என் பொண்ணுக்கு என்ன ஆச்சு.. தூக்கில் தொங்கிய மகள்.. கதறிய பெற்றோர்!
சென்னையில் ஐஐடி மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னை: "என் பொண்ணுக்கு என்ன ஆச்சு? ஏன் போன் எடுக்கல" என்று பெற்றோர் கதறிய பின்னர்தான், மாணவியின் மரணம் வெளியே தெரியவந்தது.
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ரஞ்சனா குமாரி. 25 வயதாகிறது. இவர் சென்னை ஐஐடியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி ஆராய்ச்சி பட்ட மேற்படிப்பில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
ஹாஸ்டலில் தங்கி படிப்பதால், தினமும் தன் அம்மா- அப்பாவுடன் ரஞ்சனா குமாரி பேசுவது வழக்கம். ஆனால் 2 நாளாக மகளிடமிருந்து எந்த போனும் அவர்களுக்கு வரவில்லை.

போன் எடுக்கவில்லை
நியூ இயர் வாழ்த்து சொல்லவும் மகள் கூப்பிடவில்லை. போன் செய்தாலும் மாணவி எடுக்கவில்லை. இதனால் குழப்பமும், பயமும் அடைந்த பெற்றோர், உடனடியாக ஐஐடி ஹாஸ்டல் வார்டனுக்கு போன் செய்து, தகவலை சொன்னார்கள்.

அதிர்ச்சி
"என் பொண்ணுக்கு என்ன ஆச்சுன்னு தெரியல? ஏன் போன் எடுக்கல" என்று கேட்டு கதறி அழுதார்கள். இதையடுத்து, ஊழியர்கள் மாணவி தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்தால் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.

கதவை உடைத்தனர்
இதையடுத்து கோட்டூர்புரம் போலீசார் உதவியுடன் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோதுதான், மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டதும் அதிர்ச்சி அடைந்தார்கள். எதற்காக மாணவி தற்கொலை செய்து கொண்டார் என உடனடியாக தெரியவில்லை.

செல்போன் ஆய்வு
காதல் விவகாரம் ஏதாவது இருக்குமா? அல்லது வேறு ஏதாவது விஷயமா என்றும் தெரியவில்லை. "ரூமுக்கு போய் தூங்குகிறேன்" என்று நண்பர்களிடம் சொல்லிவிட்டுதான் அறைக்கு சென்றிருக்கிறார். ஆனால் அதற்கு பிறகு அவர் வெளியே வரவே இல்லையாம். இதனால் போலீசார் ரஞ்சனா குமாரியின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications