நள்ளிரவில் பரபரப்பு! திடீரென சரிந்த பாஜக கொடிக்கம்பம்.. பெண்ணுக்கு முகத்தில் பலத்த காயம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைநகர் சென்னையில் பாஜக கொடிக் கம்பம் சாய்ந்து ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் பலத்த காயமடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நமது நாட்டில் இன்னும் சில வாரங்களில் லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் தொடர்பான அறிவிப்பைத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வெளியிட்டார். மொத்தம் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

A woman has been seriously injured as BJP flagpole fell in chennai korukkupet

வழக்கமாகத் தமிழ்நாட்டில் 2ஆம் கட்டமாகவே லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், இந்த முறை முதற்கட்ட தேர்தலிலேயே நடைபெறுகிறது. தமிழகத்தில் தேர்தல் நடந்து சுமார் 1.5 மாதங்களுக்கு பிறகே தேர்தல் முடிவுகள் தெரிய வரும்.

கடைசிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி நடக்கும் நிலையில், ஜூன் 4ஆம் தேதி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன. மேலும், தமிழகத்தில் சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள்,

கட்சி கூட்டங்களை நடத்துவது, வீடு வீட்டுக்குச் சென்று பிரச்சாரம் செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இதற்கிடையே நேற்று சனிக்கிழமை சென்னையில் பாஜக கொடிக் கம்பம் சாய்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள பாஜக கொடிக் கம்பம் சாய்ந்து இந்த விபத்து நடந்துள்ளது.

இந்த விபத்தில் பெண் ஒருவரது முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து படுகாயமடைந்த அந்த அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். காயமடைந்த அந்த பெண் விஜயா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

இரவு நேரத்தில் திடீரென கொடிக்கம்பம் சாய்ந்து விபத்து ஏற்பட்ட இந்த விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+