்டத்திலும் அந்த நிர்வாகி இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications