தேர்தல் வருதுல்ல..ஆதார் கார்டுக்கு ரூ.50,000 கடன்! மத்திய அரசின் பலே திட்டம்..வெளியான குஷி அறிவிப்பு
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், ஆதார் கார்டை வைத்து பொதுமக்களுக்கு ரூ.50,000 ரூபாயை கடனாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக ஒரு செய்தி பகிரப்பட்டு வருகிறது. . இது எந்த திட்டம்? யார் யாருக்கு கிடைக்கும்? உண்மையில் அந்த் பணத்தை எப்படி பெறலாம்? என்பதற்கான முழு விவரங்களை பார்க்கலாம்..
சிறு தொழில் முனைவோர், பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் உள்ளிட்டோரது பொருளாதார முன்னேற்றத்திற்காக மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமான ஒன்றுதான் PM SVANidhi (Pradhan Mantri Street Vendor's AtmaNirbhar Nidhi) திட்டம்.
கொரோனா காலத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் தெருவோர வியாபாரிகள். தினசரி வருமானத்தில் வாழ்க்கை நடத்தும் இவர்களுக்கு வணிகத்தை மீண்டும் தொடங்க உதவுவதற்காக 2020ஆம் ஆண்டு இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆதார் கடன் திட்டம்
இந்த திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள், சிறு கடை உரிமையாளர்கள், முடிதிருத்தும் கடை நடத்துபவர்கள், சலவை தொழிலாளர்கள் போன்ற நகர்ப்புற சிறு வியாபாரிகள் குறைந்த வட்டியில் கடன் பெறலாம். அதிகபட்சமாக ரூ.50,000 வரை கடன் வழங்கப்படும். ஆனால் இந்த தொகை ஒரே முறையாக வழங்கப்படாது. முதலில் ரூ.10,000 முதல் தவணையாக வழங்கப்படும். இந்த தொகையை ஒரு ஆண்டுக்குள் முறையாக திருப்பிச் செலுத்தினால், இரண்டாம் கட்டமாக ரூ.20,000 பெறலாம்.
பிஎம் ஸ்வநிதி திட்டம்
இதையும் சரியான காலக்கெடுவில் கட்டி முடித்தால், மூன்றாம் கட்டமாக ரூ.50,000 வரை கடன் பெறும் வாய்ப்பு கிடைக்கும். அதாவது, நேரத்திற்கு கட்டுபவர்கள் மட்டுமே அதிக தொகைக்கு தகுதி பெறுவார்கள். இந்த திட்டத்தின் சிறப்பம்சம் ஆண்டுக்கு 7% வரை வட்டி மானியம் வழங்கப்படுவதாகும். பயனாளி நேரத்திற்கு EMI செலுத்தினால், அந்த வட்டி மானியம் அவரின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். மேலும், UPI மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்தால் மாதத்திற்கு ரூ.100 வரை, ஆண்டுக்கு ரூ.1,200 வரை கேஷ்பேக் சலுகையும் கிடைக்கும். சிறு வியாபாரிகளை டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு ஊக்குவிப்பதே இதன் நோக்கம்.
50000 ரூபாய் கடன்
இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன்களுக்கு எந்த பிணையும் (Collateral) தேவையில்லை. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், பிராந்திய கிராம வங்கிகள் மற்றும் சில நிதி நிறுவனங்கள் மூலம் இந்த கடன் வழங்கப்படுகிறது. வருங்காலத்தில் UPI இணைக்கப்பட்ட சிறப்பு கிரெடிட் கார்டுகளும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெருவோர வியாபாரிகள்
இந்த கடனை பெற விரும்புபவர்கள் ஆதார் அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அதோடு வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் அல்லது பிற அரசு வழங்கிய அடையாள ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பில் தெருவோர வியாபாரியாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதும் முக்கிய நிபந்தனையாகும். ஆதார் கார்டு இருந்தாலே தானாக ரூ.50,000 கிடைக்கும் என்பது தவறான புரிதல். தகுதி மற்றும் விதிமுறைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே PM SVANidhi திட்டத்தின் கீழ் இந்த கடன் பெற முடியும். சிறு வியாபாரிகளுக்கு மீண்டும் நிலைநிறுத்த உதவும் முக்கிய திட்டமாக இது பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications