சென்னை எழும்பூரில் பிரபல தியேட்டர் பாத்ரூம், சீட்டை பார்த்து அரண்டு போன பெண்.. எம்எல்ஏ செய்த காரியம்
சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள பிரபல தனியார் திரையரங்கில் நடிகர் விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த திரையரங்கில் உள்ள பாத்ரூம் மிகவும் மோசமாக நாற்றம் அடித்துள்ளது.. சீட்டெல்லாம் மூட்டை பூச்சி இருந்ததாம். இதில் நீங்கள் 3 மணி நேரம் உக்காருவீங்களா என்று படம் பார்க்க வந்த பெண் ஆவேசமாக கேள்வி எழுப்பினார். இதுபற்றி எழும்பூர் எம்எல்ஏவும் போலீசில் புகார் அளித்துள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் தி கோட் திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு வாரமாக பல திரையங்குகளில் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த சில மாதங்களில் விஜய்யின் கோட் திரைப்படத்தைத்தான் குடும்பம் குடும்பமாக மக்கள் தியேட்டரில் போய் படம் பார்த்து வருகிறார்கள். சென்னையில் பலரும் தி கோட் திரைப்படத்தை கடந்த வாரத்தில் பார்த்து ரசித்துள்ளனர்.

சென்னையின் எல்லா திரையரங்கிலும் தி கோட் திரைப்படம் வெளியாகி உள்ளது.. சென்னையை பொறுத்தவரை பெரும்பாலான திரையரங்குகள் அதிநவீன தரத்திற்கு மாறிவிட்டன. திரையரங்குகள் எல்லாமே நவீன டிஜிட்டல் வசதி மற்றும் ஏசி வசதி, உலகத்தரமான சீட் வசதிகளுடன் மாறிவிட்டன. அதேநேரம் சில திரையரங்குகள் இன்னும் மாறவில்லை.. அந்த வகையில் சென்னை எழும்பூரில் உள்ள பிரபல தனியார் திரையங்கு ஒன்று சுத்தம் இல்லாத காரணத்தால் அவப்பெயரை சந்தித்துள்ளது. அங்கு தி கோட் திரைப்படத்தை காண வந்த பெண் ஒருவர், தியேட்டர் மேலாளரிடம் வாக்குவாதம் செய்த காட்சி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
அதில், அந்த பெண் கூறுகையில். இந்த தியேட்டரில் விஜய்யின் தி கோட் திரைப்படத்தை காண 225 ரூபாய் கட்டணமாக வாங்குகிறார்கள். ஆனால் நான் 225 ரூபாய் கட்டணம் செலுத்தி போய், உள்ளே அமர சென்றால், சீட்டுகள் எல்லாம் உடைந்து சேதமாக உள்ளது. தியேட்டர்களில் உள்ள கழிவறை மிகவும் அசுத்தமாக உள்ளது. மோசமான நாற்றம் அடிக்கிறது. தியேட்டரை பராமரிப்பவர்கள் அதனை சுத்தம் கூட செய்யவில்லை. அதனை புதுப்பிக்கவே இல்லை. சீட்டுகளில் எல்லாம் மூட்டை பூச்சி இருக்கிறது. இவர்களை போன்ற ஆட்களையெல்லாம் நுகர்வோர் நீதிமன்றத்திற்கு இழுக்க வேண்டும். ஒரு ஷோ முடிந்த உடன் பெருக்காமல் ஆட்டு மந்தை போல் கூட்டமாக மக்களை தியேட்டருக்குள் அனுப்புகிறார்கள்.
கழிவறையில் சிறுநீர் நாற்றம் அடிக்கிறது., பாக்கு போட்டு எச்சில் துப்பி இருக்கிறார்கள். குழந்தைகள் இதை கண்டு அருவருக்கும் உணர்வு ஏற்படுகிறது. எல்லாருமே இங்கு காசு கொடுத்துதான் படம் பார்க்க வருகிறார்கள். ஒரு தியேட்டர் எப்படி இருக்க வேண்டும் என்பதுக்கு உதாரணமாக பல தியேட்டர் இருக்கிறது. ஆனால் எழும்பூர் தியேட்டர் சுத்தம் இல்லாமல் இருக்கிறது.. ஏசி சுத்தமாக இல்லை. தியேட்டர் ஓனரை கூப்பிடுங்கள் என்று கூறிளேன். ஆனால் அவர்கள் என்னை தயவு செய்து பணத்தை வாங்கிவிட்டு செல்லுங்கள் என கெஞ்சுகிறார்கள்" என்று ஆவேசமாக கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக எழும்பூர் எம்எல்ஏ பரந்தாமன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
-
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications