ஆதார் கார்டு.. மறுபடியும் சூப்பர் சான்ஸ்..புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டையை எப்படி டவுன்லோடு செய்வது?
சென்னை: ஆதார் கார்டு உங்ககிட்ட இருக்கா? புதுப்பித்து விட்டீர்களா? எப்படி புதுப்பிக்க வேண்டும் தெரியுமா? புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டையை எப்படி டவுன்லோடு செய்யவேண்டும் தெரியுமா?
நம் நாட்டிலுள்ள அனைவருக்குமே ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.. ஆதார் இல்லாமல் எதுவுமே இல்லை என்று இப்போது ஆகிவிட்டது. ஆதார் கார்டு பல்வேறு மோசடிகளைக் கண்காணிக்கவும் அதைத் தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய பலன்களை, இன்னொருவர் பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்கும், மோசடிகளில் சிக்காமல் இருக்கவும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது.

புதுப்பிப்பு: ரேஷன் கடைகளில் குடும்ப உறுப்பினர்களின் கை ரேகை இருந்தால் மட்டுமே ரேஷன் உதவிகளைப் பெறமுடியும். இதில் ஆதார் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இந்நிலையில், ஆதார் எண்களைக் கொண்ட அனைத்து நபர்களும், பதிவுசெய்த நாளிலிருந்து 10 வருடங்களுக்கு ஒரு முறையாவது ஆதாரில் உள்ள ஆதார் ஆவணங்களை புதுப்பிக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறார்கள்.. அதனால்தான், கால அவகாசம் டிசம்பர் 14ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஆதார் கார்டை எப்படி புதுப்பிக்க வேண்டும் தெரியுமா?
- https://myaadhaar.uidai.gov.in/-ல் UIDAI-ன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு செல்ல வேண்டும்.
- "உங்கள் ஆதாரை புதுப்பிக்கவும்" என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட செல்போன் நம்பருக்கு ஓடிபி நம்பர் வரும்..
- அந்த ஓடிபி நம்பரை பதிவு செய்தவுடன் "புதுப்பிப்பு புள்ளி விவரங்கள் தரவு" என்கிற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
- இப்போது மாற்றங்களை செய்ய "முகவரி" விருப்பத்தை பயன்படுத்தவேண்டும். புதிய முகவரிக்கான தகவலையும் பதிவிட வேண்டும். அது இப்போது உங்கள் ஆதார் அட்டையில் தோன்றும்.
- கட்டணப் பக்கத்தில் தேவையான கட்டணத்தை செலுத்த வேண்டும். - உங்களுக்கு விருப்பப்பட்ட தகவலை அப்டேட் செய்த பிறகு, SAVE செய்து பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும்.
-பிறகு URN எண்ணை பயன்படுத்தி அப்டேட் செய்யப்பட்ட விவரங்களின் புதுப்பிப்பு நிலையை கண்காணித்துக்கொள்ளலாம்.
டபுன்லோடு: புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்ய கீழே குறிப்பிடப்பட்டுள்ள படிகளைப் பின்பற்ற வேண்டும்:
- ஆதார் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை https://uidai.gov.in/ -ல் பார்வையிட வேண்டும்
- ' எனது ஆதார் ' பகுதிக்கு செல்ல வேண்டும் -
- ' ஆதாரைப் பதிவிறக்கு ' விருப்பத்தைக் கிளிக் செய்யவும் அல்லது இந்த இணைப்பை நேரடியாகப் பார்வையிடவும் https://eaadhaar.uidai.gov.in/
- 'ஆதாரைப் பதிவிறக்கு ' என்பதைக் கிளிக் செய்யவும்
- அடுத்த பக்கத்தில், உங்கள் ஆதார் எண், பதிவு ஐடி அல்லது விர்ச்சுவல் ஐடியை உள்ளிடவும்
- கேப்ட்சாவை உள்ளிட்டு 'செண்ட் OTP' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்
- உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP ஐ உள்ளிட்டு, உங்களுக்கு முகமூடி செய்யப்பட்ட ஆதார் அட்டை வேண்டுமானால் எனது தேர்வுப்பெட்டியில் டிக் செய்ய வேண்டும்
- இப்போது, உங்கள் இ-ஆதார் கார்டின் PDFஐப் பதிவிறக்க, ' சரிபார்த்து பதிவிறக்கு' என்பதை கிளிக் செய்ய வேண்டும்
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications