இதுதான் தமிழ்நாடு.. மொத்த இந்தியாவே திரும்பி பார்க்க போகும் சம்பவம்! 19 ஏரியாக்களில் நடக்கும் மேஜிக்
சென்னை: தமிழ்நாட்டில் தற்போது சிறிய.. மூன்றாம் கட்ட நகரங்கள் எல்லாம் வேகமாக வளர தொடங்கி உள்ளன. ஒரு காலத்தில் சென்னை, கோவை மட்டும் வளர்ச்சி அடைந்து வந்த நிலையில் தற்போது பல சிறிய மாவட்டங்கள், 3 டயர் சிட்டிகளில் சிப்காட் அமைக்கும் பணிகளை தொடங்கி உள்ளன.தமிழ்நாடு முழுக்க பல மாவட்டங்களில் சிப்காட் அமைக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் பல்வேறு நகரங்களில் அமைக்கப்படும் சிப்காட் குறித்து அமைச்சர் டிஆர்பி ராஜா சமீபத்தில் அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழ்நாட்டின் வளர்ச்சியில் சிப்காட் பெரிய அளவில் பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டில் அதிக அளவில் தொழிற்சாலைகள் அமைய சிப்காட் மிகப்பெரிய காரணம் ஆகும்.

அந்த வகையில் 8 இடங்களில் சிப்காட் அமைக்க தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 8 புதிய SIPCOT பூங்காக்களை தமிழக அரசு அறிவித்துள்ளது:
1. ஸ்ரீபெரும்புதூர்- 750 ஏக்கர்
2. சென்னை ORR - 200 ஏக்கர்
3. ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி - 1,000 ஏக்கர்
4. பெரம்பலூர்- 100 ஏக்கர்
5. திருவெறும்பூர், திருச்சி- 150 ஏக்கர்
6. கும்மிடிப்பூண்டி, சென்னை - 1,500 ஏக்கர்
7. அரியலூர்- 150 ஏக்கர்
8. மன்னார்குடி- 150 ஏக்கர்
அசத்தல் முடிவு: அதன் ஒரு கட்டமாக பின் வரும் நகரங்களை புதிய தொழில் பூங்காக்களின் அமைப்பை சிப்காட் அமைக்க தொடங்கியுள்ளது.
1. திருமுடிவாக்கம், சென்னை
2. தேனி (உணவு+ மல்டி பார்க்)
3. காட்பாடி
4. பணப்பாக்கம், ராணிப்பேட்டை
5. வாரப்பட்டி, கோயம்புத்தூர்
6. தருமபுரி
7. நாகப்பட்டினம்
8. பாடலூர், பெரம்பலூர்
9. விருதுநகர்- பி.எம்.மித்ரா டெக்ஸ்டைல் பார்க்
10. செங்காத்தாகுளம், திருவள்ளூர்
11. சிவகங்கை (2 கட்டங்கள்)
12. ஏ.சாத்தனூர் SEZ, கள்ளக்குறிச்சி
13. வைப்பார், தூத்துக்குடி
14. வேலாயுதபுரம், தூத்துக்குடி
15. மணக்குடி, ராமநாடு
16. சேலம் ஜவுளி பூங்கா
17. தலைவாசல், கள்ளக்குறிச்சி
18. சக்கரகோட்டை, ராமநாடு
19. மணல்லூர் (EV & EMC), திருவள்ளூர்
அடிக்கல் நாட்டு விழா: இது போக தமிழ்நாட்டில் புதிய தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளன. மொத்தமாக 6,035 ஏக்கரில் இந்த பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
1. விருதுநகர்
2. தருமபுரி
3. தேனி
4. சிவகங்கை
5. தூத்துக்குடி (வைப்பார்)
6. ராமநாதபுரம்-1
7. ராமநாதபுரம்-2
ஆகிய தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளன. விரைவில் இதற்கான அடிக்கல் நாட்டு விழாக்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஐடி பார்க்: ஏற்கனவே தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை உட்பட 10 நகரங்களில் ஐடி பார்க் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சமீபத்தில் தெரிவித்தது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. சமீபத்தில் கூட சேலம், தூத்துக்குடி மற்றும் தஞ்சாவூரில் என்று ஒரே நாளில் மூன்று டைடல் பார்க் அமைக்க முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
மதுரை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள ஐடி பூங்காக்களில் புதிய நிறுவனங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் ஓசூர், கோவை, சென்னை உள்ளிட்ட 10 இடங்களில் ஐடி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையானது தாமதமின்றி செயல்படுத்தப்படும், என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
திருச்சி பூங்கா: இந்த நிலையில் திருச்சி மாநகராட்சி சார்பில் திருச்சி பஞ்சப்பூரில் டைடல் பூங்கா அமைக்க 14.1 ஏக்கர் நிலம் ஒதுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) மற்றும் தமிழ்நாடு எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் ஆஃப் தமிழ்நாடு (ELCOT) ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான டைடல் பார்க் லிமிடெட் நிறுவனத்திடம் ஐடி மற்றும் ஐடி அலுவலகம் கட்டுவதற்காக திருச்சி மாநகராட்சி பஞ்சப்பூரில் 8.9 ஏக்கர் நிலத்தை இறுதி செய்துள்ளது.
இந்த நிலையில்தான் முந்தைய ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, பெரிய அலுவலக இடத்துக்கு புதிதாக தற்போது இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சில், டைடல் பூங்காவிடம் நிலத்தை ஒப்படைப்பதற்கு முன் அதன் மதிப்பை மதிப்பீடு செய்ய தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
திருச்சியில் இத்திட்டத்திற்காக 2023-24 பட்ஜெட்டில் மாநில தொழில் துறையும் ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. பல இட ஆய்வுகளுக்குப் பிறகு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு, பஞ்சப்பூர் வருவாய் கிராமத்தில் மாநகராட்சியின் 8.9 ஏக்கர் நிலம் திட்டத்திற்கு சாத்தியமானது என்று தெரிவித்தது. இது தற்போது 14.1 ஏக்கராக மாற்றப்பட்டு உள்ளது.
நல்ல செய்தி: மணப்பாறை, திண்டிவனம் மற்றும் தேனியில் சிப்காட் அமைக்கப்பட உள்ளது. மெகா புட் பார்க் அமைக்க, அங்கே உணவு பொருட்களை சந்தைப்படுத்த ஆலோசகரை நியமிப்பதற்கான டெண்டர்களை வெளியிட்டு உள்ளது. அதன்படி இங்கே பிரம்மாண்ட புட் கோர்ட் அமைக்கப்பட உள்ளது.
கள்ளக்குறிச்சியில் தொழிற்சாலை: இப்படி தமிழ்நாட்டில் அடுத்தடுத்து பல மாவட்டங்களில் ஐடி பூங்கா, தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் பல இடங்களில் தொடங்கி உள்ளன.
அந்த வகையில் கள்ளக்குறிச்சியில் 190.42 ஏக்கரில் காலணி உற்பத்திக்காக புதிய தொழில் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி சிப்காட் விண்ணப்பித்துள்ளது. தைவானின் Pou Chen 20,000+ பேருக்கு வேலைவாய்ப்புடன் இங்கு ஒரு ஆலைக்காக 2,302 கோடி முதலீடு செய்கிறது
தைவானின் காலணி தொழிற்சாலை துறையில் கொடி கட்டி பறக்கும் இது தற்போது கள்ளக்குறிச்சியில் தொழிற்சாலை அமைக்க முடிவு செய்துள்ளது. இப்போது தேனியில் ஐடி பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்து உள்ளது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications