பாஜக உள்ளே பட்டாசு வெடிக்க போறேன்! கருப்பு பக்கமெல்லாம் வெளியே வரும்.. சபதம் எடுத்த தலை! அலறிய தாமரை
சென்னை: பாஜகவில் இருந்து ஒரு முக்கிய புள்ளி விரைவில் வெளியேற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு பாஜகவில் ஏகப்பட்ட மாற்றங்கள்.. திருப்பங்கள் நடந்தப்படி இருக்கின்றன. தமிழ்நாட்டில் அதிமுக பாஜக கூட்டணி பிரிவால் உட்சபட்ச அரசியல் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. இந்த குழப்பம் காரணமாக அண்ணாமலைக்கு ஏகப்பட்ட பிரஷர் ஏற்பட்டு இருக்கிறது. டெல்லியில் அதிமுக பாஜக கூட்டணி முறிவு குறித்த பல்வேறு கூட்டங்களில் , ஆலோசனைகளில் அண்ணாமலை கலந்து கொண்டார்.

சமீபத்தில் பிஎல் சந்தோஷ் உடனும் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை செய்தனர். இந்த ஆலோசனைகளில் தமிழ்நாட்டில் பாஜக 9 இடங்களில் போட்டியிடும் என்று முடிவு செய்யப்பட்டு உள்ளதாம். கோவை, ஈரோடு, திருப்பூர், வேலூர், தென் சென்னை, சிவகங்கை, நீலகிரி, ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட 9 தொகுதிகளில் பாஜக போட்டியிட திட்டமிட்டுள்ளதாககூறப்படுகிறது . அண்ணாமலை இதை வெளிப்படையாகவே தொகுதி குறிப்பிடாமல் செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.
எங்கெல்லாம் போட்டி; கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, தென்சென்னையில், வேலூர் இதெல்லாம் பாஜகவிற்கு ஆதரவாக இருக்கும் தொகுதிகள் என்று கூறப்படுகிறது. இங்கே முன்பு பாஜக தலைவர்கள் போட்டியிட்டு உள்ளனர். சில கணிசமான வாக்குகளை பெற்றுள்னனர். இந்த முறை அவர்கள் தூத்துக்குடியில் போட்டியிடவில்லை.
அதற்கு பதிலாக இந்த முறை தென்காசியில் கூட அவர்கள் நிற்க வாய்ப்பு உள்ளது. தேவேந்திரகுல வேளாளர் வாக்குகளை கவர வேண்டும் என்று அவர்கள் தென்காசியில் போட்டியிட முடிவு செய்துள்ளனர். அங்கே வெற்றிபெற முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். சிவகங்கை, நீலகிரி, ராமநாதபுரம், கன்னியாகுமரி இங்கே எல்லாம் அவர்கள் தோல்வி அடைந்தாலும் நல்ல வாக்குகளை பெற்றுள்ளனர். மத ரீதியாக, ஜாதி ரீதியாக பிரிவு உள்ள இடங்களில் வாக்குகளை பெற பாஜக முயன்று வருகிறது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெளியேறும் நபர்: இந்த நிலையில்தான் பாஜகவில் இருந்து ஒரு முக்கிய புள்ளி விரைவில் வெளியேற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில்தான் நடிகை கவுதமி பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பில் அண்ணாமலை மீது மறைமுகமாக கவுதமி புகார்களை வைத்துள்ளார்.
பாஜகவில் இருந்து விலக்கியதற்கு அழகப்பன் என்ற பாஜக நிர்வாகி மீது கவுதமி புகார் வைத்துள்ளார். அதில், சி.அழகப்பன் எனது பணம், சொத்து மற்றும் ஆவணங்களை மோசடி செய்து என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளார். இப்படிப்பட்ட நிலையில் பாஜகவில் இருந்து வேறு ஒரு முக்கிய புள்ளி விரைவில் வெளியேற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
யார் அவர் ?: ஒரு காலத்தில் பாஜகவில் பெரிய பொறுப்பில் இருந்தவர், அரசியல் வாரிசு, அண்ணாமலைக்கு கூட நெருக்கமாக இருந்தவர் அந்த புள்ளி. அவர் கட்சியில் இருந்து வெளியேறிவிட்டாலும்.. இன்னும் அவரின் ராஜினாமா ஏற்கப்படவில்லை. அதாவது அவர் அதிகாரபூர்வமாக இன்னும் உறுப்பினராக இருக்கிறார்.
இப்படி இருக்கும் நிலையில்தான் பாஜகவின் கருப்பு பக்கங்களை அவர் வெளியிட போகிறார். பாஜகவில் நடக்கும் சில தில்லுமுல்லுகளை வெளியிட போவதாக தெரிவித்துள்ளார். கட்சியில் என்னை அவமதித்துவிட்டனர். அவர்களின் ரகசியங்களை சீக்கிரம் வெளியே விடுவேன். இது சபதம் என்று அந்த மூத்த அரசியல் புள்ளி முடிவு எடுத்து உள்ளாராம்.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக?












Click it and Unblock the Notifications