ஆதார் பேமெண்ட் அவசியம்.. "இந்த" பணிகளை செய்பவர்களுக்கு இமாலய செக்.. மத்திய அரசு அறிவிப்பு!
சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு ஆதார் அடிப்படையிலான கட்டண முறை (ABPS) மூலம் கட்டாயப் பணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை ஆகஸ்ட் 31 வரை மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் நீட்டித்துள்ளது.
மத்திய அமைச்சகம் இதை சமூக ஊடக தளங்களில் அறிவித்து உள்ளது. ஆதார் தரவு மற்றும் பயனாளிகளின் ஜாப் கார்டு விவரங்களில் உள்ள வேறுபாடுகளை சரி செய்ய சிறிது காலம் எடுக்கும் என்று மாநில அரசுகள் தொடர்ந்து புகார் தெரிவித்ததால், அமைச்சகம் காலக்கெடுவை நீட்டிப்பது இது நான்காவது முறையாகும்.
100 நாள் வேலை திட்டத்திற்கு ஆதார் அடிப்படையிலான கட்டண முறையை கொண்டு வருவதில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது. இதற்கு பின் முக்கியமான சில திட்டங்களை வகுத்து இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

100 நாள் வேலை திட்டம் நாடு முழுக்க கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களில் இதற்கு ஒதுக்கப்படும் நிதி அளவும் பெரிய அளவில் சரிவை சந்தித்து உள்ளது. 100 நாள் வேலை திட்டம் ஒரு காலத்தில் இந்தியாவை மிகப்பெரிய பொருளாதார சரிவில் இருந்து மீட்டது. மக்கள் கையில் பணம் புரண்டதன் காராணமாக இந்தியாவின் பொருளாதார சரிவு பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டது.
ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த 100 நாள் வேலை திட்டம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. பல நாட்கள் வேலை இருப்பது இல்லை. அதற்கும் முறையான சம்பளம் இல்லை, போதிய நிதி ஒதுக்கீடு இல்லை என்று மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில்தான் ஆதார் கார்டு மூலம் மட்டுமே சம்பளம் கொடுக்க வேண்டும் என்ற முறையை 100 நாள் வேலை திட்டத்தில் மத்திய அரசு புகுத்த உள்ளது. அதன்படி ஒருவர் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வருமானம் பெறுகிறார் என்றால், அவர் ஆதார் அடிப்படையிலான பேமெண்ட் முறை ஒன்றின் மூலம் மட்டுமே வருமானம் பெற முடியும்.
அதாவது யுபிஐயோ அல்லது வங்கி வழியாகவோ மட்டுமே பெற முடியும். இதில் எல்லாம் கணக்கு தொடங்க ஆதார் அவசியம். இதன் மூலம் 100 நாள் வேலை திட்டம் மூலம் வருமானம் பெறும் நபர்கள் கண்காணிக்கப்படுவார்கள். தீவிரவாதிகள், வெளிநாட்டினர் இந்த திட்டம் மூலம் வருமானம் பெறக்கூடாது என்பதற்காக இந்த முறை கொண்டு வரப்பட்டு உள்ளது.
ஆனால் தற்போது 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் நபர்களிடம் 80 சதவிகிதம் பேரிடம் மட்டுமே ஆதார் அடிப்படையிலான பேமெண்ட் சிஸ்டம் இருக்கிறது. அதனால் மீதம் உள்ள நபர்கள் வருமானம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
இந்த முறை மூலம் ஆதார் கார்டில் லிங்க் செய்யப்பட்ட வங்கி கணக்கிற்கு வருமானம் செலுத்தப்படும். ஆதார் கார்டுடன் கடைசியாக லிங்க் செய்யப்பட்ட கணக்கு எதுவோ அதற்கு வருமானம் செலுத்தப்படும். அதோடு இந்த வங்கி கணக்கு National Payments Corporation of India உடனும் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.
இதனால் கிராமத்தில் இருக்கும் பலரும் வருமானம் பெறுவது சிக்கல் ஆகி உள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் வருமானம் பெறும் படிப்பறிவு அற்ற பலர் வருமானம் பெறுவது இந்த புதிய முறை மூலம் சிக்கல் ஆகி உள்ளது. 100 நாள் வேலை திட்டத்திற்கு ஆதார் அடிப்படையிலான கட்டண முறையை கொண்டு வருவதில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது.

பிப்ரவரி மாதமே இதற்கான காலக்கெடு முடிய வேண்டிய நிலையில், ஏப்ரல் வரை நீட்டிக்கப்பட்டு தற்போது ஆகஸ்ட் 31 வரை மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆகஸ்ட் 31 க்கு பின் மேலும் இந்த திட்டம் நீட்டிக்கப்பட வாய்ப்பே இல்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. செப்டம்பர் 1ம் தேதி கண்டிப்பாக இந்த திட்டம் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
ஆதார் கார்டு தற்போது நாட்டில் முக்கியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. பல சேவைகளுக்கு இந்தியாவில் ஆதார் கார்ட் முக்கியம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பல துறைகளில் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டியதும் அவசியம் ஆகிவிட்டது.மத்திய அரசு சேவைகள், மாநில அரசு சேவைகளை பெற ஆதார் கார்டு முக்கியம் ஆகி உள்ளது. சமீபத்தில் கூட நாடு முழுக்க பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. தற்போது இதற்கான அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது
இந்த நிலையில்தான் 100 நாள் வேலை திட்டத்திற்கு ஆதார் அடிப்படையிலான கட்டண முறையை கொண்டு வருவதில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications