கிள்ளிட்டாரு.. சில்மிஷ வாத்தியாரை பற்றி சிறுமிகள் சொன்னதுமே.. பதறிய பெற்றோர்கள்.. தட்டிதூக்கிய போலீஸ்
இதற்கு முன்னர் சென்னைக்கு அருகே திருநின்றவூரில் இதேபோல பள்ளி மாணவியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட பள்ளி தாளாளர் மகன் கைது செய்யப்பட்டார்.
சென்னை: சென்னை வியாசர்பாடியில் தனியார் பள்ளி மாணவிகளிடம் ஆசிரியரே பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
சென்னை வியாசர்பாடியையடுத்த எருக்கஞ்சேரி பகுதியில் தனியார் உயர்நிலை பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இருபாலர் பள்ளியான இதில் நூற்றுக்கணக்கில் மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளியில் சில நாட்களுக்கு முன்னர் பாலியல் குற்றங்களுக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதனையடுத்து 7ம் வகுப்பை சேர்ந்த இரண்டு சிறுமிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கூறிய தொலைப்பேசி எண்ணுக்கு தொடர்ந்து போன் செய்திருக்கிறார்கள்.
கடந்த மூன்று நாட்களாக தன்னுடைய போனை கொண்டு குழந்தைகள் யாருக்கோ போன் செய்துகொண்டிருப்பதை தாய் கண்டுபிடித்துள்ளார். இதனையடுத்து குழந்தைகளிடம் விசாரித்ததில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, பள்ளியின் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தங்களுக்கு பிரச்னை இருந்தால் 1098 எனும் எண்ணுக்கு தொடர்புகொள்ள வேண்டும் என்று கூறியதாகவும் எனவேதான் அந்த எண்ணுக்கு தொடர்ந்து போன் அடித்ததாகவும் குழந்தைகள் கூறியுள்னர்.

புகார்
மேலும், இவ்வாறு முயன்றதில் யாரும் போனை எடுக்காததால் மீண்டும் மீண்டும் முயன்றதாகவும் கூறியுள்ளனர். சரி அப்படி என்ன உங்களுக்கு பிரச்னை என்று தாய் கேள்வியெழுப்பியதற்கு, தாங்கள் சரியாக படிக்காததால் ஆசிரியர் ஒருவர் அந்தரங்க இடங்களில் அடிக்கடி கிள்ளுவதாக குழந்தைகள் கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ந்த தாய் உடனடியாக எம்கேபி நகர் அனைத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் உடனடியாக ஆசிரியர் பிரேம் ஆனந்தை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அதேபோல இந்த சம்பவம் குறித்து குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

விசாரணை
குழு உறுப்பினர்களும் தற்போது குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆசிரியர் பிரேம் ஆனந்த், பள்ளியில் பல்வேறு மாணவிகளிடம் இதே போன்று நடந்துக்கொண்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இவர் குடிபோதைக்கு அடிமையானவர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பெற்றோர்கள் கூறுகையில், ஆசிரியர்களை நம்பிதான் நாங்கள் மாணவிகளை பள்ளிக்கு அணுப்புகிறோம். ஆனால் அங்கேயே பாதுகாப்பு இல்லையெனில் என்ன செய்வது? என்று கேள்வியெழுப்பியுள்ளனர். இதற்கு முன்னர் கடந்த ஆண்டு நவம்பரில் இதேபோல பள்ளி தாளாளர் ஒருவர் பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்டிருந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதற்கு முன்னர்
திருநின்றவூரில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வந்தது. இப்பள்ளியில் பயிலும் 12ம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த சில நாட்களாக பள்ளிக்கு போகாமல் வீட்டிலேயே இருந்திருக்கிறார். இது குறித்து பெற்றோர் விசாரித்த நிலையில், பள்ளியில் தான் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாக கூறியுள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத பெற்றோர் திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்றுக்கொள்ள மறுத்த காவல்துறையினர் சமாதானம் பேச முயன்றதாக சொல்லப்படுகிறது. பின்னர் பள்ளி முன்பு 100க்கும் அதிகமான பெற்றோர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம்
போராட்டத்தையடுத்து பள்ளி தாளாளரின் மகன் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த பிரச்னை தற்போதுதான் ஓய்ந்துள்ள நிலையில் தற்போது வியாசர்பாடி பள்ளி பிரச்னை பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications