போலீஸுக்கு பயந்து கிணற்றில் ஒளிந்த திருடன்! .. எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையான சோகம்
Recommended Video

சென்னை: போலீஸாருக்கு பயந்து கொண்டு கிணற்றில் ஒளிந்து கொண்ட திருடன் 30 மணி நேரத்துக்கு பிறகு மீட்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
சென்னை அம்பத்தூர் சந்திரசேகரபுரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தேகம்படும்படி நபர் ஒருவர் சுற்றி திரிந்தார். அவரை ரோந்து பணியில் இருந்த அம்பத்தூர் காவல்துறையினர் அழைத்து விசாரிக்க முயன்றனர்.
அப்போது அவர் அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அங்கிருந்து ஓடியவர் போலிசாருக்கு பயந்து கிணற்றில் குதித்துள்ளார். போலிசார் சுற்றிலும் தேடி விட்டு அக்கம் பக்கத்தில் விசாரித்து சென்றுள்ளனர்.

குரல் மட்டும் கேட்கிறதே
இந்நிலையில் நேற்று மதியம் கிணறுக்குள் இருந்து "காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என குரல் கேட்டது. அக்கம்பக்கத்தினர் சுற்றி பார்த்துவிட்டு யாருமே இல்லை, குரல் மட்டும் கேட்கிறதே என அவர்களுக்குள் பேசிக் கொண்டனர்.

தகவல் சொல்ல வேண்டாம்
உடனே திருடன், நான் கிணற்றுக்குள் இருக்கிறேன். தூர்வாருவதற்காக வந்தபோது விழுந்துவிட்டேன். என்னை தூக்கிவிடுங்கள் என உதவி கேட்டுள்ளார். மேலும் போலீஸுக்கெல்லாம் தகவல் சொல்ல வேண்டாம் எனவும் டிமான்ட் செய்தார்.

போலீஸுக்கு தகவல்
இதையடுத்து சந்தேகமடைந்த ஊர்மக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு துறையினரின் உதவியுடன் வந்த போலீஸார் அவரை மீட்டனர். விசாரணையில் வண்ணாரபேட்டையை சேர்ந்த
ஜெயசிங் (46) அவர் மீது பல கொள்ளை மற்றும் வழிபறி வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

உதவிக்கு அழைப்பு
வழிப்பறியில் ஈடுப்பட முயன்ற
போது காவல்துறையினர் துரத்தியதால் கிணற்றுகுள் ஒளிந்து கொண்டதாகவும், கிணற்று மேல் இரும்பினால் மூடியுள்ளதால் மீண்டும் மேலே ஏற முடியாமல் கீழே விழுந்து கைகளில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் உதவிக்கு அழைத்தாகவும் கூறியுள்ளார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications