ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலை பகுதிகளில் வீட்டு மனை வாங்கியவர்களுக்கு அரசு தரும் சூப்பர் வாய்ப்பு
சென்னை: ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி உள்பட தமிழ்நாட்டின் மலைப்பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்படாத மனைகள், மனைப்பிரிவுகள் வரன்முறைக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் 30.11.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை www.tnlayouthillareareg.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு நகர் ஊரமைப்பு இயக்குனர் பா.கணேசன் அறிவித்துள்ளார்.
நகர் ஊரமைப்பு இயக்குனர் பா.கணேசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "மலையிடப்பகுதிகளில் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பகுதியாகவோ அல்லது முழு எண்ணிக்கையிலான மனைகள் விற்கப்பட்ட அங்கீகரிக்கப்படாத மனைகள் மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கு வசதியாக, அரசு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசாணை எண்.66, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, நாள்.30.3.2020-ல் விதி திருத்தத்தை வெளியிட்டுள்ளது.

இதன்படி, பொதுமக்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மேலும் வாய்ப்பை வழங்கி விண்ணப்பங்களுக்கான கால வரம்பை 30.11.2025 வரை நீட்டித்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை www.tnlayouthillareareg.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதன்மூலம், மலையிடப்பகுதிகளில் அங்கீகரிக்கப்படாத மனைகள் மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த பொதுமக்கள் இந்த வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது
அதேநேரம் நீர்நிலைகள் மீது (வாய்க்கால், தொட்டி, ஏரி, குளம், ஆறு) ஆகியவற்றின் மீது அமைக்கப்பட்ட மனைப்பிரிவுகள், அரசு புறம்போக்கு நிலத்தின் மீது அமையப்பட்டுள்ள மனைப்பிரிவுகள், திறந்த வெளி ஒதுக்கீடு இடங்கள் (Open space reservation(OSR), பூங்கா, விளையாடுமிடங்கள் அமையப்பெற்ற மனைப்பிரிவுகள், அனுமதி பெறப்பட்ட மனைப்பிரிவில் திறந்த வெளி ஒதுக்கீடு இடங்கள், பூங்கா, விளையாடுமிடங்கள் ஒதுக்கீடுகளில் பிரிக்கப்பட்ட மனைகள், அடுத்த நிலத்திற்கு வழியாக அமையும் காலிமனை (Vacant Plot), உத்தேச சாலை மீது அமையப்பெற்ற மனைகள், rail corridors (ம) தெருக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் அமையும் மனைகள், பொதுப்பாதை (ம) தெருக்களை ஆக்கிரமிப்பு செய்து பிரிக்கப்பட்ட மனைகள், நில உச்ச வரம்பு சட்டம் 1978 பிரிவு 24-ன் படி உள்ள மனையிடம், அதிக உயர் அழுத்தம் மின் பாதைக்கு கீழ் பிரிக்கப்பட்ட மனைகள் ஆகிய மனை பிரிவில் மனை வாங்கியவர்கள் விண்ணப்பிக்க முடியாது. அவர்கள் விண்ணப்பித்தாலும் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications