அடடே.. சபாஷ் போட வைத்த சென்னை போலீஸ்.. பஸ்ஸில் போற மாணவர்களா.. உடனே பாருங்க
சென்னை: சென்னை போலீசாருக்கு பெரும் சவாலான விஷயமாக இருப்பது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் அடவாடி செயல்கள் தான். கெத்துகாட்டுவதாக நினைத்து பேருந்துகளில், புறநகர் ரயில்களில் புட்போர்ட் அடித்தபடி அவர்கள் செய்யும் சேட்டையை எப்படி தடுப்பது என்பது போலீசாருக்கு பெரும் சவாலாக உள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளனர்.
சென்னை போக்குவரத்து போலீசாருக்கும் சரி, சென்னை சட்டம் ஒழுங்கு போலீசாருக்கும் சரி.. சவலான விஷயம் என்றால், மாணவர்களின் அடாவடி செயல்கள் தான். பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் வயசு கோளாறிலும், ஆர்வக்கோளாறிலும், கெத்து காட்டுவதாக நினைத்து பல சேட்டைகளை செய்கிறார்கள்.

குறிப்பாக பேருந்துகளிலும், புறநகர் ரயில்களிலும் அவர்களின் சேட்டை உச்சகட்டமாக இருக்கிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என்பதால் அவர்களின் எதிர்காலம் எந்த வகையிலும் காவல் துறையின் நடவடிக்கையால் பாதிக்கப்படக்கூடாது என்று காவலர்கள் நினைக்கிறார்கள். அதனால் பல நேரங்களில் மிக பொறுமையாக சிக்கலான விஷயங்களை கையாளுகிறார்கள்.
பேருந்துகளில் புட்போர்ட் அடிப்பது, ரயில்களில் தொங்கியபடி தரையை தேய்த்தபடி செல்வது இதெல்லாம் சென்னையில் தினசரி காட்சிகள். பேருந்துகளில் ரூட்டுதல பாணி இன்னமும் முடியாமல் தொடர்கிறது. பேருந்துகளில் இருவேறு கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் தனித்தனி குழுவாக இயங்கி அலப்பறை செய்கிறார்கள். அவர்களின் செயல்கள் பொதுமக்களுக்கும் பல நேரங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

பேருந்துகளில் தாலம் போட்டப்படி, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று மாணவர்கள் வருவார்கள். பிரச்சனை அதில் இல்லை., அவர்கள் உயிருக்கு ஆபத்தான முறையில் பேருந்துகளில் பயணிப்பது தான். அந்த பயணம் இனிமையாகவும், சாகசமாகவும் இருப்பதாக நினைக்கிறார்கள். தங்களை பார்த்து பலர் வாயை பிளக்க வேண்டும் என்ற ஆசையில் அவர்கள் செய்யும் சாகசங்கள் அவர்களின் உயிரையே பறித்துள்ளது.
பேருந்துகளில் இப்படி என்றால், இருசக்கர வாகனங்களில் செல்லும் போது ரேஸ் வைத்து செல்கிறார்கள். எதிலும் ஒரு சாகசம், எதிலும் ஒரு திரில், மாணவிகள் முன் கெத்து காட்டுவதற்காக சில செயல்கள் என மாணவர்களின் பாதையே சாகத்தை நோக்கி இருக்கிறது. இந்த பைக் சாகசங்கள் பலரது உயிரை பறித்துள்ளது. இதனை தடுக்க காவல்துறையினர் பல முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் தங்களது ட்விட்டர் பக்கத்தில், மாணவர் ஒருவர் பாடும் கானா பாடலை வெளியிட்டுள்ளனர்.
ஃபுட் போர்டு கத்தி
— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic) August 10, 2023
அது டேஞ்சரான கத்தி
அப்போ அப்போ தான் தெரியும்
அப்பா கஷ்டம் பத்தி
போலீஸ் சொல்லுற அறிவுரையை கேட்கணும் கேட்கவில்லை என்றால் நம்ம உயிரை ஆம்புலன்ஸ் தான் காக்கணும்.
Do not travel in the footboard.
Travel safe!#ChennaiTraffic #Police #YourSafetyOurPriority pic.twitter.com/4jdrqju14j
அந்த பாடலில் மாணவர் கூறுகையில், பள்ளிக்கூடம் போகனும்னு பஸ்ஸில் ஏறி போறீங்க... புட் போர்டு அடிச்சுக்கிட்டே கீழ விழுந்து வாருறீங்க.. மறந்துட்டு பண்ணுறீங்க, கியாரண்டிஇல்லை லைபுக்கு.. ரோடுன்னு தெரிஞ்சுகிட்டே சாகசத்தை பண்றீங்க.. குடும்பத்தை நினைக்காமல் சாவை தேடி போறீங்க..ஃபுட் போர்டு கத்தி, அது டேஞ்சரான கத்தி, அப்போ அப்போ தான் தெரியும் , அப்பா கஷ்டம் பத்தி
போலீஸ் சொல்லுற அறிவுரையை கேட்கணும் கேட்கவில்லை என்றால் நம்ம உயிரை ஆம்புலன்ஸ் தான் காக்கணும். " என்று பாடல் இருக்கிறது. இந்த பாடல் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் என பலரும் பாராட்டி வருகிறார்கள்.
-
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம்












Click it and Unblock the Notifications