சென்னை பிராட்வேயில் செல்போனை எடுத்தவருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. கடைசியில் வீடு தேடி வந்த போலீஸ்
சென்னை: சென்னை பிராட்வேயில் செல்போனை தவறவிட்ட முதியவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது செல்போனை எடுத்த இளைஞர், அதன் மூலம் சுமார் 6 லட்சம் ரூபாய்க்கு செல்போன் வாங்கி உள்ளார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நமது செல்போன் மிக முக்கியமான ஒன்று, அதை மட்டும் தவறவிட்டால் உடனே நம்பரை பிளாக் செய்ய வேண்டும். அதேபோல் செல்போனில் உள்ள ஐஎம்எஐ நம்பரை முன்னரே நோட் பண்ணி வைத்துக்கொள்ள வேண்டும். அதை வைத்து காவல்துறையில் புகார் அளித்தால் உங்கள் செல்போன் எங்கிருந்தாலும் கண்டுபிடித்துவிட முடியும். செல்போனில் கண்டிப்பாக பாஸ்வேர்டு போட வேண்டும்.

செல்போனில் லாக்போட்டிருந்தால் அதை அழிக்க அவர்களுக்கு குறைந்தது சில மணிநேரமாகவது ஆகும். எனவே அதற்குள் நீங்கள் செல்போன் நம்பரை பிளாக் செய்துவிடலாம். ஏனெனில் உங்கள் செல்போனை வைத்து உங்கள் வங்கி கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் யார் வேண்டுமானாலும் எடுக்க முடியும். அதை கண்டுபிடித்துவிட முடியும் என்றாலும், திருடியவர்களிடம் இருந்து பணத்தை வாங்குவது அவ்வளவு எளிதானது அல்ல.
எனவே செல்போன் தொலைந்தால் உடனே சிம்மை பிளாக் செய்யுங்கள். அதேபோல் செல்போன் தொலைந்தது குறித்து உடனே பிளாக் செய்யுங்கள். மேலும் வங்கி கணக்கு பாஸ்வேர்டுகளை செல்போனில் சேமித்து வைத்திருந்தால், உங்கள் இணையதள வங்கி பாஸ்வேர்டை உடனே மாற்றுங்கள். உங்கள் இமெயில் பாஸ்வேர்டுகளையும் மாற்றுங்கள். இல்லாவிட்டால் பெரிய அளவில் உங்களிடம் பணம் பறித்துவிடும். சென்னை பிராட்வேயில் செல்போனை தவறவிட்ட முதியவர் , அந்த செல்போனால் 6 லட்சத்தை பறிகொடுத்துள்ளார்.

சென்னை பிராட்வே, தையப்பன் தெருவைச் சேர்ந்தவர் தியோடோரே என்பவருக்கு 66 வயது ஆகிறது. இவர், கடந்த 19 -ந்தேதி ஆட்டோவில் மண்ணடியில் இருந்து வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது அவர் தனது செல்போனை தவறவிட்டார். இந்த நிலையில் முதியவர் தியோடோரே தனது வங்கி கணக்கை பரிசோதித்த போது 5 தவணையாக ரூ.6 லட்சத்து, 4,644 எடுக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தியோடோரே இது குறித்து முத்தியால்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் சைபர் கிரைம் உதவியுடன் குற்றவாளியை கண்டுபிடித்தனர்.
விசாரணையில் முதியவர் தவற விட்ட செல்போன் பிராட்வே காக்கா தோப்பைச் சேர்ந்த நூருதீன் (29) என்பவர் எடுத்திருந்தது தெரியவந்தது. பின்னர் அந்த செல்போனை பயன்படுத்தி, முதியவரின் வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் பணத்தை எடுத்து அதன் மூலம் 5 விலை உயர்ந்த செல்போன்கள் வங்கியதும் தெரியவந்தது . இதையடுத்து நூருதீனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications