Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாம்பரம் டூ வேளாங்கண்ணி.. சென்னையில் இருந்து ஈஸியாக போகலாம்... சிறப்பு ரயில் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழா வரும் ஆகஸ்ட் 29 தேதி தொடங்க உள்ளதையொட்டி, அதற்கு முந்தைய நாளான ஆகஸ்ட் 28ம் தேதி தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருந்தும், கோவாவில் இருந்தும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழா ஆண்டுதோறும் ஆக.29-ஆம் தேதி தொடங்கி 10 நாள்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த திருவிழாவை காண பல்லாயிரம் பக்தர்கள் வருவார்கள். பலர் பாதை யாத்திரையாக வருவார்கள்.

Velankanni train chennai

வெளிமாநில பக்தர்கள், வெளிமாவட்ட பக்தர்கள் ரயில்கள் மூலம் வருவார்கள். இவர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படுவது வழக்கம். இதேபோல் கேரளாவில் இருந்தும், கர்நாடகாவில் பெங்களூரில் இருந்தும், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்தும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் வேளாங்கண்ணியில் நிகழாண்டு புனித ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழா ஆகஸ்ட் 29-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த திருவிழாவையொட்டி, சென்னை தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு ஆகஸ்ட் 28ம் தேதி சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பின் படி, ஆகஸ்ட் 28ம் தேதி இரவு 7 மணியளவில் தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், ஆகஸ்ட் 29ம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் வேளாங்கண்ணிக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில் ஆகஸ்ட் 30ம் தேதி நள்ளிரவு 12.30 மணியளவில் புறப்பட்டு காலை 8.30க்கு தாம்பரம் வந்தடையும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருந்தும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், "வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து விழாக்கால சிறப்பு ரயில் வரும் 28-ம் தேதி மற்றும் செப்டம்பர் 4-ம் தேதி ஆகிய நாட்களில் பிற்பகல் 3.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.55 மணிக்கு வேளாங்கண்ணிக்கு சென்றடையும்.

இதே போல் மறு வழித்தடத்தில் வேளாங்கண்ணியில் இருந்து விழாக்கால சிறப்பு ரெயில் (வண்டி எண்.06116) வரும் ஆகஸ்ட் 29 மற்றும் செப்டம்பர் மாதம் 5-ம் தேதி ஆகிய நாட்களில் இரவு 7.10 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம் சென்ட்ரலை மறுநாள் அதிகாலை 6.55 மணிக்கு சென்றடையும்.

இந்த ரயில்கள் நெய்யாற்றின்கரை, குழித்துறை, இரணியல், நாகர்கோவில் டவுன், வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது" இவ்வாறு கூறியிருந்தது.

இதனிடையே வேளாங்கண்ணி பேராலய ஆண்டுத் திருவிழாவை முன்னிட்டு கோவாவில் இருந்தும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த விழாவிற்கு பக்தா்கள் எளிதாக வந்து செல்லும் வகையில், தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 27, செப்டம்பா் 2 மற்றும் 6-ஆம் தேதிகளில் கோவாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு விழாக்கால சிறப்பு ரயில் (07361) இயக்கப்படுகிறது

மறுமாா்க்கத்தில் வேளாங்கண்ணியில் இருந்து ஆகஸ்ட் 29, செப்டம்பா் 4 மற்றும் 8-ஆம் தேதிகளில் கோவாவிற்கு சிறப்பு விரைவு ரயில் (07362) இயக்கப்படும். இந்த ரயிலில் இரண்டடுக்கு குளிா் சாதனப் பெட்டி 2, மூன்றடுக்கு குளிா்சாதனப் பெட்டி 4, சாதாரண படுக்கை வசதி பெட்டி 10, பொதுப்பெட்டி 2, இரண்டாம் வகுப்பு பெட்டி 2 இணைக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவாவில் இரவு 9.55 மணிக்கு புறப்படும் ரயில் மூன்றாம் நாள் அதிகாலை 1.30 மணிக்கு வேளாங்கண்ணியை வந்தடையும். இதேபோன்று, வேளாங்கண்ணியில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்படும் ரயில் மூன்றாம் நாள் அதிகாலை 12.15 மணிக்கு கோவாவிற்கு சென்றடையும் என்று ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் நாகை, திருவாரூா், தஞ்சாவூா், திருச்சி, கரூா், நாமக்கல், சேலம், பெங்களூரு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+