போர் வந்தால் சினிமா மாதிரி இருக்காது.. வேலை போகும், பஞ்சம் கூட வரும்.. எக்ஸ்பர்ட் தந்த வார்னிங்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியா பாகிஸ்தான் இடையே போர் வரும் பட்சத்தில் கடுமையான பல விஷயங்கள் நடக்கலாம் என்று விஜய் சன்தோலா என்ற ஐஐஎம் பொருளாதார நிபுணர் எச்சரித்துள்ளார்.

ஐஐஎம் பொருளாதார நிபுணர் விஜய் சன்தோலா விடுத்துள்ள எச்சரிக்கைகள் பின்வருமாறு,

pakistan Jammu Kashmir

போர் நடந்தால் நீங்கள் நினைக்காத மோசமான நிலை ஏற்படும். உங்கள் வாழ்க்கை மாறலாம்.

நீங்கள் மாத - தின வருமானம் வாங்குபவர்களாக இருந்தால் கடுமையாக பாதிக்கப்படலாம். வருமானம் குறைக்கப்படலாம்.

இப்போதைக்கு வேலை மாறும் திட்டத்தில் இருக்க வேண்டாம். வேலையை விட்டு கனவை பின்தொடருகிறேன் என்று செல்ல வேண்டாம்.

கையில் பணமாக வைத்துக்கொள்ளவும். அதாவது வங்கியில் வைப்பதை விட கையில் கொஞ்சம் வைத்திருக்கவும். வங்கிகளுக்கு கூட என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். 2-3 மாதங்களுக்கு சமாளிக்கும் வகையில் கையில் கேஷ் இருக்க வேண்டும்.

லோன் எடுக்க வேண்டாம். ஏனென்றால் பொருளாதாரத்தை சமாளிக்க அரசு இஎம்ஐ களை உயர்த்தலாம். வரலாறு ரீதியாக நிறைய நடந்து உள்ளது. செலவுகளை குறைத்துக்கொள்ளவும்.

இது கண்டிப்பாக பணவீக்கத்தை ஏற்படுத்தும். அதனால் பொருட்கள் விலைவாசி உயரும். இதற்கு தயாராக இருக்கவும்.

வரலாறு ரீதியாக போர் காரணமாக பஞ்சம் ஏற்பட்டு உள்ளது. அதற்கு ஏற்றபடி திட்டங்களை வகுக்கவும்.

போர் அபாயம்

இந்தியா பாகிஸ்தான் இடையே அறிவிக்கப்படாத போர் மூண்டு உள்ளது. வியாழன் இரவு மற்றும் வெள்ளி அதிகாலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. முன்னதாக ஜம்மு விமான நிலையம், சம்பா, ஆர்எஸ் புரா, ஆர்னியா உள்ளிட்ட பகுதிகளை நோக்கி பாகிஸ்தானில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் பாகிஸ்தானில் இருந்து வந்த 8 ஏவுகணைகளை தடுத்து எஸ்400 சுதர்சன் சக்ரா தடுப்பு அமைப்புகள் முறியடித்தது.

பாகிஸ்தானின் 8 ஏவுகணை அடுத்தடுத்து தடுக்கப்பட்டு உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் விமான தளத்தில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது. இதற்கு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்துள்ளது. இதற்காக multi-layered air defence network முறை தடுப்பு நடவடிக்கை பயன்படுத்தப்பட்டு உள்ளது.

இதற்கு இந்தியா கடுமையான பதிலடியை தந்துள்ளது. அதன்படியே பாகிஸ்தானின் இருதயத்தில் அடித்தது இந்தியா. பாகிஸ்தானின் பஞ்சாப்பில் உள்ள லாகூரில் இந்தியா கடுமையான தாக்குதல்களை நடத்தியது. லாகூரில் ஏவுகணை மூலம் இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது. இஸ்லாமாபாத்தில் இந்தியா ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. இது பாகிஸ்தானின் தலைநகர் ஆகும். பாகிஸ்தானின் பஞ்சாப்பில் உள்ள லாகூரில் இந்தியா கடுமையான தாக்குதல்களை நடத்தியது. லாகூரில் ஏவுகணை மூலம் இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது.

நேற்று இந்த தாக்குதல்களில் இந்திய எல்லைக்குள் அதாவது ஜம்மு மற்றும் பஞ்சாப் உள்ளே நுழைய முயன்ற ஒரு AWACS விமானம் காலி செய்யப்பட்டது. பாகிஸ்தானின் 3 விமானங்கள் நேற்று ஏவுகணைகள் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளன . இரண்டு F-16 விமானங்கள் மற்றும் ஒரு JF-17 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் AWACS விமானம் ஒன்றும் காலி செய்யப்பட்டது. இதனால் மிகப்பெரிய அளவில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+