22 பெண்களை மெயிண்டெயின் செய்த பகூலேயன் சிக்கியது எப்படி.. மாவட்டத்துக்கு 1 மனைவியாம்! பெரிய டுவிஸ்ட்
சென்னை: 56 வயது கேரள நபர் ஒருவர் சுமார் 22 பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்துள்ளார்.. அதைவிட முக்கியம் அந்த 22 மனைவிகளையும் மெயின்டெயின் செய்வதற்காக அவர் செய்த காரியம்தான், பலரையும் திகைக்க வைத்துள்ளது.. சினிமாவில் வரும் கதையையே மிஞ்சும் வகையில் அமைந்துள்ள இந்த சம்பவம், அம்மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. யாரிந்த நபர்?
திருவனந்தபுரம் மாவட்டம் ஆற்றிங்கல் பகுதியில் சமீபத்தில் ஒரு முதியவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.. அவரிடம் மர்ம நபர் ஒருவர், 7 சவரன் தங்க சங்கிலியை பறித்துவிட்டார்..

இதனால் அதிர்ச்சி அடைந்த முதியவர், உடனே இது குறித்து ஆற்றிங்கல் காவல் நிலையத்தில் புகார் தந்தார்.. போலீசாரும் இந்த புகாரின் அடிப்படையில், தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.. மேலும் திருடு நடந்த பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னல்களையும் ஆய்வு செய்தனர்..
தங்க நகைகள்
அப்போதுதான் வட்டியூர்க்காவு பகுதியைச் சேர்ந்த 56 வயதான பகூலேயன் என்பவருக்கு இந்த நகை பறிப்பு சம்பவத்தில் தொடர்பிருப்பது உறுதி செய்யப்பட்டது.. போலீசார் தன்னைத் தேடுவதை அறிந்த பகூலேயன் உடனே தலைமறைவானார்.. ஆனாலும் விடாமல் துரத்திய காவல்துறையினர் நெய்யாறு அணைப் பகுதியில் பதுங்கியிருந்த அவரை சுற்றி வளைத்து பிடித்தனர்..
கைது செய்யப்பட்ட பகூலேயனிடம் நடத்தப்பட்ட விசாரணையில்தான் அவரது பகீர் பின்னணி வெளிவந்தது.. அவர் வெறும் திருடன் மட்டுமல்ல, ஒரு தொடர் திருமண மோசடிப் பேர்வழி என்பதும் தெரியவந்தது..
தாஸ், பாபு, சுந்தரன், ராஜன், விஜயன், கல்யாணராமன் என்று புது புது பெயர்களில் அவர் வலம் வந்துள்ளார்.. குறிப்பாக, கணவனை இழந்தவர்கள் மற்றும் விவாகரத்து பெற்ற பெண்களை மட்டுமே தன்னுடைய வலைக்குள் வீழ்த்துவதை அவர் வழக்கமாக கொண்டவராம்..
22 மனைவிகள்
திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை கேரளாவின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 22 பெண்களை அவர் இதுவரை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார்.. 22 மனைவிகளையும் பராமரிப்பதற்காக, அதிகமாக திருட ஆரம்பித்தாராம்.. தான் திருடும் மற்றும் வழிப்பறி செய்யும் நகைகளை இந்த பெண்களுக்குப் பரிசாக அளித்து அவர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளார்..
தனது ஒவ்வொரு மனைவியிடமும் தான் ஒரு அரசு அதிகாரி என்றோ அல்லது பெரிய தொழிலதிபர் என்றோ பொய்யான தகவல்களை சொல்லி நம்ப வைத்துள்ளார்.. ஒரு மனைவியுடன் இருக்கும்போது மற்ற மனைவிகளை பற்றித் தெரியாதவாறு மிகவும் சாதுர்யமாக அவர் கையாண்டு வந்துள்ளார்..
மாவட்டத்துக்கு ஒரு மனைவி
ஒரு மனைவியை பராமரிக்கவே கடினமாக இருக்கும் சூழலில், எதற்காக இத்தனை திருட்டுகள்? என்று போலீசார் கேட்டார்கள்.. அதற்கு பகூலேயன், "மாவட்டத்திற்கு ஒரு மனைவி வேண்டும் என்பது என் ஆசை.. இதை நிறைய பேரிடம் சொல்லி தம்பட்டம் அடித்துக் கொள்வேன்" என்று சொல்லி அதிகாரிகளையே திகைக்க வைத்துவிட்டாராம் பகூலேயன்..
திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களின் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டே இந்த 22 குடும்பங்களையும் அவர் நிர்வகித்து வந்துள்ளார்..
பகூலேயன் ஜெயிலில்
பகூலேயன் மீது கேரளா முழுவதும் சுமார் 50-க்கும் மேற்பட்ட திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன.. குறிப்பாக, பூட்டிய வீடுகளை குறிவைத்துக் கொள்ளையடிப்பதில் இவர் கைதேர்ந்தவராம்..
பலமுறை ஜெயிலுக்கு சென்றிருந்தாலும், வெளியில் வந்தவுடன் மீண்டும் இதே போன்ற குற்றச் செயல்களில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார்.. இப்போது கைது செய்யப்பட்டுள்ள அவர் மீது திருட்டு மற்றும் மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.. ஆற்றிங்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, நீதிபதி நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.. பகூலேயன் இப்போது ஜெயிலில் உள்ளார்.. அப்ப அந்த 22 மனைவிகளும்??
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள்












Click it and Unblock the Notifications