சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடடடடடடா.. கொரோனா லீவு விட்டால்... இப்படியாப்பா அடிச்சுப்பீங்க.. ஒரு "ஹய்யோ ஹய்யோ" வீடியோ!

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் வீடுகளில் சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளதாக கூறி ஒரு ஜாலி வீடியோவை வாட்ஸ்ஆப்பில் பகிர ஆரம்பித்துள்ளனர். இது வெறும் வேடிக்கை வினோத வீடியோவாக வலம் வந்து கொண்டுள்ளது.

Recommended Video

    கொரோனா லீவு விட்டால்... இப்படியாப்பா அடிச்சுப்பீங்க.. ஒரு 'ஹய்யோ ஹய்யோ' - வீடியோ

    குழந்தை வீட்டில் இருந்தாலே அந்த வீடு நந்தவனம் போல் மிகவும் அழகாக இருக்கும். அது எப்போது வரை என்றால் அக்குழந்தை எழுந்து நடக்கும் வரை. எழுந்து நடந்துவிட்டால் போதும் அடுத்து அதிரடி அதகளம்தான்.

    அதிலும் இந்த இரட்டை வாலுங்க இருக்கே.. அடடடடா... மேலே இருக்கும் சாமான் கீழே பறக்கும்.. கீழே உள்ளது எல்லாம் மேலே பறக்கும்.. தூள் கிளப்பும்.. துவம்சம் ஆகி விடும்.. அப்படித்தாங்க பல வீடுங்க இருக்கு.

    அந்த மருந்தை எங்களிடம் கொடுங்கள்.. ஜெர்மனியிடம் பேரம் பேசினாரா டிரம்ப்?.. கொரோனா யுத்தம் தொடங்கியது!அந்த மருந்தை எங்களிடம் கொடுங்கள்.. ஜெர்மனியிடம் பேரம் பேசினாரா டிரம்ப்?.. கொரோனா யுத்தம் தொடங்கியது!

    ரத்த அழுத்தம்

    ரத்த அழுத்தம்

    ஒரு குழந்தை எனில் அது பாட்டுக்கு வீட்டிலேயே விளையாடி கொண்டு வெளியே இருக்கும் குழந்தைகளுடன் சண்டை இழுத்து வருவதும் வழக்கம். இதே வீட்டில் இரு குழந்தைகள் இருந்துவிட்டால் வீடே இரண்டாகிவிடும். ஒன்று மற்றொன்றை அடிக்கும், பதிலுக்கு திருப்பி அடிக்கும். இப்படியே அடித்து அடித்து விளையாடி பெற்றோரின் பிபியை எகிற வைப்பர்.

    செயல்பாடுகள்

    செயல்பாடுகள்

    பள்ளிக்கு அனுப்பும் அந்த அரை வேளையோ, அல்லது 3.30 மணி வரையோ (படிக்கும் வகுப்புகளை பொறுத்து) வீடே சுனாமி வந்து அடங்கின கடல் போல் அமைதியாக இருக்கும். ஸ்கூல் விட்டு வந்துவிட்டால் இவர்கள் வருவது குடியிருப்பில் உள்ள அனைவருக்கும் தெரியும்படியே இவர்களது செயல்பாடுகள் இருக்கும்.

    புது தெம்பு

    புது தெம்பு

    என்னதான் நாம் அடக்கினாலும் சரி அடித்தாலும் சரி கொஞ்சம் நேரம் அழுதுவிட்டு மீண்டும் அதே வேளையில்தான் ஈடுபடுவர். ஒன்று அமைதியாக இருந்தாலும் இன்னொன்று அக்குழந்தையை சீண்டி வம்பு சண்டை இழுக்கும். காரிடாரில் சைக்கிள் ஓட்டுகிறேன் என கூறிவிட்டு ஏதோ பைக் ரேஸ் போல் பறந்து கொண்டிருப்பர். இவர்களை போன்ற சேட்டையான குழந்தைகளை பார்த்துக் கொள்ளவே தனியாக ஆள் வேண்டும், அத்தோடு புது தெம்பும் வேண்டும்.

    மல்யுத்தம்

    மல்யுத்தம்

    சனி, ஞாயிறு விடுமுறைக்கே வீடு இரண்டாகிவிடுகிறது. சரி பள்ளி செல்லும் நேரத்திலாவது அக்கடாவென கிடக்கலாம் என நினைத்தால் இந்த கொரோனா வந்து பெற்றோரின் டென்ஷனை ஏற்றிவிட்டது. தற்போது சமூகவலைதளங்களில் ஒரு வீடியோ வெளியாகி வருகிறது. அதில் இரு சிறுவர்கள் அப்படி சண்டையிட்டு கொள்கிறார்கள். பார்ப்பதற்கு Wrestling எனப்படும் மல்யுத்தம் பார்ப்பது போல் உள்ளது இவர்களது சண்டை.

    பெற்றோர் கோரிக்கை

    பெற்றோர் கோரிக்கை

    என்னா அடி என்னா குத்து, கட்டி புரண்டு செம சண்டை போடுகிறார்கள். இதை பார்க்கும் தாய்மார்கள் நம் வீட்டிலும் நாளை இதே நிலை ஏற்படலாம் என கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் வீடுகளில் சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளதால் தங்கள் உத்தரவை மறுபரிசீலனை செய்ய அரசிடம் பெற்றோர்கள் கோரிக்கையிடும் அளவுக்கு வந்துவிட்டனர். இப்படி ஒரு வீடியோ ஜாலியா வருகிறது. நீங்களும் பார்த்து ரசிங்க..!

    English summary
    A video which goes viral as the two boys quarel each other which may results parents pressure level goes high.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X