சென்னை விமான நிலையம் வந்த விஜய்! திடீரென லக்கேஜ் மீது ஏறி அமர்ந்த நல்ல பாம்பு! களேபரமான ஏர்போர்ட்
சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு வந்த பயணியின் லக்கேஜில் ஒரு நல்ல பாம்பு படுத்திருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் வந்து அந்த பாம்பை பிடித்தனர்.
சென்னை விமான நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் விமானச் சேவை இயக்கப்படுகிறது. இதனால் 24 மணி நேரமும் இங்கு மக்கள் கூட்டம் அலைமோதும்.

இந்த நிலையில் சவுதி அரேபியாவிலிருந்து சென்னைக்கு விஜய் என்பவர் வந்திருந்தார். அவர் தனது லக்கேஜுகளை செக் இன் செய்து விட்டு தனது வீட்டிற்கு செல்ல வெளியே இருந்த டாக்ஸியை அணுகினார்.
டாக்ஸி
பிறகு டாக்ஸியின் பின்பகுதியில் உள்ள பூட்டில் லக்கேஜ்களை வைக்க ஆயத்தமானார். அப்போது அங்கு வந்த மூன்றரை அடி உயர நல்ல பாம்பை பார்த்து அச்சமடைந்தார். அங்கிருந்தோரும் சிதறி ஓடினர்.
விஷப் பாம்பு
அப்போது அந்த பாம்பு, விஜய்யின் பையின் மீது அமர்ந்துவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், விமான நிலைய அதிகாரிகளிடம் தெரிவித்தார். அவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஒரு மணி நேரம் ஆச்சு
இதையடுத்து ஒரு மணி நேரம் கழித்து வந்ததாக சொல்லப்படும் தீயணைப்புத் துறையினர் பையின் மேல் படுத்திருந்த நல்லப்பாம்பை பிடித்து பேரலில் போட்டு கட்டி வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். அந்த பாம்பை பாதுகாப்பான காட்டு பகுதியில் விட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது.
படையே நடுங்கும்
பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். அதிலும் விஷப்பாம்புகளிடம் எப்போதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பாம்பு பிடிக்கும் வீரர்களே நிறைய பேர் பாம்பு பிடிக்கும் போது அது கடித்ததால் இறந்துள்ளனர்.
நெளியும் தன்மை
ரப்பர் போல் வளைந்து நெளியும் தன்மை கொண்டதால் கொஞ்சம் ஏமாந்தாலும் பாம்பு கடித்து விடும். இன்னும் சிலர் பாம்பை பிடித்துவிட்டு அதனுடன் செல்ஃபி எடுக்க விரும்புவார்கள். அப்போது ஏமாறும் போது அந்த பாம்பு அவர்களிடம் இருந்து தப்பிவிடும். இல்லாவிட்டால் யாரையாவது தாக்கிவிடும்.
பாம்பு கடித்தால் மரணம்
பாம்பு கடித்தால் மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிலும் விஷப்பாம்பு கடித்தால் உடனடியாக நரம்பு மண்டலத்தை பாதித்து மாரடைப்பை ஏற்படுத்திவிடும். பாம்பு கடித்தவர்களுக்கென அரசு மருத்துவமனையில் தனியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதர்
இந்த பாம்புகள் முன்பெல்லாம் காடு, புதர், புதிய கட்டடங்கள், பயன்படுத்தப்படாத பாழடைந்த கட்டடம் உள்ளிட்ட பகுதிகளில்தான் இருக்கும். ஆனால் தற்போது இரு சக்கர வாகனங்கள், கார், ஏசி பாகம் உள்ளிட்ட இடங்களில் இருக்கிறது.
பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்?
இவ்வாறு நுழையும் பாம்புகளை பாம்பு பிடி வீரர்களும் தீயணைப்பு வீரர்களும் பிடித்து் கொண்டு போய் வனப் பகுதிகளுக்குள் விட்டுவிடுகிறார்கள். நல்ல பாம்பு, சாரை பாம்பு, கட்டு விரியன், கண்ணாடி விரியன் உள்ளிட்ட பாம்புகள் எல்லாம் மிகவும் விஷம் கொண்ட பாம்புகள். மேலும் பாம்பு கடித்துவிட்டால் எழுந்து ஓடுவது, வாயால் உறிஞ்சி விஷத்தை எடுப்பது போன்றவற்றை செய்யக் கூடாது. அது போல் கத்தியால் கீறி விஷத்தை எடுக்கும் வேலைகளையும் செய்யவே கூடாது. பாம்பு கடித்த இடத்திற்கு மேலே துணியை டைட்டாக கட்டுதலும் கூடாது. நேராக மருத்துவமனைக்கு சென்று விஷ முறிவு மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும். நோயாளி தூங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.












Click it and Unblock the Notifications