ஆதார் கார்ட் அப்டேட்.. செப்டம்பர் 30 வரை கால அவகாசம்.. மிஸ் பண்ணிடாதீங்க.. முமு விபரம்
சென்னை: ஆதார் கார்டினை அப்டேட் செய்வதற்கு செப்டம்பர் 14ஆம் தேதி வரை மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது செப்டம்பர் 30 வரை கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்ட் மிக முக்கிய ஆவணமாக இருந்து வருகிறது. மேலும், மோசடிகளில் இருந்து தப்பிப்பதற்கு கட்டாயமாக பொதுமக்கள் அவ்வப்போது ஆதார் கார்டினை அப்டேட் செய்திருக்க வேண்டும்.

குறைந்தது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது குடிமக்கள் புகைப்படம், முகவரி, மொபைல் எண் ஆகியவற்றை அப்டேட் செய்யும்படி அறிவுறுத்தப்படுகிறது. அதன்படி, ஆதார் கார்டினை புதுப்பிப்பதற்கு கடந்த ஜூன் 11ம் தேதி வரையிலும் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
ஆனால், பலரும் தற்போது வரையிலும் ஆதாரினை அப்டேட் செய்யாமல் பயன்படுத்தி வரும் நிலையில் செப்டம்பர் 14ஆம் தேதி வரையிலும் கால அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த கால அவகாசம் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆதார் கார்டினை எப்படி அப்டேட் செய்வது என்பதை விபரமாக பார்க்கலாம்:
முதலில், UIDAIன் https://myaadhaar.uidai.gov.in/என்கிற இணையதள பக்கத்திற்கு சென்று மை ஆதார் என்கிற பக்கத்தை தேர்வு செய்யவும். பின்னர், உங்கள் ஆதாரை புதுப்பிக்கவும் என்பதை தேர்ந்தெடுக்கவும்.
இதன் பின்னர், உங்களது மொபைல் எண்ணிற்கு வந்துள்ள ஓடிபி எண்ணை பதிவு செய்யவும். பின்னர், புதுப்பிப்பு புள்ளி விவரங்கள் தரவு என்பதை கிளிக் செய்து தேவையான மாற்றத்தை செய்துகொள்ளலாம். இதன் பின்னர், URN எண்ணை பயன்படுத்தி ஆதார் அப்டேட்டின் நிலையை அறிந்துகொள்ளலாம்.
ஆதார் கார்டில் புதிய போட்டோ, முகவரி மாற்றம், மொபைல் எண் மாற்றம் போன்ற அப்டேட்களை செய்ய நினைப்பவர்கள் தற்போது வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை பயன்படுத்திக்கொள்வது நல்லது.
-
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம் -
"AI தயாரித்த ரிப்போர்ட் போல உள்ளது.." கீழடி அறிக்கையை திருத்த சொன்ன மத்திய அரசுக்கு அமர்நாத் பதிலடி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications