Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிட்னி பெயிலியர்.. பாதித்தவரின் உண்மைக்கதை.. இதை பார்த்தா மறந்தும் அந்த தப்பு செய்யமாட்டீங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிட்னி பெயிலியர் என்பது இப்போது இந்தியாவில் 7 பேரில் ஒருவருக்கு வருகிறது. கிட்னி பெயிலியர் ஆவதற்கு அதாவது சிறுநீரகம் பாதிக்கப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், முக்கியமான காரணமாக இருப்பது போதிய தண்ணீர் அருந்தாமல் இருப்பது, அதேபோல் கண்டபடி மது அருந்துவது, புகைப்பிடிப்பது முக்கிய காரணமாக இருக்கிறது.

இந்த கட்டுரையில் கிட்னி பாதித்தவரின் வாழ்க்கையை பதிவு செய்ய விரும்புகிறோம். ஏனெனில் அவர் எப்படி கிட்னி பெயிலியரால் பாதிக்கப்பட்டார். அவரது வாழ்க்கை எப்படி திசை மாறியது, அவர் இப்போது எப்படி இருக்கிறார் என்பதை பாருங்கள்.

இந்த உண்மைக்கதை திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்தது. வாழ்க்கையை மனம் போன போக்கில் வாழ்ந்தவர் அந்த இளைஞர். 18 வயதிற்கு முன்பே மதுவை தொட்ட போது அற்புதமாக இருந்திருக்கிறது. பைக் ரைட் பயணம் அவருக்கு மிகவும் பிடிக்கும். மலைகளின் இளவரசியாம் கொடைக்கானலுக்கும், சுற்றியுள்ள மலைவாசல் தளங்களுக்கும் அடிக்கடி செல்வது அந்த இளைஞருக்கு பிடிக்கும்.

அதிகமான மது

அதிகமான மது

வாரத்தில் ஒரு நாள் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் மது அருந்தியவர், வெளியே செல்லும் போதெல்லாம் மது அருந்தினார். சம்பாதித்த பணத்தை நண்பர்களுடன் அந்த வாரமே செலவு செய்துவிடுவார். மிகவும் ஜாலியான நபர். தன் நண்பர்களிடம் காசு இல்லை என்றாலும் வேண்டிய அளவிற்கு சாப்பாடு,மதுவை வாங்கி கொடுப்பார்.

திருந்தவில்லை

திருந்தவில்லை

கொஞ்சம் கொஞ்சமாக வயது ஏறியது. அவருக்கு எடையும் கூடியது. காலை நேரம், மதிய நேரம், இரவு நேரம் என மதுவையே வாழ்க்கை துணை போல் எண்ணி வாழ்ந்தவருக்கு கல்யாணம் செய்து வைத்தால் சரியாக இருக்கும் என்று நினைத்த பெற்றோர், கல்யாணமும் செய்து வைத்தார்கள். திருமண வாழ்க்கைக்கு பின்னரும் அவர் திருந்தவில்லை.

சேமிக்கவில்லை

சேமிக்கவில்லை

மாறாக மனைவி, பிள்ளைகளுக்கு சம்பாதிக்க வேண்டும் என்ற நிலையை கவலையாக நினைத்துக்கொண்டு, அதற்காகவும் குடிக்க ஆரம்பித்தார். மனைவி பிள்ளைகள் வெளியில் சென்றுவிட்டால் கொண்டாட்டம் தான். ஜாலியாக மது அருந்தி,புகைப்பிடித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். அவர் வயிறு கொஞ்சம் கொஞ்சமாக தொப்பை வயிறாக மாறியது. ஒரு கட்டத்தில் மிகப்பெரிய தொப்பையை சுமக்க தொடங்கினார். வேலைக்கு சென்று சம்பாதித்த பணத்தை எல்லாம் குடித்து அழித்தவர், தனக்கு என்று எந்த சேமிப்பையும் சேர்க்கவில்லை. தன் பிள்ளைகளின் எதிர்காலத்தை பற்றியும் யோசிக்கவே இல்லை.

அறிகுறிகள்

அறிகுறிகள்

அன்றாடம் குடிக்க மது கிடைக்கிறதா, ஜாலியாக நண்பர்களுடன் அரட்டை அடித்தோமோ, வீட்டில் வந்து குழந்தைகளை கொஞ்சினோமா என்று சம்பாதித்தவரை வாழ்ந்தார். 35 வயதை கடந்தது. பிள்ளைகள் 8 வயது, 10 வயது என்று இருந்தன. ஒரு நாள் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை பரிசோதித்த போது, கிட்னி பெயிலிர் என்பது தெரியவந்தது . முகம் வீங்கியது. பின்னர் கால்கள் மற்றும் முழு உடலும் வீங்கி இருக்கிறது. சிறுநீரை அடக்க முடியாமல் போயிருக்கிறது, நடக்கும்போது களைப்பு, படுக்கும்போது சோர்வு போன்ற அறிகுறிகள் வந்திருக்கிறது.
எப்படி அவருக்கு கிட்னி பெயிலியர் வந்தது என்று பார்த்தால், அளவுக்கு அதிகமாக மது அருந்தியதும் புகைப்பிடித்ததும் தான் முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. தண்ணியை அதிகம் குடித்தவர், தண்ணீரை அதிகம் குடிக்காததால் கிட்னி பெயிலியர் ஆனது,

அஞ்சினார்

அஞ்சினார்

அவர் உடல்நலம் மோசமாக பாதிக்கப்பட்டு உயிருக்கு போராட தொடங்கினார். அப்போது அவர் வாயில் வந்த வார்த்தை இவை தான். நன்றாக இருந்த காலத்தில் நான் சம்பாதித்த பணத்தை எல்லாம் குடித்தே அழித்துவிட்டேன். இன்று என் பிள்ளைகள் இளம் வயதில் வறுமையில் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்காக நான் இன்னும் கொஞ்ச காலம் வாழ விரும்புகிறேன். ஆனால் வாழ முடியாமல் போய்விடுமோ என்று அஞ்சுகிறேன் என்றார்.

வாழ்க்கை கடினம்

வாழ்க்கை கடினம்

உயிருக்கு போராடிய அவருக்கு, அவரது தாயார் கிட்னி கொடுத்தார். அந்த கிட்னியை வெற்றிகரமாக பொறுத்தினார்கள். அவர் தற்போது உயிருடன் வாழ்கிறார். ஆனால் முன்பு போல் அவரால் கடினமான வேலைகளை செய்ய முடியவில்லை. சரியாக படிக்காமல் போனதால் பெரிய வேலைகளுக்கும் செல்ல முடியவில்லை. ஆனாலும் தன்னால் இயன்ற வேலையை செய்து குடும்பத்திற்கு உதவுகிறார். ஆனால் ரத்த கொதிப்பு உள்பட பல்வேறு உடல் நல பாதிப்பு இருப்பதால் அவருடைய வாழ்க்கை மிக கடினமாக காலகட்டத்திலேயே இருக்கிறது.

உங்களுக்கு மட்டும் சொந்தமல்ல

உங்களுக்கு மட்டும் சொந்தமல்ல

மது அருந்தியதால், புகைப்பிடித்ததால் தற்போது கிட்னி பாதிப்பை சந்தித்து உயிருக்கு போராடும் இவரை போல் பலரை நீங்களும் பார்த்திருப்பீர்கள். இதில் சொல்ல வருவது என்னவென்றால், கிட்னி பாதித்தவர் சொன்னது போல், எனக்கு இப்போது நடுத்தர வயது, இப்போது நான் இறந்து போனால் என் பிள்ளைகள் எதிர்காலமே இருண்டு போகும். அவர்களுக்காகவது இன்னும் சில காலம் நான் வாழ விரும்பகிறேன் என்றார். அப்படி வாழ ஆசைப்படும் போது, வாழ முடியாமல் போய்விடும். எனவே தயவு செய்து மது அருந்தாதீர்கள், புகைப்பிடிக்காதீர்கள். உங்களின் வாழ்நாள் உங்களுக்கு மட்டும் சொந்தமல்ல. உங்களை நம்பி உள்ளவர்களுக்கும் சொந்தமாகும். அன்று நீங்கள் நினைத்தாலும் வாழ முடியாமல் போகும்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+